ப்ளட் சிம்புள்[1984][18+] BLOOD SIMPLE

கோயன் பிரதர்ஸ் பரீட்சார்த்தமான பல முயற்சிகளுக்கு பெயர் போனவர்கள், இவர்களின் உலகம் தனி உலகம்,எக்காரணம் கொண்டும் இவர்கள் கமர்ஷியல் சினிமாவுக்காக தங்களை சமாதானம் செய்து கொண்டதில்லை.அப்படி ஒரு முதல் பரீட்சார்த்தமான முயற்சி தான் ப்ளட் சிம்பிள்.

ப்ளட் சிம்பிள் 1984ஆம் ஆண்டு கோயன் பிரதர்ஸ் கதை, திரைக்கதை தயாரிப்பு ,இயக்கத்தில் வந்த நியோ நாய்ர் த்ரில்லர் வகைப்படம், இது அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டியூட்டின் ஆகச்சிறந்த 100 த்ரில்லர் படங்களில் 98 ஆம் இடத்தில் உள்ளது. மேலும் கோயன் சகோதரர்களின் முதல் படம், இயக்குனர் பார்ரி சோனன் ஃபீல்டுக்கும் ஒளிப்பதிவாளராக முதல் படம், அவர் பின்னாளில் இயக்கிய மென் இன் ப்ளாக், வைல்ட் வைட் வெஸ்ட் போன்றவை பற்றி நீங்கள் அறிவீர்கள். கார்ட்டர் பர்வெல்லின் மிரட்டல் இசை சொல்லவே வேண்டாம். கோயன் பிரதஸுடன் இணைந்து இவர் 13 படங்கள் செய்துள்ளாராம்.

ப்போதும் முதல் படத்தை கொடுக்கும் இயக்குனர்கள் தங்கள் முழுத்திறமையையும் கொட்டி படமாக்குவர். அது சில சமயம் எடுபடும், பலசமயம் எடுபடாது,அப்படி அதிகம் பேர் பெரிய திரையில் கண்டுகொள்ளாத அரிய படம், இதுவும் டிவிடியில் எண்ணிலடங்கா திரை ரசிகர்கள் கண்டுகளித்த ஒரு படைப்பே, இதில் பயன்படுத்திய பல காமிரா யுத்திகள் நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென்னுக்கு சற்றும் குறைந்ததல்ல, நறுக்கு தெரிக்கும் வசனங்கள், மிரட்டும் ,படபடப்பு கூட்டும் காட்சியமைப்புகள், மெதுவாய் நகர்ந்தாலும் எதிர்பார்ப்பை தூண்டும் திருப்பங்கள், என ஒரு பெர்ஃபெக்ட் த்ரில்லர் எனலாம்.

தில் இவர்கள் வில்லனை சித்தரித்திருந்த விதம்!!!இவர்களின் படங்களில் வரும் வில்லன்கள் பயங்கர தோற்றத்துடன் இருக்கமாட்டார்கள்.நாம் அன்றாடம் பேசும் பழகும் சாமான்ய மனிதர்களை போலத் தான்  இருப்பர். ஆனால் விளைவு? இவர்களின் படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரங்களை வாழ்நாளில் ஒருவர் சந்திக்காமல் இருப்பதே நல்லது என்பேன்.



கோயன் பிரதர்ஸ் எப்போதும் இயக்குனர் ஸ்டான்லி க்யூப்ரிக்கின் படைப்புகளை சிலாகிப்பார்கள், இவர்களது படைப்புகளிலும் அவை நடிகர்களின் ஐ லெவல் க்ளோசப் ஷாட் காட்சிகளாக வெளிப்பட்டிருக்கும். இப்படத்திலும் வாஷ்பேசின் குழாயிலிருந்து நீர்த்துளி விழுவதைக் கூட வித்தியாசமாய் எடுத்திருப்பார்கள். இவர்களின் படத்தை கவனித்து பார்த்தால் 10 பதிவு எழுத மேட்டர் இருக்கும். எப்போதும் ஒவ்வொரு விஷயத்தையும் டீட்டெய்லாக சிந்திப்பவர்கள். சஸ்பென்ஸ் த்ரில்லர் விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும்  இப்படம்.

============000============

பெரும்பாலும் கோயன் பிரதர்ஸின் படங்கள் ஒரு வித அங்கலாய்பான நேரேஷனுடன் துவங்கும்.அப்படி இப்படத்தில் லாரன் விஸ்ஸர் என்னும் ப்ரைவேட் டிடெக்டிவ் பேசும்  முதல் வசனம்.

The world is full of complainers. But the fact is, nothing comes with a guarantee. I don't care if you're the Pope of Rome, President of the United States, or even Man of the Year--something can always go wrong. And go ahead, complain, tell your problems to your neighbor, ask for help--watch him fly. Now in Russia, they got it mapped out so that everyone pulls for everyone else-- that's the theory, anyway. But what I know about is Texas...And down here... you're on your own.......
============000============
படத்தின் கதை:-
டெக்ஸாசின் சிற்றூரில்,மனைவி மீது சந்தேகத்தின் உச்சத்திலிருக்கும் பார் ஓனர் கணவன் மார்ட்டி (டான் ஹெடாயா). அவனிடம் அனுதினமும் சித்திரவதைக்கு ஆளாகும் அழகிய மனைவி அப்பி (ஃப்ரான்கஸ் மெக்டார்மண்ட்-ஜோயல் கோயனின் மனைவி)   , கணவன் பாரில் வேலை செய்யும் பார் மேனேஜர் ரே (ஜான் கெட்ஸ்)உடன்  கள்ளக்காதல் வைத்துக் கொள்கிறாள்.

ந்தேக புத்தி கணவன் மார்ட்டி  வயதான ப்ரைவேட் டிடெக்டிவ் லாரன் விஸ்ஸர் (M.எம்மெட் வால்ஷ்) கொண்டு இருவரையும் துப்பறிகிறான். இது தெரியாமல் அப்பியும், ரேயும் ஊரை விட்டு ஓடி ஒரு மோட்டலில் தங்குகின்றனர். அந்த டிடெக்டிவ் இவர்கள் படுக்கையில் உல்லாசமாயிருப்பதை புகைப்படங்கள் எடுத்து மார்டியிடம் காட்டுகிறான், கொதித்த கணவன் விடியலில் மோட்டலுக்கு போன் செய்தவன் .

’’லவ்வர் பாய்’’ . என்ன சாந்தி முஹூர்த்தம் நல்லா நடந்துச்சா? எனக்கு அவளுக்கு கள்ளக்காதலன் இருப்பான என தெரியும், ஆனால் நீ என தெரியாது. உனக்கு அவள் தன் சோக கதைகளை கூறி வலையில் வீழ்த்தியிருப்பாளே?, ஆனால் அவளுக்கு உன்னைப்போல் எத்தனையோ பாய்ஃப்ரெண்ட்ஸ், உன்னையும் ஒருநாள் கழற்றி விட்டுவிடுவாள், அது அவள் இயல்பு . எப்போதும் என் பார் பக்கம் வராதே!! நான் சுட்டுவிடுவேன் என மிரட்டி போனை வைக்கிறான் .

ரேவுக்கு ஊரை விட்டு வெளியேற பணம் தேவைப்படுகிறது, மோட்டலில் தங்குவது ஆபத்தானது என தெரிந்து கொண்டவன் தன் வீட்டுக்கே அப்பியை கூட்டிப்போய் குடும்பம் நடத்த ஆரம்பிக்கிறான்.அங்கும் அடிக்கடி போன் செய்த மார்ட்டி அப்பி போன் எடுத்தாலும் ரே போனை எடுத்தாலும் பேசாமல் மவுனம் சாதிக்கிறான். ரேவுக்கு தன் காதலி மேல் சந்தேகம் வருகிறது, இவளுக்கு தன்னை தவிர வேறொரு காதலன் இருக்கிறான் என உறுதியாக எண்ணுகிறான்.அப்பியோ ரேவுக்கு தன்னை தவிற இன்னொரு இளம் காதலி இருப்பாள் போலும்,என குழம்புகிறாள்.

தனால் கணவனை வெறுக்கிறாய் என  அப்பி யிடம் இவன் கேட்டதற்கு, அவன் ஒரு குதப்புணர்ச்சி விரும்பி, நான் ஒரு முறை நீ ஏன் இப்படி ஆனாய் ? என கேட்டதற்கு , என்னை மனநல மருத்துவரிடம் கூட்டிப் போனான், மருத்துவர் எனக்கு ஒன்றுமில்லை என சொன்னதற்கு மருத்துவனை மாற்றிவிட்டான். என்கிறாள். ரே ஹுஹூம் என்று இதை அலட்சியமாக கேட்கிறான்.


ப்போது அப்பிக்கு பாதுகாப்புக்காக துப்பாக்கி தேவைப்பட, முன்பு கணவன் மார்ட்டி தனக்கு பரிசளித்த இத்தாலியன் லேடீஸ் பிஸ்டலை  மார்ட்டியின் வீட்டுக்குள் இருவருமாக நுழைந்து எடுத்துக்கொண்டு வருகின்றனர். அப்பி பிஸ்டலை தன் கைப்பையில் வைத்துக்கொள்கிறாள்.

இப்போது ரே , மார்ட்டியை சந்தித்து தன் சென்ற வார சம்பளத்தை வாங்க போகிறான். அங்கே மார்ட்டி இவனை கடுமையாக எச்சரிக்கிறான். பணம் கொடுக்க முடியாது என்கிறான். நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என பார்க்கிறேன் என்கிறான்.


மார்ட்டி துப்பாக்கியை தன் அறையில் தேடியவன் கோபமாகி,இவர்களின் வீட்டுக்குள் விடியலில் நுழைகிறான். அங்கே வந்த அப்பி செல்ல நாயைக் கண்டு அதை கொஞ்ச,பின்னால் இருந்து இவன் இவளை கழுத்தை நெரித்து கொல்ல எத்தனிக்கிறான், சுதாரித்த அப்பி லாவகமாக, மார்ட்டியை விதைக்கொட்டையில் உதைத்தவள், அவன் துடிக்கையிலேயே இவனின் ஆட்காட்டி விரலையும் பலமாக பிடித்து திருப்பி ஒடித்தும்  விடுகிறாள், அங்கே துப்பாக்கியோடு வந்த ரே இவனை துரத்த கறுவிக்கொண்டே காரை கிளப்புகிறான் ,மார்ட்டியின் செல்ல அல்சேஷன் நாயும் காருக்குள் லாவகமாக பாய்கிறது.(அருமையான காட்சியது)

டுவேகத்தில் காரை விரட்டியவன் எதிர்திசையில் காரை செலுத்த, அது ஒரு முட்டு சந்து, போன வேகத்தில் காரை திருப்பிக்கொண்டு வந்து இருவரையும் மீண்டும் திட்டி விட்டு அகல்கிறான். இப்போது முறிந்த விரலுக்கு ஸ்பெஷல்  ஸ்டீல் ப்ரேஸிங் போட்டுக்கொண்டு திரியும் இவனை. எல்லோரும் கேவலமாக பார்க்கின்றனர். ஒரு இளைஞன் இவனைப்பார்த்து Hey mister, how'd you break your pussyfinger? எனக்கேட்கிறான்.அமெரிக்காவில்  ஆட்காட்டி விரலை ஒடித்துக் கொண்டால் மகா கேவலம் போலும்.


வமானத்தாலும்,பொறாமையாலும் துடித்தவன். டிடெக்டிவ் லாரன் விஸ்ஸரை அணுக, அவர் அடடா!!! உன்னால் இன்னும் ஒரு மாதத்துக்கு  மலம் கூட துடைக்க முடியாதா? என லொல்லு செய்கிறார். இவன் ஆத்திரத்தின் உச்சத்தில் 10,000 டாலர் தருகிறேன்,அவர்களின் பிணம் கூட கிடைக்க கூடாது, எனக்கு வேலையை முடித்த பின்னர் ஆதாரத்தை காட்டு ,பணத்தை வாங்கு,நடையை கட்டு என்கிறான். அலிபி உருவாக்குவதற்கு ஏதுவாக மீன்பிடிக்க செல்வதாக எல்லோரிடமும் சொல்லிவிட்டு ஒரு வாரம் ஃபிஷ்ஷிங் கேம்ப் போகிறான்.
  1. டிடெக்டிவ் லாரன் விஸ்ஸர் கள்ளக் காதலர்களை கொன்றாரா?
  2. இவரிடம் 10,000டாலர் பணம் வாங்கினாரா?
  3. வாடகை கொலைகாரனை நியமித்துவிட்டு  மார்ட்டியால் நிம்மதியாய் இருக்க முடிந்ததா?
னிமேல் தான் படத்தில் அருமையான புதிர்களும் திருப்பங்களும் வரப்போகின்றன, அதை நான் விளக்குவதை விட நீங்களே
  டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
ஒவ்வொரு காட்சியும் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கும் என்பதில் ஐயமே இல்லை. ஒரு சோற்று பதமாக இந்த கிளை மாக்ஸ் காட்சியை சொல்லுவேன். அது படமாக்கப்பட்ட விதத்தையும் டார்க் ஹ்யூமரை என்ன அழகாக ஒவ்வொரு காட்சியிலும் இவர்கள் புதைத்து வைக்திருக்கிறார்கள் என்றும் பாருங்கள்.
============000============



============000============

உலக சினிமாக்களுக்கு சப்டைட்டில் சேர்த்து பார்ப்பது எப்படி?

ண்பர்களுக்கு ஆங்கிலம் மற்றும் ஜெர்மனி, ஃப்ரெஞ்சு ,ஸ்பானிஷ் ஹிந்தி சப்டைட்டில்களை நான் பார்க்கும் உலக திரைபடங்களுடன் எப்படி சேர்த்து பார்க்கிறேன் , என இந்த பதிவில் சொல்லலாம் என நினைக்கிறேன். சில நண்பர்களுக்கு இது முன்னமே தெரிந்திருக்கலாம்.அவர்கள் வேறு எதாவது எளிய வழி இருந்தால் பின்னூட்டலாம்.

1]முதலில் நீங்க சோதித்துப் பார்க்க வேண்டியது.உங்களிடம் உள்ளது என்ன வகை avi?என்று
உதாரணம்: -dvd rip, dvdrip-xvid, avi, pre dvdrip, blue ray rip, telesync. போன்றவை

2]பின் அது எத்தனை avi ஃபைல்களை கொண்டுள்ளது என்று பாருங்கள்.
உதாரணம்:-1சிடி,2சிடி,3சிடி

3] பின் அந்த டாரண்டை அளித்த அன்பர் யார் என்று பார்க்க? (அந்த படம் உள்ள ஃபோல்டரிலேயே  எழுதியிருக்கும்)
உதாரணம்:-axxo,fxg,klaxxon,vommit,

4]இப்போது www.opensubtitles.org  அல்லது www.podnopsi.net போகவும்

5]சர்ச் பாக்ஸில் படத்தின் பெயரையும், மொழியையும் எண்டர் செய்யவும். இப்போது அந்த படத்துக்கான பெரிய சப்டைட்டில் பட்டியலே வரும்.
உதாரணம்:- இங்ளோரியோஸ் பாஸ்டர்ட்ஸ் படத்தின் இந்த சப்டைட்டில்

5]இப்போது உங்களிடம் இருக்கும் avi பெயரை கொண்டு அந்த பட்டியலில் இருந்து பொருந்தும் அதே பெயருள்ள சப்டைட்டிலை தரவிறக்கவும்.

6]நீங்கள் தரவிறக்கிய rar சப்டைட்டில் ஃபைலை  உங்கள் avi உள்ள ஃபோல்டரிலேயே எக்ஸ்ட்ராக்ட் செய்யவும். இப்போது avi பெயரும் சப்டைட்டில் பெயரும் ஒரே பெயரில் இருப்பது போல ரீநேம் செய்யுங்கள்.ஒரு எழுத்து கூட மாறக்கூடாது

7)இப்போது படத்தை ப்ளே செய்யுங்கள்.படமும் சப்டைட்டிலும் அருமையாய் சின்க் ஆகும். இது தான் எந்த மொழியிலும் சப்டைட்டில் தறவிறக்க அருமையான சுலபமான வழி.

 குறிப்பு:-
எப்போதும் செவித்திறன் குறைபாடு உள்ளோருக்கு என உள்ள சப்டைடில்களையே தேர்ந்தெடுங்கள்,அதன் மூலம் பல பொது அறிவு பெறலாம்.
உதாரணம்:-பிண்ணணியில் ஒலிப்பது சிம்பொனியா?ஒலிப்பது என்ன பாடல்?,படத்தில் ஒரு கும்பல் வேறு மொழி பேசுகையில் அவர்கள் பேசுவது என்ன மொழி போன்றவை. யானை பிளிறியது என்றால்"elephant's trumpeting".என்று வரும். கழுதைப்புலி கத்தியது என்றால் ”hyenas laughing"என்று வரும். இதை வைத்தே பல ஆங்கில வார்த்தைகளை,அர்த்தங்களை அறியலாம்.
km player என்னும் பிளேயர் படம் பார்க்க சாலச் சிறந்தது,இதிலுள்ள சின்க் சப்டைட்டில் என்னும் ஒரு கருவி மூலம் தரவிறக்கிய பொருந்தாத அல்லது பிழை உள்ள சப்டைட்டிலை முன்னே பின்னே விநாடிகள் நகர்த்தலாம். இப்போதெல்லாம் படம் வெளியான ஒரே வாரத்தில் சப்டைட்டில் வந்துவிடுகின்றன.கவலையே வேண்டாம்.உங்கள் சப்டைட்டில் உங்களுக்கு தான்.
==========000==========
மேலும் சப் டைட்டிலை எடிட் செய்ய,சின்க் செய்ய நண்பர் லக்கி லிமேட் பரிந்துரைக்கும் சப் மேஜிக் என்னும் மென்பொருளையும் நிறுவி, அதைக்கொண்டு எடிட் செய்யலாம்,விவரத்திற்கு அவர் பதிவின் சுட்டி

 மேலும் சப் டைட்டிலை எடிட் செய்ய,சின்க் செய்ய தல ஹாலிவுட்பாலா பரிந்துரைக்கும் சப்ரிப் என்னும் மென்பொருளையும் நிறுவி அதை வைத்து  எடிட் செய்யலாம்,அதை தரவிறக்க சுட்டி
==========000==========
டிஸ்கி:-
அப்படி மேலே சொன்ன முறையில் உங்களுக்கு ஏதாவது சிரமம் இருந்தால் எனக்கு உங்க avi ன் முழுப்பெயரை தெளிவாக இமெயில் செய்யவும்,அதற்கு பொருத்தமான  சப்டைட்டில் தேடி இமெயில் அனுப்புகிறேன்.

லவ் இன் த டைம் ஆஃப் காலரா[2007][18+]Love in the Time of Cholera

காதலும் ஒரு நோய் தான். அதிலும்  தன் உயிர்க்காதலியால் நிராகரிப்பட்ட காதல் உயிர்கொல்லி நோயே தான் . தன் வாழ்நாள் முழுதும் இந்த உயிர்கொல்லி நோயுடன் கனவுலகில் வாழ்ந்த ஒருவர் .இந்நோயை எப்படியும் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன்  தன் மூப்பில் காதலில் வென்ற கதை தான் காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் நாவலை  தழுவி வெளிவந்த லவ் இன் த டைம் ஆஃப் காலரா (காலரா தோன்றிய சமயத்தில் காதல்).

ம் நாட்டில் முதியவர் இருவர் காதலித்தாலோ, கைப்பிடித்து நடந்தாலோ, அல்லது தனிமையில் தங்கள் அறைக் கதவை தாழிட்டுக் கொண்டாலோ கிழங்கள் அடிக்கும் கூத்தைப்பார் என குடும்பத்தாரே ஏசும் அவலம் இருக்கிறது. அது எவ்வளவு கிழ்தரம் என்று நினைத்திருப்போமா? நமக்கு கூடிக்குலவ தனியறை எவ்வளவு முக்கியமோ? அதே போன்று அவர்களுக்கும் தனியறை முக்கியமே, எத்தனையோ 50களைக் கடந்த மனைவிகள் வயதான கணவனிடம் பிள்ளைங்க வளர்ந்தாச்சு,விவரம் தெரிஞ்சாச்சு, வயசாச்சு,அதான் எனக்கு நாளே வர்ரதில்லையே, இன்னும் என்ன ”இது “ வேண்டியிருக்கு? என்று தவிர்க்கும் நிலை நம் நாட்டில் இயல்பான ஒன்று. உடம்புக்கு தான் முதுமையே தவிர உள்ளத்துக்கு அல்ல , அதை நினைவில் கொண்டு செயல்பட்டால் என்றும் 16 தான்.இதை உச்சந்தலையில் அடித்து சொன்ன படம், இந்த உற்சாகம் தரும் படம் ஒவ்வொரு மகனும்,மகளும், வயதான தம்பதியரும் வாழ்நாளில் காணவேண்டிய ஒன்று.பார்த்தவர்கள் முதுமையை/முதிவர்களை அலட்சியப்படுத்த மாட்டார்கள். துச்சமாய் நினைத்து ஒதுக்க மாட்டார்கள், காதலுக்கு கண் மட்டும் இல்லை, வயதும் கூட இல்லை தான்.உண்மையில் மிகவும் கொண்டாட வேண்டிய படம் இது

என் நண்பர்களில் பலர் தம் வயதான தாய் தந்தையரை பிரித்து விடுகின்றனர்
எப்படி?
1.அம்மா இது அனுவுக்கு 7ஆம் மாசம் நீ இங்கே நியூஜெர்சி வந்துவிடு,ஆறு மாசம் தானே,அப்பா சமாளிச்சுக்குவார்,

2.பல நண்பர்கள் தாயை மகன் வீட்டில் 3 மாதம் மும்பையிலும்,தந்தையை மகள் வீட்டில் பெங்களூரில் 3 மாதம் என்றும் தங்களுக்குள் ஷெட்யூல் போட்டுக்கொண்டு  பந்தாடுகின்றனர். கூப்பிடுவது தான் கூப்பிடுகின்றனர், பணமும்,விசாவும்,டிக்கெட்டும் செலவானாலும் போகிறது என்று இருவரையும் கூப்பிடலாமே? பேருந்தில், ரயிலில் அலைக்கழிக்காமல் விமானத்தில் அனுப்பலாமே? யோசிப்பார்களா? வயதானவர்களும் குழந்தைதான், அவர்களுக்கே அதிக அரவணைப்பு தேவை என உணர்வார்களா?
=================
How long would you wait for love?
உன் காதலிக்காக(காதலனுக்காக) எவ்வளவு நாள் காத்திருப்பாய்?
து தான் படத்தின் திரி,டேக் லைன்.
இதில் நாயகன் ஃப்லோரெண்டினோ அரிசோ காத்திருந்தது  57 வருடங்கள். உங்கள் பதின்ம வயது முதல் காதலை உங்களால் மறக்க முடியுமா?!!!
போரும், காலரா நோயும் எண்ணற்ற மக்களை பலிகொண்ட 1800களின் பிற்பாதிகளில் ஸ்பெயினிடமிருந்து விடுதலையான கொலம்பியா நாட்டில் துவங்குகிறது படம்.

தில் நாயகன் தபால் காரன் - ஃப்லோரெண்டினோ  குமரனாய் இருந்த போது நாயகி ஃபெர்மினாவைப் [ஜியோவ்ன்னா] பார்த்து தன் காதலை கடிதமாய் எழுதி பரிமாறிக் கொண்டு, இருவரும் திருமணம் செய்ய எண்ணுகையில்  அவளின் கோவேறு கழுதை வியாபாரியான செல்வந்த தந்தை,அவளை வேறு ஊருக்கு இடம் மாற்றி,மூளைச்சலவை செய்து,சிலகாலம் கழித்து வரவழித்தவர்,அவளை வேறொரு மருத்துவருக்கு மணம் முடித்து வைத்த பின்னரும், ஃப்லோரொண்டினோ [ஜேவியர் பர்டம்] அவள் மீது மையலுற்றிருக்கிறார். மாற்றான் மனை என்றும் பாராமல் கடிதங்களாய்,கவிதைகளாய் எழுதித்தள்ளுகிறார். ஒன்றுக்கும் பதிலில்லை. ஃபெர்மினாவோ கணவனுடன் தேன்நிலவுக்கு ஒரு வருடம் பாரீஸ் போகிறாள். புதிய மண வாழ்க்கைக்கே  தன்னை அற்பணித்துக்கொண்டாள், ஃப்லோரெண்டினாவின் கடிதங்களை நிராகரிக்கிறாள்.

தி
ருமணமே செய்யாமல் அவள் நினைவாய் காதல்தோல்வியில் கற்புடன்  இருந்தவர், இவளின் அம்மா தன் சொந்தமாய் கப்பல் வைத்திருக்கும்  செலவந்த சகோதரனிடம் சென்று இவருக்கு தந்தி அடிக்க,கடிதம் எழுத இயலாத ஊரில் வேலை வாங்கித்தரச் சொல்லி பணிக்கிறாள் , அவர் இவரை ஒரு தந்தியில்லா காட்டுக்கு வேலை கொடுத்து அனுப்ப,கப்பலிலேயெ ஓரு இரவு இவர் காரிடரில் நடக்க, இவரை கையைப்பிடித்து தன் அறைக்குள் இழுத்த செல்வ சீமாட்டி, இவரை கற்பழித்து விடுகிறாள், முதன் முறையாக காளை கழிந்தவர் ,காதல் தோல்வியின் வலியை மறக்க சரியான வழி அடங்காக்காமம் எனக் காண்கிறார் .ஊருக்கே திரும்புகிறார்.

இனி தான் ஃப்லோரெண்டினோவின் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்:-

போரில் கணவனை இழந்த கைம்பெண்ணை இவரின் அம்மாவே  ஃப்லோரெண்டினோவின் காதல் தோல்வியை மறக்க இவரது அறையில் தங்கவைத்து கூட்டித்தர-2ஆம் பெண்ணுடனும் காமம் சுவைதாயிற்று.ஆனால் அப்பெண்ணோ இறந்த கணவனையே நினைத்து இவரை கூடுகிறாள்.

பின்னர் ஒரு வேலைக்காரியை புதரில் வைத்து புணர்ந்தவர்=3,ஒரு கறுப்பினப் பெண்ணை தெருவிலேயே  சுவரோடு வைத்து, அவள் வேட்கை மிகுதியால் சப்தமிட இவர் அவள் வாயை பொத்தி புணர்ந்தாயிற்று=4. பின்னர் 20களில் இருக்கும் திருமணமான அழகியை கண்டவர், அவளை வழிக்கு கொண்டுவந்து அவளை அடிக்கடி தன் சரக்கு கப்பலிலேயே வைத்து புணர்கிறார். காமத்தின் கிறுக்கு தலைக்கேற அவளின் வயிற்றில் கீழ்நோக்கி அம்புக்குறியிட்டு ”இது எனக்கு தான்” என விரலால் சிகப்பு பெயிண்ட் கொண்டு வரைய வீட்டுக்கு சென்றவள் கணவனிடம் மாட்டிக்கொள்கிறாள், அவள் பிணமாகிறாள்.கணவன் கைதியாகிறான்.=5ஓவர்

ப்போது 20ஆம் நூற்றாண்டு பிறக்கிறது,கார் வாங்குகிறார்,நகரெங்கும் மின் சார விளக்குகள் வருகின்றன, வர் தன் 75 ஆம் வயதில் இப்படியே ருசி பார்த்த பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு என தெரியுமா? 642. ஆம் ஓவ்வொரு பெண்ணின் ருசியையும் தன் நாட்குறிப்பில் பதிந்து வைக்கிறார். ஆயினும் இவருக்கு ஃபெர்மினாவைத் தவிற எந்த பெண்ணிடமும் அமரகாதல் வரவில்லை, ஃபெர்மினாவோ 2 வளர்ந்த மகன், 2 மகள்களுக்கு தாய், டாக்டர் கணவன் ஜுவேனல் தன் 70களில் வேறொரு கருப்பிண பெண்ணோடு தொடர்பு வைத்திருப்பதை கண்டு கொதித்தவள், தன் சொந்த கிராமமான மலைவாசஸ்தலத்துக்கே கோபித்துச் செல்ல அங்கேயும் அந்த டாக்டர் கணவர் வந்து இவளை சமாதானம் செய்து இரண்டாம் தேன்நிலவும் கொண்டாடி கூட்டிப்போகிறார். இப்போது இவள் மனதில் கணவரின் மேல் லேசான வெறுப்பு , ஃப்லோரெண்டினோவையே எதிர்ப்பையும் மீறி கைபிடித்திருக்கலாமோ?  என்றும் தோன்றுகிறது. இப்போது ஃப்லோரெண்டினோ  மாமாவின்  சரக்கு கப்பல் கம்பெனி நிர்வாக,சொத்துக்கள் இவருக்கு தானாக வந்து சேர்கின்றன.தன் காதல் மீதான  நம்பிக்கையை இவர் சற்றும் கைவிடவேயில்லை.

ஃப்லோரெண்டினோ,தன் காதலி திருமணம் செய்து கொண்டால் என்ன? பிள்ளைகள் பெற்றுக்கொண்டால் என்ன?அவள் கணவன் சாவதற்கு இலவு காத்த கிளியாக காத்திருந்தவர், ஃபெர்மினோவின் கணவர் ஜுவேனல் [பெஞ்சமின் ப்ராட்]  மரத்தில் செல்லக் கிளி பிடிக்க ஏறியவர் தவறி விழுந்து இறக்கிறார். அவர் இறந்த அன்றே ஃபெர்மினாவின் முன் ஃப்லோரெண்டினோ போய் நிற்கிறார்.மீண்டும் தன் ப்ரொபோசலை துவங்குகிறார். முன்பு காதலின் உச்சகட்ட பித்தநிலையில் இருந்தவர் , இப்போது நீண்ட காலம்  பக்குவப்பட்டதால் ஃபெர்மினாவிடம் அவளை அடிக்கடி வந்து பார்க்க அனுமதி கேட்கிறார். எறும்பு ஊற தான் கல்லும் தேயுமே.
  1. அந்த  ஃபெர்மினா என்னும் கல் மனம் கனிந்ததா?, 
  2. ஃப்லோரெண்டினோ காதல் நிறைவேறியதா?போன்ற கேள்விகளுக்கு 
    டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
=============0000==============

=============0000==============
ஜேவியர் பர்டம் என் மனம் கவர்ந்த நடிகர், இவரின் விக்கி க்ரிஸ்டினா பார்சிலோனாவை  ரொம்ப தயக்கத்துடன் போன வருடம்  பார்த்தேன் தயக்கத்தின் காரணம்:-என் உள் மனதில் கொடூர வில்லனாய் வாழும் நோ கண்ட்ரி ஃபார் ஒல்டு மென் -ஜேவியரை எப்படி காதல் கதையின் நாயகனாய் காண்பது என்பதே!!ஜேவியர் பர்டெம் கோய்ன் சகோதரர்களுக்கு ஆஸ்கர் பெற்றுத்தந்த நோ க‌ண்ட்‌ரி ஃபார் ஓல்டு மென் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றவர். இதே விருதை அவரது புதிய மனைவி பெனலோப் குரூஸும் பெற்றிருக்கிறார். விருதுகளை குவிப்பதில் பெனலோப் குரூஸ், ஜாவியர் பர்டெம் இவர்கள்தான் சிறந்த நட்சத்திர ஜோடி.
னால் மனிதர் அந்த படத்திலும் அதகளம் செய்திருந்தார். இந்த படத்திலும் ஃப்லோரெண்டினோவாகவே அவதாரமெடுத்திருந்தார். இவரை வெவ்வேறு வயது தோற்றத்தில் பார்க்கையில் ஹேராம் பட கமல்ஹாசனின் 10க்கும் மேற்பட்ட தோற்றங்கள் தான் மனதுக்குள் தோன்றி மறைந்தன.என்ன ரசனை நம்மவருக்கு, ஸ்பானியர்கள் இதை சிந்திக்கும் 10 வருடம் முன்பே ஹேராமை உலகத்தரமாய் சிந்தித்திருக்கிறாரே?

1800 களின் கலைப் படைப்புகள் படத்தில் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. அப்போதைய சிற்பங்கள், ஓவியங்கள்,கலங்கரை விளக்கங்கள், தந்தி உறைகள்,மிக அழகிய குதிரை வண்டிகள்,இசைக்கோவைகள் என கலை ஆங்காங்கே ஆரவாரம் செய்துகொண்டே இருக்கிறது. முதல் காட்சியான சர்ச்சில் சாவுமணி அடிக்கும் போது ஃப்லோரொண்டின்னோ தன் 20வயது புதிய கல்லூரிப்பெண் காதலியுடன் ஹம்மாக்கில் கொஞ்சி குலவுகையில் மேலே உள்ள 1900 களின் சீலிங் ஃபேன்களும்,மர லூவர் சன்னலும், வீட்டின் உள் அலங்காரம் முதலே படத்தில் கலையின் ஆக்கிரமிப்பு தொடங்குகிறது.எங்கும் கலைமயம்.

குறிப்பாக தென் அமெரிக்க /ஸ்பானிய படங்களின் சாயலிலேயே அமைந்த மஞ்சள் சேஃபியா வண்ண ஒளிப்பதிவும், ஸ்பானிய மூங்கில் இசைக் கருவிகளும் மனதில் ரொம்ப நேரம் விட்டு அகலாமல் மாய்மாலம் செய்கின்றன. உடை அலங்காரம் பற்றி ஒரு வரியில் சொல்லக்கூடாது, ப்ரேவோ!!!!! ஃபெண்டாஸ்டிக், அதுவும் ஃப்லோரெண்டீனோவின் ஒப்பனை,  ரம்மியம்,  அவரின் கண்ணாடி    ஃப்ரேம்கள் ஒன்றே இதற்கு சாட்சி,  இவர்களின் ரசனைக்கு.

ர்ப்பரிக்கும் ஆறும்,அதில் பயணிக்கும் சரக்கு கப்பலும் ,அலற வைக்கும் காலரா நோயும், கொலம்பிய கிராமம், எங்கும் காணமுடியாத அரிய கலைப்பொருட்கள், பசுமை போர்த்திய மலை வாசஸ்தலம் என்று  இயக்குனர் மைக் ந்யூவெல் ஒரு கலக்கு கலக்குகிறார். காதலையும் காலரா நோயையும் ஒப்பிட்டு இந்த அற்புதமான படைப்பை தந்த படக்குழுவையே  பாராட்டத் தோன்றுகிறது. நாவலை படமாக்க ஒரு பக்குவம் வேண்டும், அது இப்படத்தில் வெளிப்பட்டிருக்கிறது.

படத்தில் என்னை மிகவும் பாதித்த வசனம்:-
தன் 72 வயது காதிலியிடம் ,மீண்டும் காதலைச் சொல்கையில் பேசுவது.
Florentino Ariza: Please allow me to wipe the slate clean. Age has no reality except in the physical world. The essence of a human being is resistant to the passage of time. Our inner lives are eternal, which is to say that our spirits remain as youthful and vigorous as when we were in full bloom. Think of love as a state of grace, not the means to anything, but the alpha and omega. An end in itself. 

டத்தின் இன்னொரு அருமையான வசனம் உண்டு. 72 வயதிலும் தன் உள்ளத்துக்கு வயதாகவில்லை என்பதை தெளிவாய் புரிந்து கொண்டு  ஃப்லோரெண்டினோவிடம்  நட்புடன் பழக துவங்கும் ஃபெர்மினோ,  தன்னை கேவலமாக  பேசிய சுயநலம் பிடித்த  தன் மகளுக்கு கொடுக்கும் சவுக்கடியான வசனம்,
Fermina Urbino: The only thing that hurts me is that I don't have enough strength to give you the beating that you deserve for being so insolent and evil-minded. But you will leave this house right now and I swear to you on my mother's grave that you will not set foot in it again as long as I live. Life crippled that poor man 50 years ago, because he was too young and now you want to do it because we are too old.
=============0000==============

எகிப்தியனுடன் ஒரு நேர்முகப் பேட்டி:கலக்கல் காமெடிகள் சிரிக்கலாம் வாங்க ..,

இந்த நேரடி பேட்டிக்கு சத்தியமாக மொழி பெயர்ப்பே தேவையில்லை. எகிப்தியர்களை ஏனைய மத்திய கிழக்கு நாடுகள்,அமீரகம்,சவுதி வாழ் அன்பர்களுக்கு அவசியம் பரீட்சயமிருக்க வேண்டும். நம்முடன் வேலை குறித்து உரையாடுகையில் கூட சத்தமாக அரபியில் தான் பேசுவார்கள், அதில் சிலர் முரட்டுத்தனமானவர்கள், அவர்களில் சிலரை மிசெரிகள் என்பார்கள். வேளை கெட்ட வேளையில் தான் சாப்பிடுவார்கள். எந்நேரமும்  எக்ஸ்பிரஸ்ஸோ என்னும் கருங்காப்பியை பருகிக்கொண்டே  இருப்பார்கள். மற்ற படி நட்பாய் பழக நீண்ட காலம் எடுத்துக்கொள்வார்கள், பழகிவிட்டால் மிக அன்பானவர்கள். மிகுந்த இறை நம்பிக்கை உடையவர்கள். சாப்பிடுகிறார்களோ அலங்காரம் செய்து கொள்கிறார்களோ? 5 வேளை தொழுகை நடத்திவிடுவர். பிரமீடுகள் தேசத்துக்கு சொந்தக்காரர்களாதலால்,நிறைய பொறியாளர்களாய் இருப்பர்.ஆனால் ஆங்கிலமென்றாலே வெறுப்பு தான். பேசுகையில் இடையில் யானி,யானி என்பார்கள், யானி என்றால் அதாவது என்று அர்த்தமாம், கைகளால் அபிநயம் வேறு,பார்க்கவே அழகாய் இருக்கும்.இதை என் நண்பர் இமெயிலில் அனுப்பவும் எனக்கு சிரிப்பு தாங்கவில்லை, என் அலுவலகத்தில் 4 எகிப்தியர் உள்ளனர். அவர்களுடன் நானே நேரில் பேசுவது போல இருந்தது. இந்த உரைநடை.உங்களுடன் இதை பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன்.
=============0000==============
Reporter: Hi 
Egyptian: Hello
Reporter: Do u speak English
Egyptian: Berfect
Reporter: Do u mind if I interview u
Egyptian: No, I don't have a mind
Reporter: What's your name?
Egyptian: Taha
Reporter: Sex?
Taha: I love it
Reporter: oh no, I meant male or female? 
Taha (yelling): what do u sink?
Reporter: it's just for the sake of the report. Never mind...male....
Taha: No.. I like female
Reporter: How do u find life here in Egypt ?
Taha: Egybt..Very nice cantry..nice wezar..nice food..byramidz
Reporter : Oh well..beside the weather and the pyramids..what else do u like in ur country?
Taha: Byramids, nice wezar, nice food
Reporter: DO YOU WORK?
Taha: Yas, when I am not buzy..
Reporter: What do u think about the traffic problem in Egypt ?
Taha : Very big broblem..very much cars..u see?..but za guvurment is trying to make it bettar..zey did za circle street and za mehwar street..and zey make all streets one way so if u go..u cant come back!!!
Reporter: What about the economic problems in Egypt ?
Taha: I do not undurztand what u say
Reporter: I mean..how do u deal with money problems in egypt ?
Taha : Egypt very rich cantry...we have alot of cotton..alot of water..and we have byramidz

Reporter: So do u make a lot of money? 
Taha : No no.. it is not legal to make money..one frend I know make money at home..and he go to brizon..if u make money at home.. you will go to brizon
Reporter : let me rephrase..since Egypt is a rich country.. do u have a lot of money?
Taha: me? ...Not a lot…..but I eat and drink Alhamdulelah?
Reporter: Then where does all the money go?
Taha: Guvurment
Reporter: And what does the government do with the money?
Taha : Zey Build circle street, mehwar street and make all streets one way
Reporter: well , Ok...Do u vote?
Taha: What duz zat mean?
Reporter: Do u choose your president 
Taha: Who, Mubarak?
Reporter: yes 
Taha (nervously) : I didn't give my voice..But if I was. I will give him my voice
Reporter: Why him? 

Taha : Because he was an airoplane in za war..he waz za leadar airoplane
Reporter: But there r no wars right now
Taha : But if we have war..u see?...we know we will have a very good airoplane in it
Reporter: what about the last 26 years?
Taha: I got marry..and have Ahmed an d Amira..and……….
Reporter: No, I meant Mubarak.
Taha: He also marry… and have…

Reporter (interrupting): No, I meant what did Mubarak do for Egypt in the last 26 years
Taha: He build circle street, mehwar street and make all streets one way
Reporter: Thank you very much for ur time Mr. Taha 
Taha: No broblem, only 10 bounds
Reporter: I never said i will pay u for this 
Taha : ok ok…. Zanks a lot.
=============0000==============

நாஜிக்கள் யூதரை எப்படி இனம் கண்டு அழித்தனர்?யூரோப்பா யூரோப்பா[18+][1990][ஜெர்மன்]

யூரோப்பா யூரோப்பா:-(Hitlerjunge Salomon (எ)ஜூனியர் ஹிட்லர்)
========================
இது ஓர் உண்மைக்கதை,சாலமோன் பெரேல் என்பவரின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான Hitlerjunge Salomon ஐ தழுவி , இயக்குனர் Agnieszka Holland ன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு ஜெர்மன், ரஷ்யன், போலிஷ்,& ஹீப்ரூ மொழிகளில் வெளியான இரண்டாம் உலகப்போர் படம். ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்,டவுன்ஃபால், த பாய் இன் த ஸ்ட்ரைப்ட் பைஜாமாஸ், லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல் , ரீடர், போன்ற அருமையான படங்களின் வரிசையில் இதுவும் நெஞ்சை நகர்த்தும்  காவியம்.ப்படம் உலகசினிமா விரும்பிகள் அனைவரும் வாழ்நாளில் பார்க்கவேண்டிய ஒன்று.
=============0000==============
 நீ உயிரை காத்துக்கொள்ள எவ்வளவு தூரம் இறங்குவாய்?

து தான் இப்படத்தின் திரி. இதில் வரும் 13 வயது சிறுவன்  சாலமோன்   (  மார்க்கோ ஹாஃப்ஷ்னீடர்)  ஓர் யூதன்,  ஹிட்லரின் பிறந்த தேதியான ஏப்ரல் 20 பிறந்தவன். ஜெர்மானியில் வசிக்கிறான். திடீரென ஃப்யூரர் ஹிட்லரின் ஆட்சியில்  வெடித்த  ஜெர்மானிய அடக்குமுறையால் யூதர்கள் கொல்லப்பட்டு வீடுகள் சூறையாடப்பட, அதில் இவனது தங்கையும் கொல்லப்படுகிறாள், இவன் பெற்றோருடன்  கடும் அல்லல்பட்டு ஜெர்மனியில் இருந்து போலந்துக்கு குடும்பத்தாருடன் தப்புகிறான். அங்கேயும் விடாமல்  உள்ளே நுழைந்த ஜெர்மனி, போலந்தை வெற்றி கொள்ள , தந்தையின்  கட்டளைக்கிணங்க போலந்திலிருந்து ஆற்றில் படகு மூலம்  அண்ணன் ஐசக்குடன் தப்புகிறான்.

தற்குள்ளாக  ஹிட்லருடன்  ஸ்டாலின் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தால்  படகு திருப்பப்பட, இவன் ஆற்றில் குதித்து போல்ஷ்விக்கிற்குள் தஞ்சம் புகுகிறான் ,அங்கே ரஷ்யப்படையின் அகதி முகாமில் 3 வருடங்கள் சோறு, உறக்கம், அப்பாவிடமிருந்து அடிக்கடி கடிதம் என நிம்மதியாய் இருந்தவன், ரஷ்ய மொழியும் கம்யூனிசமும் பயில்கிறான், ஹிட்லர் தான் பிடிக்கும் யூத கைதிகளை மடகாஸ்கருக்கோ சைபீரியாவுக்கோ அனுப்பி விடுவார் என மடத்தனமாக நம்புகிறான்.விரைவில் ஜெர்மனி அங்கேயும் போர்தொடுத்து கைப்பற்ற கையும் களவுமாய் பிடிபட்டவன் தான் ஜெர்மானியன் என பொய் சொல்கிறான்.

ஜெர்மானிய ராணுவத்திடம் தன் பெற்றொர் போல்ஷ்விக்கினரால்  சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர் என்கிறான். இவன் பெயரை பீட்டர் ஜோசெப் என்கிறான். இவனின் ஜெர்மனி + ரஷ்ய மொழிப்புலமை அவனுக்கு ஜெர்மானியரிடம் விரைவில் புகழ் பெற்றுத் தருகிறது, வெகு விரைவில் நாஜிப்படையில் மொழி பெயர்ப்பாளன் ஆகிறான். புல்லுருவியாகி தம் இன யூதர்களையே களை எடுக்கிறான். இவனை மிகவும் மெச்சிய அட்மைரல் அவனை முறைப்படி தத்து எடுத்துக்கொள்ள ஆவலாகி தன் மனைவியுடன் பெர்லினுக்கு அனுப்புகிறார், அவளோ இவனும் ஃப்யூரர் -ஹிட்லரின் பிறந்தநாளில் பிறந்ததால் மோகம் கொண்டு ரயிலிலேயே விளக்கை அணைத்துவிட்டு இந்த 17 வயது சிறுவனுடன் உடலுறவு கொள்கிறாள்.

விரைவில் ட்ரெஸ்டன்  என்னும் நகருக்கு நாஜி மாணவர் ராணுவ படைக்கு பீட்டர் அனுப்பப்படுகிறான்.அவனை எல்லோரும் ஜுப் என்கின்றனர். அங்கே இவன் ஜெர்மானிய பெண்  லெனியுடன் (ஜூலி டெல்பி-பிஃபோர் சன்செட்) காதல் கொள்கிறான், அவளோ ஹிட்லரின் கட்டளைப்படி நாஜிப்படைக்கு மாவீரனாய் தன் குழந்தையை பெற்று அற்பணிக்க எண்ணியவள். நல்ல ஜெர்மானியனாக தேடுகிறாள்,இவனை கண்டதும் விரும்புகிறாள் ,இவனை உடலுறவு கொள்ளச் சொல்லி கேட்டு அடிக்கடி நச்சரிக்க, இவன் மீனாக நழுவுகிறான். உள்ளே புழுங்குகிறான். லட்டு போல அழகிய பெண். இவனுக்குள்ளே துடிக்கும் காமம். ஆனால் இவன் பிறப்புறுப்பை அவள் பார்க்க நேர்ந்தால் அவளே இவனை ஜெர்மானியரிடம் காட்டி கொடுத்து விடுவாளே!! எனவே லெனியை லாவகமாக தவிர்க்கிறான். கோபம் கொண்ட லெனி  இவனை கையாலாகாதவன் என ஏசுகிறாள்,இவன் அவளை கோபத்தில்அறைகிறான் .அவள் ஜெர்மானியப் பெண்ணை யாரும் அடிக்க மாட்டார்கள்,நீ அதற்கு அனுபவிப்பாய் என ஆவேசமாக சொல்லிவிட்டு போகிறாள்.


வ்வப்பொழுது அருகே இருக்கும் கெட்டோவுக்கு ட்ராமில் பயணித்து, சன்னல் வழியே தன் அப்பாவோ அம்மாவோ தென்படுகின்றனரா? என பார்க்கிறான். ஏமாந்தும் போகிறான். அதில் ஒரு கூத்தாக கெட்டோவுக்குள் ட்ராம் பயணிக்கையில் சன்னல்கள் கூட அருவருப்பினால் மூடப்பட்டிருக்கின்றன, எங்கே யூத காற்று உள்ளே வருமோ என்று!!! இன அழிப்பு  வேலைகள் மும்முறமாய் நடப்பதை ட்ராம் சன்னல் உள்ளேயிருந்து பார்த்து அறிகிறான். தூக்கம் தொலைத்து அழுகிறான். யாரிடமும் சொல்லி ஆறுதலும் தேடமுடியாத நிலை.


ப்போது லெனி வஞ்சம் தீர்க்க  பீட்டரின் நண்பனைக் கூடி கருவுறுகிறாள். அவளின் அம்மா இவனிடம் இந்த செய்தியை சொன்னதும் ,இவன் துடிக்கிறான். அவளே, நீ ஏன் அவளை முயங்கவில்லை? நீங்கள் ஒருவரை ஒருவர் விரும்பினீர்கள் தானே? எனக்கேட்க, இவன் ஒரு பாட்டம் அழுது முடிவில் தான் ஒரு யூதன் என்னும் உண்மையை ஒப்புக்கொள்கிறான்.அவளின் அம்மா இவனை கண்ட முதல் நாளே நான் அதை அறிந்தேன். பயப்படாதே உன்னை காட்டிக் கொடுக்கமாட்டேன் என்கிறாள்.தேற்றுகிறாள்.

வன் இப்போது தன் முன் தோல் நீக்கப்பட்ட பிறப்புறுப்பின் எஞ்சிய தோலை வெளியே இழுத்து நூல் கொண்டு இறுக்க சுற்றுகிறான். எந்நேரமும் சிறுநீர் கூட  போகாமல்  அடக்குகிறான். அப்படியாவது முன் தோல் வெளியே வளர்ந்து வருமா? என பார்த்தவன், பிறப்புறுப்பு புண்ணாகி சீழ்பிடிக்க வலியால் மிகவும் துடிக்கிறான்.  இவன் தலையில் இப்போது இடியாக ராணுவ தலைமை அதிகாரி அடுத்த வாரத்திற்குள் இவன் ,இவனின் அப்பா, அம்மா,அவர்களின் பெற்றோர் சம்பந்தப்பட அடையாள ஆவணங்களை கேட்கிறார்.

வன் அவர்கள் போரில் போல்ஷ்விக்கினரால் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். ஆவணங்கள் போரில் அழிந்துவிட்டது என கூற, அவர்  கவலையே வேண்டாம், ஜெர்மானியர்கள் ஆவண ஆக்கத்தில் தலை சிறந்தவர்கள், அது சம்மந்தமான பேரேடு நிச்சயம் இருக்கும், அது சம்பந்தப்பட்ட திருச்சபைக்கு கடிதம் எழுதுகிறேன் என்கிறார். இவனுக்கு எதாவது  அற்புதம் நடந்தால் தான் தான் பிழைக்க முடியும் என்னும் நிலை.

லுவலகத்திலிருந்து வெளியேறியவன் மேலே பார்க்க, அமெரிக்க, ப்ரிட்டன் போர்ப்படை விமானங்கள் ட்ரெஸ்டனில் வானில் பறந்து தொடர்ந்து 2 தினங்கள் குண்டுமழை பொழிகிறது. இவன் கண் முன்னே அவன் காதலி கட்டிட  இடிபாடுகளில் சிக்கி சாகிறாள். இவன் இறுதிகட்ட ஜெர்மானிய போரில் செம்படையுடன் சண்டையிட, அவர்களின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் புறமுதுகிட்டு ரஷ்யபடையிடம் கைகளை தூக்கி சரணடைகிறான்.இப்போது அவர்கள் இவனை யூதன் என நம்பவில்லை,என்ன கொடுமை பாருங்கள்.யூதனாயிருந்தால் நீ பிணமாக அல்லவா இருக்க வேண்டும் என காமெடி செய்கின்றனர்.பிணக்குவியல்களின் போட்டோக்களை காட்டுகின்றனர்.

வன் பேசிய ரஷ்ய மொழியை வைத்து, இவனை உளவாளி, துரோகி என குற்றம் சுமத்தி, அங்கே ஹாலோகாஸ்ட் முகாம்களில் இருந்து விடுதலையான ஒரு யூதனிடம் கைத்துப்பாக்கியை கொடுத்து இவனை உன் இஷ்டம் போல கொல், என ஒப்படைக்கின்றனர், அங்கே நிலைகுத்தி இவனை வேடிக்கை பார்த்த சித்திரவதை முகாம் கைதியான இவன் அண்ணன் ஐசக் இவனை கூவி அழைத்து.கண்ணீருடன் இறுக்க கட்டிக்கொள்கிறான்.


ஐசக் தேம்பி தேம்பி அழுகிறான். தம்பிக்கு விடுதலை வாங்கி தருகிறான். சித்திரவதை முகாமிலேயே இவனின் அப்பா,அம்மா, இன்னொரு அண்ணன் கேஸ் சேம்பருக்கு அனுப்பப்பட்டு இறந்து விட்டனர் என்கிறான். பின்னர் இவர்கள் அமெரிக்கப்படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு அப்போதைய பாலஸ்தீனம் (தற்போதைய இஸ்ரேல்) செல்கின்றனர். இந்த படம் ஏற்படுத்தும் தாக்கம் நெடுநாட்களுக்கு ஆறாது. என்ன படம்?என்ன இசை?என்ன ஒளிப்பதிவு?என்ன ஒரு கலை இயக்கம்,என்ன ஒரு நடிப்பு? என வியந்து கொண்டே இருக்க வைக்கும்


ஆகவே  டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
=============0000============== 

எனக்கு நீண்ட நாளாய் சந்தேகம் இருந்தது:-
கொடூர நாஜிகள் எப்படி? யூதர்களை தாங்கள் வென்ற நாடுகளிலிருந்தெல்லாம் சரியாக இனம் கண்டு பிடித்து கெட்டோவுக்கும் பின்னர் கான்செண்ட்ரேஷன் கேம்பிற்கும் அதன் பின்னர்  கேஸ்சேம்பருக்கும்  அனுப்பினர்  என்று?

இணையத்தில் தேடியதில் கிடைத்த விடைகள்:-

1.யூதர்கள் ஆண் குழந்தை பிறந்த உடனே ஸர்கம்ஃபிகேஷன் என்னும் ஆண் பிறப்புறுப்பில் முன் தோல் நீக்க சிகிச்சையை மதகுருமாரைக் கொண்டு செய்து விடுவர்.எனவே நாஜிக்கள் தெருவில் போகும் எந்த சந்தேகத்துக்கு இடமான ஆணையும் அவர்களின் கால் சட்டையை இறக்கி பார்த்து சோதிப்பார்களாம்.

2.யூதர்கள் என சந்தேகப்படுபவரை பன்றிக்கறி தின்னச்சொல்லி பார்த்து தெரிந்து கொள்வர்,இம்முறை மூலம் யூத பெண்களையும் கண்டறிந்தனர்.

3.போர்க்காலங்களில் வெளியே நடமாடும் எவரும் தங்களின் அடையாள புத்தகங்களை வைத்திருக்க வேண்டுமாம்.ஒரு யூதன் தன்னை ஜெர்மானியன் என பொய் சொன்னால் அவனிடம் அவன் சிறுவயதில் ஞானஸ்தானம் பெற்ற திருச்சபையின் ஆவணங்களும் ,அவனின்/அவளின் தந்தை,தாயார்,தாயின் பெற்றொர், தந்தையின் பெற்றொர் ஞானஸ்தானம் பெற்ற நாளும் திருச்சபையின் ஆவணங்களும் கொடுக்கவேண்டியிருக்குமாம். யாராவது ஒருவர் கலப்பு திருமணம் செய்திருந்தாலும் செல்லாதாம்.

4.எல்லாவற்றிற்கும் மேலாக ஜெர்மானியர் அனைவரும் தம் வீட்டருகே உள்ள யூதரை காட்டிக்கொடுக்க வேண்டும் என கட்டளை இடப்பட்டிருந்தனராம். அவ்வாறு காட்டிக்கொடுக்கவோ அவரை விசாரிக்கையில்  துப்பு கொடுக்க தவறினாலோ சுட்டுக்கொல்லப்பட்டனராம்.
 
5.யூத ஆண்கள் முறையே தம் 13 வயதிலும்,83 வயதிலும் பார்மிட்ஸ்வா என்னும் ஞானஸ்தானம் பெற வேண்டும். அது கோவில்களில் ராப்பிகள் மூலம் தான் நடக்கும். எனவே யூதர்களின் கோவில்களில் இருக்கும் ராப்பிக்களை சிறை பிடித்து துன்புறுத்திய நாஜிக்கள் அவர்கள் மூலம் யார் யார் எல்லாம் பார்மிட்ஸ்வா வாங்கிய யூதர்கள் என எளிதாக கண்டனராம். அந்த பேரேட்டை வைத்தே பட்டியல் தயார் செய்யப்பட்டு நிறைய யூதர்கள் கெட்டோவுக்கு அனுப்பப்பட்டனராம்.

6.யூதர்களுக்கு யார் அடைக்கலம் தந்தாலும் தயவுதாட்சன்யம் இல்லாமல் தெருவில் தூக்கிலிட்டோ,சுட்டோ  கொல்லப்பட்டனர்.யூதவீடுகள் முன் பெயிண்டால் நட்சத்திரக்குறி இடப்பட்டு,அவர்கள் வீடுகள் முரட்டு ஜெர்மானிய மக்களால் சரமாறியாக தாக்கப்பட்டன.

7.எல்லை தாண்டி எங்கே வெளியே தப்பிப்போனாலும் மூன்று தலைமுறைகளின் ஆவணங்களை இனமறிய அமெரிக்கா, ப்ரிட்டன்,ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி,நாடுகள் கேட்டன.அதனால் எவரும் தன் அடையாளத்தை தொலைக்கவோ மறைக்கவோ முடியவில்லை. என்னதான் சிகையலங்காரம், பாரம்பரிய உடைகள், தொழுகை முறைகளை யூதர்கள் மாற்றிக் கொண்டாலும் அவர்களை நாஜிக்கள் தேடிக் கொன்று குவித்தனராம்.

8.யூதர்கள் படிக்கக் கூடாது,வேலை செய்யக்கூடாது,சொந்த தொழில் செய்யகூடாது, வங்கி கணக்கு வைத்திருக்க கூடாது. எங்கே போவர்?. கெட்டோவே தேவலை என்று பல யூதர்கள் அப்பாவியாகப் போய் மாய வலையில் விழுந்தனராம்.
=============0000==============
இந்த யூரோப்பா யூரோப்பாவில் வரும் யூதர்களை அடையாளம் காண நாஜிக்கள் மாணவ படைக்கு விரிவுரையாளர் விளக்கும் காட்சியின் காணொளியை,பாருங்கள், நாஜிக்களின் கொடூரமானசிந்தனை விளங்கும்,
1.நீல நிறக் கண்களின் 50 மாதிரிகள் ஒரு பலகையில் வார்க்கப்பட்டிருக்க, அதை வைத்து விரிவுறையாளர் சந்தேகத்திற்கிடமானவனை ஒப்பிட்டுப் பார்க்கிறார்.

2.ஒரு ஸ்டெத்தாஸ்கோப் போன்ற ஸ்டீல் உபகரணம் அதை சந்தேகத்திற்கிடமானவன்  உச்சந்தலையில் வைத்து ஒப்பிட்டுப் பார்க்கிறார்.
3.காலிப்பர் போன்ற ஒரு அளவுகோல அதை வைத்து முகத்தை, நெற்றியை,கன்னத்தை, மூக்கை,பின்னர் காதையும் அளக்கின்றனர். பார்க்கையிலேயே கதிகலக்குகிறது.

4.மேலும் யூதர்கள் எப்போதும் கண்ணைப்பார்த்து பேசமாட்டார்கள்,கூன் போட்டு தான் நடப்பர். ஆஜானுபாகுவான தோற்றம் இருக்காது,குல்லா போட்டு , குல்லா போட்டு அவர்களின் உச்சந்தலை வழுக்கை விழுந்திருக்கும் என அடுக்குகிறார். அவர்களின் மூக்கு அசிங்கமாய் நீண்டிருக்கும், காதுகள் மிகப்பெரியதாக இருக்கும்.என்கிறார். அந்த கொலைகாரப்பயல்கள் 6 மில்லியன் யூதர்களை ஒன்று திரட்டி கொன்று குவித்தது எப்படி? என்று இப்போது புரிகிறதா?
=============0000==============
=============0000==============

டார்க் ஹ்யூமரின் உச்சம்-ஹட்சக்கர் ப்ராக்ஸி[1994]

கோயன் பிரதர்ஸ் படங்களை நாம் சிலாகிப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் உலகத்தரமான டார்க் ஹ்யூமர் தான். இவர்கள் தங்கள் எல்லா படங்களிலும் காட்சிக்கு காட்சி அதை கண்ணி வெடிபோல புதைத்து வைப்பார்கள், அதை நீங்கள் உணரும் முன்னரே காட்சி நகர்ந்து விடும்.அது தான் இவர்களின் அடையாளம். ஒருவேளை அது உங்களுக்கு புரியவில்லையா? கவலையே படமாட்டார்கள். அதை உங்களுக்கு புரிய வைக்க வேண்டி இவர்கள் எந்தவிதமான காம்ப்ரமைஸும் செய்து கொள்ள மாட்டார்கள். நல்ல டார்க் ஹ்யூமருக்கு எடுத்துக்காட்டாய் ஹட்சக்கர் ப்ராக்ஸி என்னும் ஸ்க்ரூபால் காமெடி வகை படத்தில் வரும் மீட்டிங் ரூம் காட்சியை சொல்லுவேன். பாருங்கள், இதில் செல்ஃப் டிஃபென்ஸ்ட்ரேஷனால் பீடிக்கப்பட்ட கம்பெனியின் டைரக்டர் என்ன செய்கிறார் என்று ?

ன் கம்பெனி தயாரிப்புகள் அமோக விற்பனையாகின்றன,கம்பெனி பங்குகள் இரண்டு மடங்கு அதிக விலை போகின்றன,இந்த வருடம் கம்பெனியில் நல்ல லாபம் ஈட்டியது. என ஆண்டறிக்கை வாசிக்கப்பட மிகவும் உணர்ச்சி வசப்பட்ட டைரக்டர் தன் சங்கிலி கடிகாரத்துக்கு சாவி கொடுக்கிறார்.க்யூபன் சிகாரை உரிஞ்சுகிறார்.பின்னர் நாற்காலி மீது ஏறி நீண்ட மேசையில் ஓடியவர், கண்ணாடி சன்னலை உடைத்துக்கொண்டு 45ஆம் மாடியில் இருந்து ஆகாயத்தில் கலந்து அனுபவித்து கீழே குதிக்கிறார். இதற்கு 1958 ஆம் ஆண்டின் அசல் நியூயார்க் நகர , ஆர்ட் டெக்கோ,மற்றும் மாடரன்  பாணி ஸ்கைலைன் கட்டிடங்களை  மாடலாய் வடிவமைத்த கோயன் பிரதர்ஸ் ,பின்னர் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் அந்த கம்பெனி டைரக்டர் 30 நொடிகள் அந்தரத்தில் பயணித்து  மண்ணில் மோதி தலைசிதறுவது போல் வடிவமைத்திருந்தாராம்.(ஒருவர் 45மாடிகள் குதித்து கடக்க 7நொடிகள் எடுக்குமாம்) இது சற்றே நாடகத்தன்மைக்காக நேரம் கூட்டப்பட்டதாம். இது  1975ல் பான் அமெரிக்கன் கட்டிடத்தின் 44ஆம் மாடியில் இருந்து யுனைட்டட் ஃப்ரூட்ஸ் கம்பெனியின் டைரக்டர் குதித்து இறந்த உண்மைச் சம்பவத்தை  தழுவி  எடுக்கப்பட்ட காட்சியாம்.மனிதனுக்கு அதிக சந்தோஷமும் ஆபத்து தான் என்பது தான் எவ்வளவு உண்மை?

ந்த தற்கொலை சம்பவத்துக்கு பின்னர்  கம்பெனியின் போர்ட் ஆஃப் டைரக்டர் கிழங்களுக்குள் நடக்கும் விவாதத்தையும் உற்றுநோக்குங்கள். அதில் உச்ச கட்டமாக  உயிருக்கு மதிப்பளிக்காத அந்த போர்ட்  ஆஃப் டைரக்டர்களில் ஒருவரான பால் ந்யூமேன் எரிகின்ற க்யூபன் சிகாரை வீணாக்குவது முட்டாள்தனம் என அதை வீணாக்காமல் உரிஞ்சுவதும், கம்பெனியில் மொத்தம் எத்தனை தளங்கள் உள்ளன?என கேட்கப்பட, ஒரு கிழம் 45 எனவும்.இன்னொரு கிழம் இல்லை இல்லை 44 இதில் ஒன்று மெஸ்ஸனைன் ஃப்ளோர் ,அதை கணக்கில் சேர்க்கக்கூடாது என்பதும்  சரியான  கலக்கல் காட்சிகள்.இப்படத்தில் அப்பாவி பட்டதாரியாய் வரும் டிம் ராபின்ஸ் (ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்) தான் நகைச்சுவையிலும் சூரப்புலி என நிரூபித்த படம்.படம் அனுபவித்து பாருங்கள்.

உங்களுக்காக அந்த வசனங்கள் :-

Board Member 1: He could have opened the window.
Board Member 2: Waring Hudsucker never did anything the easy way.
Board Member 3: (weeping) Why? Why did he do it? Everything was going so well
Sidney J. Mussburger: What am I, a head shriker. Maybe the man was unhappy?
Board Member 3: He didn't look unhappy.
Board Member 4: He didn't look rich.
Board Member 5: Waring Hudsucker was never an easy man to figure out. He built this company with his bare hands, every step he took was a step up, except of course this last one.
Sidney J. Mussburger: Sure, sure he was a swell fella, but when the president, chairman of the board and owner of 87% of the company stock drops 44 floors...
Board Member 6: 45.
Board Member 7: Counting the mezzanine. 

ப்படம் மேலே சொன்ன  அதிமேதாவித்தனமான நகைச்சுவை காட்சிகளாலேயே  எல்லா தரப்பு மக்களையும் சென்று சேராமல்  பாக்ஸ் ஆஃபிஸில் சுருண்டதாம். இருந்தும்  எண்ணற்ற ஹாலிவுட் திரைப்பட ரசிகர்களின் விருப்பதேர்வாக உள்ளது இப்படம்.
=============0000==============
அந்த போர்ட் ரூம் காட்சிக்கான யூட்யூப் காணொளி:- 

=============0000==============
நன்றி:-ஐஎம்டிபி,யூட்யூப்,விக்கிபீடியா,கூகிள்

நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென் [18+][2007]No Country for Old Men

ருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக  ஹாலிவூடின் "பெர்ஃபெக்‌ஷன்" வகை திரைப்பட பிரம்மாக்கள்.பளாக் ஹுயூமர் ராஜாக்கள்.சகோதர இயக்குனர்கள் கோயன் பிரதர்ஸ், இவர்கள் படைப்புகள்  நம்மை யூகிக்க தூண்டுபவை.  அப்படி இருக்குமோ? இப்படி இருக்குமோ? என்று  நம்மை குழப்புபவை, ஆனால் பிடிப்பவை. என்ன அழகாக செயற்கையாக பின்னணி இசைசேர்ப்பே இல்லாமல், கார்மக் மெக்கார்த்தியின் நாவலை சுவை குறையாமல் படமாக்கியுள்ளனர்? ஷூ ஓசை, வாகன உறுமல், நாய் உறுமல், ரேடியட்டர் சத்தம்,சிலிண்டர் சத்தம்  போன்றவை மட்டும் உபயோகித்து இந்த அற்புத படைப்பை தந்து 4 ஆஸ்கரும் வாங்கியிருக்கிறார்கள்? நம்மை கதை செல்லுமிடமெல்லாம் கூட்டி செல்லும் காமிரா கோணங்கள். அருமையான எடிட்டிங். என்று ஒவ்வொரு பிரேம்களையும் பார்த்து பார்த்து செதுக்கிய தரம். எதை சொல்லுவது எதை விடுப்பது?
=============0000============== 
னைவரின் மனம் கவர்ந்த வில்லன் ஜேவியர் பர்டெம் இந்த படத்தின் கதையை கேட்டதும்.எனக்கு கார் ஓட்டத்தெரியாது!என் ஆங்கில உச்சரிப்பு  சுத்த மோசம். எனக்கு வன்முறையே வராது என்றதும். கோயன் சகோ சொன்னது.அதனால் தான் உன்னை அழைத்தோம்!! என்று. படத்தில் ஜேவியர் பர்டத்தின் அந்த பபூன் போன்ற தோற்றம் 1900 களில் அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு பெண் தரகனுடைய ஹேர் ஸ்டைலாம். அதை போலீஸ் டைரி ரெகார்டுகளில் கண்டு லயித்த கோயன் சகோ.இவருக்கு மேக்கப் டெஸ்டின் போது அதே தோற்றத்தில் மேக்கப் போட்டு பரம திருப்தியுற்றனராம். பின்னர் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்த ஜேவியர் பர்டம், ஐயோ என்னக்கொடுமை!!!! இன்னும் 2 மாசத்துக்கு எவளும் என்கூட படுக்கமாட்டாளே!!! என்று விளையாட்டாய் சொன்னாராம்.
=============0000============== 
படத்தின் கதை:-
ண்பதுகளில் மேற்கு டெக்சாஸ் மாகணத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் ஷெரீப் டாம் பெல் (டாமி லீ ஜோன்ஸ்) தன் 25 வருட  ஷெரிஃப் வேலையில் கண்ட மிக கொடூரமான சம்பவங்களை நமக்கு பகிர்வது போல துவங்குகிறது படம்.தன் தந்தையும் தாத்தாவும் வக்கிலுக்கு படித்துவிட்டு ஷெரிஃபாக இருந்தனர் என்றும் அவர்கள் காலத்தில் இது போல கொலை, கொள்ளை ,அக்கிரமங்கள் அதிகம் இல்லை,அவர்கள் துப்பாக்கி கூட வைத்துக்கொண்ட தில்லை , ஆனால் என் நிலைமை பாருங்கள் சமீபத்தில் 14வயது பெண்ணை கொன்ற இளைஞனை நான் மின்சார நாற்காலிக்கு அனுப்பினேன்.அவனை அப்படி அனுப்பவில்லை என்றால் அவன் மீண்டும் கொலை செய்வான்.இது போல நிறைய சம்பவங்கள்.அப்படி ஒருவன் தான் ஆண்டன் சிகர்.என நிறுத்த.

முன் தினம் இரவு பாரில் நடந்த கொலைக்காக சந்தேகத்தின் பேரில் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட ஆண்டன் சிகர் (javier bardem)ஒரே போலீஸ்காரர் கொண்ட போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரர் தன் மேலதிகாரி  டாம் பெல்லுக்கு தொலைபேசுகையில் தன் கை விலங்கால் அவர் கழுத்தை நெறித்து கொன்று பின்னர் தன் பிரதான ஆயுதமான கேட்டில் கன் (அமெரிக்காவில் இறைச்சிக்காக மாடுகளை அறுத்துக் கொல்வதற்கு முன்னர் ஒரு தீயணைப்பான் போல உள்ள இதை வைத்து மாட்டை தொட்டு க்ளிக்கினால் மாடு நிலைகுத்தி நின்று பரலோகம் போய்விடும்.பின்னர் அறுக்க ஏதுவாயிருக்கும்) எடுத்துக் கொண்டு போலீஸ் காரை திருடிக் கொண்டு அகல்கிறான்.

நெடுஞ்சாலையில் முன்னே சென்ற காரை போலீஸ் ஹாரன்  தந்து நிப்பாட்டி,வயது முதிர்ந்தவரை வெளியில் வருமாறு அன்புடன் பணிக்க,அவர் பயத்துடன் என்னையா?ஆபீசர் என்கிறார்.அவர் வெளியே வந்ததும் இவன் அவரை அன்புடன் நெருங்கி கொஞ்சம் தலையை நிமிருங்கள்,கொஞ்சம் என்று பணிக்க அந்த குழாயை அவர் நெற்றியில் வைத்து அழுத்த பால்ரசு குண்டு வெளியேறி அவருக்கு நெற்றிக்கண் திறக்கிறது.பின்னர் குண்டு சிலிண்டருக்குளேயே திரும்புகிறது.இப்போது அந்த காரில் டல்லாஸ் நோக்கி போகிறான் அந்த வித்தியாச சைக்கோ.
காட்சி மாறி:-
றண்ட பாலைவனம்:மான் வேட்டைக்கு வந்த வெல்டர் மாஸ் ( ஜோஷ் ப்ரோளின்) தன் தொலைநோக்கியில் தூரத்தில் ஒருஉயர்ரக வேட்டை நாய் (பிட் புல்) குண்டடியுடன் நொண்டியடிப்பதை பார்த்து,அங்கு விரைய.நிறைய வேட்டை நாய்களும்,முன்னிறவு மெக்ஸிகன் பிரவுன் டோப் போதை மருந்து பரிமாற்றத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்தவர் உடலுமாய் காட்சி தர,ஈ மொய்க்கிறது.ஒரு பிரவுன் டோப் பார்சல்கள் நிறைந்த ஃபோர்ட் பிக்கப் காரில் இருந்த டிரைவர் குற்றுயிராய் இருக்க, அவரிடம் நெருங்கி அவரின் விசை துப்பாக்கியை எடுத்துக் கொண்டு.அவரிடம் பணம் எங்கே?மற்றவர்கள் எங்கே?
என்று கேட்டவன்.அவர் அக்வா (தண்ணீர்) என்கிறார்.இவன் என்னைடம் நீரில்லை என்று சொல்லிவிட்டு அவனின் மேகசினையும் எடுத்த்டுக்கொண்டு விலகுகிறான்,பின்னர் மரத்தடியில் ஒருவன் ஒரு லெதர் சாட்செலுடன் அமர்ந்திருப்பதை கண்டு நோட்டமிட்டு,

நீண்ட நேரம் அசைவின்றி இருக்கவே ,அவன் இறந்திருக்க கூடும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நெருங்கிச் சென்று.அவனின் சில்வர் துப்பாக்கி எடுத்துக் கொண்டு அவனருகில் இருந்த ஸாட்செல் ஐ (லெதர் சூட்கேஸ்)திறக்க அதில் இரண்டு மில்லியன் டாலர் புதிய நோட்டுக்கள் இருப்பதை காண்கிறான்.(உள்ளே பணம்செல்லுமிடம் சொல்லும் டிரான்ஸ்மீட்டர் இருப்பதை உணராமல் )அதை எடுத்துக் கொண்டு போய் தன் ட்ரெயிலரில் பதுக்குகிறான்.தன் மனைவி பணம் எப்படி வந்தது என்று கேட்டு இவன் சொன்னதும்.மனைவி கார்லா (கெல்லி மெக்டொனால்ட்) மருள்கிறாள்.

ரவு தூங்குகையில் அந்த கார் டிரைவர் நீர் கேட்டு தான் நீர் இல்லாததால் கொடுக்க இயலாமையை நொந்துகொண்டு அவருக்கு நீர் அளிக்க கேன் தண்ணீருடன் பாலைவனம் விரைகிறான்.மனைவியிடம் தான் ஒருவேளை திரும்பவில்லையென்றால் தன் அம்மாவை தான் மிகவும் நேசித்ததாய் சொல் என்கிறான்.அவள் குழம்பி அவள் தான் இறந்துவிட்டாளே? என கேட்க,அப்போது நானே அவளை நேரில் பார்த்தால் சொல்கிறேன் .என்கிறான். அந்த பாலைவனம் சென்றவன். அங்கே ட்ரக் டிரைவர் சுடப்பட்டு இறந்திருக்க.இவன் சுதாரிப்பதற்குள் ,தூரத்தில் இவனின் ட்ரக் டயர்கள் சுடப்பட்டு காற்று  வெளியேறும் ஒலி கேட்கிறது,

துங்கியவன் அங்கே மற்றொரு டிரக்கின் வெளிச்சத்திட்டு தெரிய ,அது நகர்ந்து மேலே ஒருவன் சுட்டுக்கொண்டே இவனை துரத்த.இவன் விழுந்து எழுந்து முட்டிபெயர்ந்து பல் உடைந்து தலை தெறிக்க ஒரு ஆற்றில் உருண்டு நீந்தி மறுகரை அடைந்து தன்னை கடைசிவரை பின்னால் துரத்தி வந்த வேட்டை நாயை நனைந்த ஸில்வர் துப்பாக்கியை சூடாக்கி ஊதி சுட.அதோ  குண்டு கிளம்பி நாய் சுருள்கிறது.பொழுதும் விடிகிறது.

டம்பை துளைத்த சிறு கற்களையும் ,முள்ளையும் எடுத்து சட்டையை கிழித்து காயத்திற்கு கட்டி வீடு வருகிறான்.பயந்து போன மனைவியிடம் 2 மில்லியன் டாலர் பணத்துக்காக நீ கொஞ்ச காலம் தலைமறைவாகமாட்டாயா? இனி நீ வால்மார்ட்டிற்கு வேலைக்கு போகவேண்டாம். என்று தேற்றியவன் மனைவியை ஒடெஸ்ஸா என்னும் ஊரில் இருக்கும் அவள் அம்மா வீட்டிற்கு பஸ் ஏற்றிவிட்டு மாஸ் அகல்கிறான். புதையல் காத்த பூதமாகிறான்.

காட்சி மாறி:-

டெக்சாஸின் ஒரு பெட்ரோல் பங்கில் கல்லாவில் இருந்த முதியவர் சிகரை நோக்கி நட்புடன் நீங்கள் வந்த பாதையில் மழை போல?என்று வாயை விட.உங்களுக்கு எப்படி தெரியும் என்றவன்.இவர் நான் உங்களை பார்த்திருக்கிறேன் . என்றதும் உனக்கு அது பற்றி என்ன வந்தது என மடக்கியவன்.இவன் அவரை நெருங்கி சூரிய காந்தி விதைகளை மென்று கொண்டே நீங்கள் எவ்வளவு காலம் இங்கே இருக்கிறீர்கள்?டல்லாசில் எவ்வளவு காலம் இருந்தீர்கள்?இவர் நான் 20 வருடங்களாக இங்கே இருக்கிறேன்.இதற்கு முன்னர் டெம்பிள் டெக்ஸாஸில் இருந்தேன். திருமணமாகி என் மனைவின் அப்பாவுடைய இந்த பெட்ரோல் பங்கினை பார்த்துக்கொள்கிறேன் என மருண்டவர்.

என்றும் யாராலும் மறக்க முடியாத "கால் இட்" காட்சி காணொளி:-
-------------------------------------------

-------------------------------------------

னக்கு கடையை மூட வேண்டும் என சொல்ல.இவன் எப்போதும் எத்தனை மணிக்கு மூடுவீர்? இவர் இருட்டும் போது, இப்போது இருட்டி விட்டதா? எப்போது தூங்கப்போவீர்? இவர் 9-30 மணிக்கு. இவன் அப்டியென்றால் அந்த நேரம் வருகிறேன்.இவர் நான் தூங்கும் போது ஏன் வருகிறீர்.இவன் இந்த பங்கிற்கு பின்னால் இருப்பது தானே உன் வீடு.என்றவன், இவர் இன்னும் மருள.இதுவரை எவ்வளவு அதிகமான தொகையை காயின் டாஸில் பிணையாக வைத்திருப்பீர்? கிழவர்.நான் பிணையே வைத்ததில்லை.சரி இப்போ வையுங்கள். இதில் தான் உங்கள் வாழ்வே அடங்கியுள்ளது. பிரெண்டோ என்கிறான். நாணயத்தை சுண்டி போட்டு பூவா தலையா? சொல்லுங்கள் என காசை விரல்களால் பொத்த.(இந்த காட்சிக்கே இந்த படத்திற்கு ஆஸ்கர் கிடைத்திருக்கும்.எவ்வளவு ஆங்கில படம் பார்த்தாலும் இது போன்ற ஒரு நடிப்பு முன் நிறுத்தப்படவில்லை.ஈடு செய்ய முடியவில்லை .என்ன தெனாவெட்டு.சிரிப்பை வெளியிடா கண்களில் குறும்பு.தாடையை மென்று கொண்டே "கால் இட்" என்று கேட்க.


ந்த கிழவர் (gene jones) தான் வாழ்ந்த  கலைவாழ்க்கைக்கு  அர்த்தமாக இந்த ஒரு காட்சியை சொல்லிக் கொள்ளலாம்.அப்படி ஒரு மருட்சியை கண்களில் காட்டியிருப்பார்.இது போல சின்ன சின்ன விஷயங்களால் தான் இது படம் பார்த்த அனைவரையும் கவர்ந்தது என்பேன். முடிவில் கிழவர் தலை என்று சொல்லி உயிர் பிச்சை பெறுகிறார்.குறும்பன் சிகர் அவரிடம் தான் தந்த காசை கல்லாவில் போடாதீர்,என்று சொல்ல,அவர் திகைத்து ,வேறு எங்கே போட? இது உங்கள் உயிரை காத்த காசு.இதை கல்லாவில் போடாதீர் ,பின்னர் அது சாதாரண காசுகளுடன் கலந்து விடும் என்று சொல்லி அகல்கிறான்.

ப்போது அந்த மெக்ஸிகன் பிரவுன் டோப்  கடத்தல் முதலாளி பணத்தை தேட சிகரை வாடகை கூலியாக அமர்த்துகிறான்.அவனுக்கு சம்பவ இடத்தை காட்ட சொல்லி தன் ஆள் இருவரை அனுப்ப,அங்கு விரைந்த சிகர் மாஸின் ட்ரக்கின்  விஐடி டேக்கை (காரை அடையாளம் காணும் பட்டை) நெம்பி எடுத்துக் கொண்டு,பணம் இருக்கும் இடம் காட்டும் டிரான்ஸ்பாண்டரையும் பெற்றுக் கொண்டு பின்னர்  அவர்கள் இருவரையும் சுட்டு கொல்கிறான்.பின்னர் தான் திருடிய காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிடுகிறான்.அந்த விஐடி டேகின் எண்ணை வைத்து மாஸை தேட புறப்படுகிறான்.

காட்சி மாறி:-
பொழுது விடிகிறது.ஷெரீப் டாம் பெல் தன் ட்ரக்கில் இணைக்கப்பட்ட  கூண்டில் குதிரையில் ஏறிக்கொண்டு கூட தன் சக அதிகாரியையும் கூட்டிக் கொண்டு.அந்த பாலைவனம் சென்று துப்பு துலக்குகின்றனர்.அங்கே அதற்குள்  அந்த ப்ரவுன் டோப் பார்சல்கள் இருந்த ட்ரக் காலி செய்யப்பட்டிருக்கிறது. அங்கே மாஸின் ட்ரக்கை கண்டதும் இது மாஸ் என்பவனுக்கு சொந்தமான வண்டி. என்று சொல்லி ஷெரிஃபும் அவரின் சகாவும்  மாஸின்  வீடு போகின்றனர்.

ப்போது சிகர், மாஸ் குடியிருக்கும் ட்ரெய்லர் செல்கிறான்,அங்கே  இவனுக்கு மாஸின் டெலிபோன் பில் கதவுக்கு அருகே கிடைக்க, எடுத்துக்கொண்டவன் ,ஃப்ரிட்ஜில் இருந்து பால் எடுத்து பருகுகிறான்.பின்னர் மாஸின் குடியிருப்பு  அஸோசியேஷன் அலுவலகம் செல்கிறான்.அங்கு ரிசெப்ஷனில் இருந்த  குண்டு பெண்மணியிடம் (கோயனின் படங்கள் அனைத்திலும் ஏன் ரிசப்ஷனிஸ்ட் பெண்கள் குண்டாக ஓவர் மேக்கப்புடன் நகைப்புக்கிடமாக இருக்கின்றனர்?) மாஸ் வேலை பார்க்கும் அலுவலக விபரம் கிடைக்காமல் போக ,அவளை சுட்டுக்கொல்ல நினைத்தவன்,உள்ளே கழிவறையில் ஃப்ளஷ் சத்தம் கேட்டு இரண்டு சாவு வேண்டாம் என விலகுகிறான்.டெலிபோன் பில்லில் இருந்த எண்களை வைத்து மாஸின் சொந்த ஊர் ஒடெஸ்ஸா என்று அறிகிறான்.அங்கிருந்து அகல்கிறான்.பின்னர் அவ்வூருக்கு காரை விடுகிறான்.

சிறிது நேரத்தில் ஷெரிப் டாம் பெல்லும் அவர் சகாவும் மாஸின் வீடு வந்து அப்போது தான் உடைக்கப்பட்ட கதவின் லாக்கை பார்த்து சிகர் வந்து போனதை கண்டு பிடிக்கின்றனர்.இப்போது இருவரையும் தீவிரமாக தேடுகின்றனர்.டாம் பெல் சிகர் விட்டுப்போன மிச்சப் பாலை பருகுகிறார்.

இப்போதுஆரம்பிக்கிறது பூனை சுண்டெலி ஆட்டம்:-

மாஸ் டாக்ஸி பிடித்து ஒரு மோட்டல் சென்று இரண்டு அறை எடுத்து ஒன்றில் தான் தங்கி,மற்றொன்றில் பணத்தை ஏசி ஷாப்டில் கிரில்லை கழற்றி உள்ளே தள்ளி ஒளித்து வைக்கிறான்.வேட்டை துப்பாக்கியும் ,ரவையும் ,கூடாரம் அடிக்கும் அலுமினிய குழாயும் வாங்கி வந்து அதில் யாருக்கும் சந்தேகம் வாரா வண்ணம் நவீன குழல் துப்பாக்கியும் ,சாட்செல்லை வெளியே எடுக்க தொரட்டியும்  தயாரிக்கிறான்.

காட்சி மாறி:-
ப்போது டாம் பெல்லுக்கு சிகரால் கொல்லப்பட்ட முதியவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வர,அதில் குண்டு துளைத்தது உண்மை,ஆனால் குண்டு காணவில்லை என இருக்க,குழப்பமடைகின்றனர்.அவனின் ஆயுதம் குறித்து ஆராய்கின்றனர்.பின்னர் மாஸின் மனைவியை ஒடிஸ்ஸா என்னும் ஊர் சென்று ஒரு உணவகத்துக்கு வரவழைத்து சந்திக்கிறார். உன் கணவனை சரணடைய சொல்,அந்த மாஃபியாக்காரர்கள் மிகப் பொல்லாதவர்கள்.மாடுகளை அறுப்பதற்கு முன்னர் ஒரு வகை ஆக்ஸிஜன்  சிலிண்டர் துப்பாக்கியைக் கொண்டு உடம்பில் சல்லடை போடுகின்றனர். அதை இப்போதெல்லாம் மனிதனை கொல்ல உபயோகிக்கின்றனர்.இன்னும் இதுபோல நிறைய கேஸுகள் என் அனுபவத்தில் என அவளுக்கு பயமூட்டுகிறார்.உங்களுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு.மாஸ் எப்போது போன் செய்தாலும் எனக்கு தெரிவி.என தன் அட்டையை கொடுத்து விட்டு செல்கிறார்.

காட்சி மாறி:-
ப்போது ஹெராயின் கடத்தல் முதலாளி சிகரின் நடவடிக்கையால் மிகவும் நொந்து போகிறார்.சிகர் தனக்கே வாழைப்பழம் கொடுத்ததை எண்ணி வியந்தவருக்கு,பணத்தை தேட கார்சன் வெல்ஸ் (வுட்டி ஹாரல்சன்-செவென் பவுண்ட்ஸ்) என்பவன்,தான் சிகரை பார்த்திருக்கிறேன்,அவனின் குணாதிசயம் எனக்கு தெரியும் என்றதும். பொறுப்பை ஒப்படைக்க அவன் சிகரையும் மாஸையும் தேடி புறப்படுகிறான்.அவன் போனதும் அதே பொறுப்பை மெக்ஸிக்கர்களான நான்கு பேர் கொண்ட கும்பலிடம் விட்டு மாஸின்  மனைவியை கண்காணி என்று சொல்லுகிறான்.

காட்சி மாறி:-

சிகர் மாஸின் மனைவி சொந்த ஊருரான ஒடெஸ்ஸாவுக்கு பயணிக்கையில்  மாஸ் தங்கியுள்ள மோட்டலை கடக்க, டிரான்ஸ்பாண்டர் அலறுகிறது, காரை உள்ளே செலுத்தி வேவு பார்த்து பார்க் செய்கிறான். இப்போது கையில் பெரிய நவீன சைலன்சர் குழல் துப்பாக்கியும் வைத்திருக்கிறான். உள்ளே சென்று அறை எடுக்கிறான். தன் பெரிய பூட்ஸுகளை கழற்றியவன்.பூனை போல காரிடரில்  நடக்க பணம் இருக்கும் அறை அருகே செல்ல சத்தம் அதிகரிக்க. ட்ரான்ஸ்பாண்டரை அணைத்தவன், ஒரு அறைக்குள் லாக்கை உடைத்தெறிந்து நுழைகிறான்,

ள்ளே கட்டிலில் ஒருவன் எழுந்து சுட இவன் விலகி அவனை சுடுகிறான்.பின்னர் கழிவறை மரசுவற்றை சுட்டுத்தள்ள ,ஒருவன் சுருண்டு மடிகிறான்.உள்ளே நுழைந்தவன் பாத்டப்பில் பயந்து பதுங்கிய ஹோமோ ஒருவன் என்னை விட்டுவிடு ”மேட்”என்று கெஞ்ச.உனக்கு எப்படி நான் ஹோமோ என தெரியும் ? என்று ஷவர் கர்டனை மூடி அவனை சுடுகிறான். பின்னர் அங்கு பணத்தை வெறியுடன் தேடுகிறான்.

க்கத்து அறையில் இருந்த மாஸ் சுதாரித்து பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு முதியவர் காரில் ஹிட்ச் ஹைக்கிங் செய்து (லிஃப்ட் கேட்டு) தொலைவில் உள்ள இன்னொரு ஹோட்டல் சென்று இறங்கி அறை பதிவு செய்து.மேனேஜருக்கு 100டாலர்  பணம் தந்து என்னை தேடி யார் வந்தாலும் எனக்கு தெரிவி.என்கிறான்.பணம் வந்ததும் தூக்கம் போன கதை தான்.ஸ்டாச்சலை பிரித்து பணக்கட்டை ஆராய்ந்தவன் அப்போது தான் பணக்கட்டுக்கு உள்ளே குடைந்து வைக்கப்பட்டிருக்கும் அந்த டிரான்ஸ்பாண்டர் எமனை கண்டு வெளியே வைக்கிறான்.தன் அறைக் கதவையே குறி பார்க்கிறான்.

ப்போது சிகர் இங்கும் வந்து விடுகிறான். ஹோட்டல் மேனேஜரை கொன்றுவிட்டு.மெல்ல காரிடாரில் நடந்து ட்ரான்ஸ்பாண்டர் கருவியின் உதவியுடன் ஒவ்வொரு கதவாக மோப்பம் பிடிக்கிறான்.இவன் மேனேஜருக்கு போன் செய்ய ரிங் போகிறது . இவன் அறை விளக்கை அணைக்கிறான்.

வன் அறை கதவிடுக்கில் சிகரின் கால் தெரிகிறது.மாஸ் ஆயத்தமாகிறான். சிகர் லாவகமாக அடுத்த கதவின் அருகே சென்றுவிட,மாஸ் அப்பா என்று மூச்சு விட ,அப்போது சிகர் கதவின் லாக்கை கேட்டில் கன்  வைத்து பிளக்க அந்த லாக் பறந்து இவன் மேல் விழ,இவன் திரும்ப சுட்டுவிட்டு பணத்துடன் சன்னல் வெழியே குதித்து ஓடி,அவன் துரத்த,இவன் ஒளிந்துகொண்டு ஹோட்டல் மேனேஜர் அறை வந்து பார்க்க,அங்கே பூனை மட்டும் அமைதியாய் பாலை குடிக்க,மேனேஜர் கொல்லப்பட்டிருக்கிறார்.

விரைந்து வெளியேறியவன், சுதாரித்து அங்கே வந்த காரை மறித்து,உள்ளே ஏற ,சிகர் அந்த ஓட்டுனரை தலையில் சுட்டுக்கொல்ல,மேலும் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருக்க,இவனுக்கு வயிற்றின் ஓரத்தில் குண்டு துளைத்து நிறைய ரத்தம் வெளியேற, இவன் லாவகமாய் காரை இயக்கி சாலையில் மெல்ல கடக்கிறான்,சிகர் சுட்ட குண்டுகளால் நிலைகுலைந்தவன் பார்க்கிங்கில் நின்றுகொண்டிருந்த இன்னோரு காரின் மேல் வண்டியை மோத ,மெதுவாய் இறங்கி பதுங்கியவன்,சிகரின் மேல் வெறியேறி அவன் வர காத்திருந்து அவனை மூன்று ரவுண்டு சுட,சிகருக்கு தொடையில் பலத்த காயம் பட்டு அங்கேயிருந்து ஓடி ஒளிகிறான்.இப்போது மாஸ்அந்த காரில் ஏறி இயக்குகிறான்.

மிகுந்த வலியிலும் மெக்ஸிக்கோ எல்லை செல்ல,அங்கே ஆற்று பாலத்தில் நடந்து வந்த சிறுவரிடம் அவன் அணிந்திருந்த கோட்டை  500 டாலர் தந்து வாங்குகிறான்.அவர்களிடம் பீரையும் வாங்கி அருந்தியவன்.ஸாட்செல்லை மெதுவாக பாலத்தின் தடுப்பு வேலியில் ஏறி அங்கு இருக்கும் ஆற்றங்கரையில் அடையாளம் வைத்துக் கொண்டு வீசுகிறான்.மெல்ல இறங்குகிறான்.மயக்கம் வர , வாந்தி எடுக்கிறான்.
  1. மாஸ்  உயிர் பிழைத்தானா?
  2. அவனின் மில்லியனர் கனவு நனவானதா?
  3. மாஸ் தன் மனைவியுடன் சேர்ந்தானா?
  4. இடைத்தரகன் கார்சன் வெல்ஸ் என்ன ஆனான்?
  5. ஷெரீஃப்  டாம் பெல் நிம்மதியாக ஓய்வு பெற்றாரா?
  6. வித்தியாச சைக்கோ சிகர் என்ன ஆனான்?

    போன்றவற்றை  டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
=============0000==============  
இனி படத்தின் முழுக்கதையை படிக்க விரும்புவோர் இக்காணொளியை தாண்டி வந்து படிக்கவும்:-

=============0000============== 
மெதுவாக மெக்ஸிகோவில் கள்ளத்தனமாய் காவலர் தூக்கத்தில் இருக்கும் போது நுழைந்தவன்,ஒரு சர்ச் வாசலில் சுருள்கிறான்.இவனருகில் ஒரு கரோல் பாடகர் குழு  கிடார் இசைத்து பாட விழிக்கிறான்.இவன் அவர்களுக்கு  100 டாலர் ரத்தக்கறை படிந்த பணம் தந்துவிட்டு மயங்க.போலீஸ்காரர்கள் இவனை மெக்ஸிக்கோ மாகாண மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கின்றனர்.

காட்சி மாறி:-

சிகர் இப்போது அடிப்பட்ட சிங்கமாக வலியில் துடிக்கிறான். எந்த மருத்துவமனைக்கும் போக முடியா சூழ்நிலை.ஒரு மருந்துக்கடை முன்னே நின்ற காரின் பெட்ரோல் டாங் மூடியை திறந்து. பஞ்சு உருண்டைகளை உள்ளே போட்டு தன் சட்டை கிழிசலை கிழித்து அதை பெட்ரோல் டாங்கில் முக்கி தீ வைக்க சிறிது நொடியில் கார் வெடிக்கிறது.கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க,மருந்து கடை உள் சென்று மிக சரியாக பார்த்து மரத்து போகும் ஊசி,பஞ்சு,கிருமி நாசினி,ஆல்கஹால் கத்தி எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் உள்ள கிளினிக்கில் நுழைந்து,நோயாளி அறையின் கழிவறையில் புகுகின்றான்,

பிளாஸ்டிக் பேப்பர் விரித்து தன் பெரிய ஷூக்களை ரத்தம் வடிய கழற்றியவன்.தன் பேண்டை கிழித்து எறிகிறான்.பாத்டப்பில் தண்ணீரில் நீந்தியவன்,வெளியேறி கால்களை நீட்டி அம்மணமாக தரையில் அமர்ந்து ,அந்த குண்டு காயத்தை சுற்றி மூன்று முறை மரத்துப்போகும் ஊசி போட்டவன் ,ஸ்டெரிலைஸ் செய்த கத்தியை வைத்து குண்டை கீறி, லாவகமாக நெம்பி எடுத்து. கட்டு போடுகிறான். வலி குறைய ஊசி போட்டுக்கொள்கிறான். கிளினிக்கில் இருந்த பேஷன்ட் ஒருவரின் உடையை அணிந்து வீறு கொண்டு கிளம்புகிறான்.

காட்சி மாறி:-

கார்சன் வெல்ஸ் மருத்துவமனையில் மாஸை சந்தித்து பணம் எங்கே? அதை என்னிடம் தந்துவிடு,உனக்கு அதில் பங்கும் சிகரிடமிருந்து பாதுகாப்பும் தருகிறேன் என்று சொல்கிறான். மாஸ் தன்னிடம் இருந்த பணம் போதையிலும் பெண்களிடம் போனதிலும் செலவாகிவிட்டது, என்று சொல்லி மழுப்புகிறான். கார்சன் சிகரை பற்றி உனக்கு தெரியாது,அவன் எத்தனுக்கு எத்தன். அவன் யாராலும் புரிந்துகொள்ள முடியாதவன்.அவனை பார்த்தும் உயிரோடு இருப்பவர்கள் நான் ,அப்புறம் நீ,அவன் இப்போது உன் மனைவியை தேடி அவள் ஊருக்கு போவான், அவளையும் உன் மாமியாரையும் கொலைசெய்வான் என பயமுறுத்திவிட்டு  மாஸை மனம் மாறினால் பேசு என தன் ஹோட்டல் தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு அகல்கிறான்.

பின்னர் கார்சன் வெல்ஸ், மாஸ் குண்டடிபட்டு மயங்கி விழுந்த இடம் சென்று சோதனையிட, தடுப்பு வேலிக்கு அப்பால் ஆற்றங்கரையில் புதருக்குள் ஒளிந்திருக்கும் சேட்செல்லை பார்க்கிறான். போலீசுக்கு தெரியாமல் எப்படி? அந்த எல்லையோர வேலியை தாண்டி ஆற்றை அடைவது? என யோசிக்கிறான். தன் ஹோட்டல் அறைக்கு போகிறான்.படியேற ,பின்னாலேயே  சிகர் துப்பாக்கியுடன் நிற்கிறான். மனதிற்குள் தன் கதை இன்று முடிந்தது என்று சொல்லிக்கொண்டே  அறைக்குள் நுழைகிறான்.

கார்சன் அவனிடம் தன் ஏடிஎம்ல் 14,000 டாலர்கள் பணம் உள்ளதாயும், தன்னுடன் வந்தால் அதை எடுத்து தருவதாயும் சொல்ல,அவன் ஏளனமாய் பிச்சைக்காசு வேண்டாம்.சாட்சலில் இருந்த பணம் எங்கே? என கேட்டவன், அது ஆற்றங்கரையில் இருப்பதாய் சொல்லியும் நம்பாமல், மாஸின் மருத்துவமனை எங்கே என அறிகிறான். பணத்தை அவனிடம் எப்படியும் வாங்கிவிடுவேன், என்கிறான்.அப்போது போன் மணியடிக்க, நான்காவது மணியில் கார்சனை  அவன்  எதிர்பாரா நொடியில் சைலன்சர் துப்பாக்கியால் சுடுகிறான்.

பின்னர் ரிசீவரை எடுத்தவன்.போனில் எதிர்முனையில் மாஸ் பேச.உனக்கு நான் யார் என்று இந்நேரம் தெரிந்திருக்கும், உன் மனைவி உனக்கு உயிருடன் வேண்டும் என்றால் அந்த பணத்தை என்னிடம் கொண்டு வந்து கொடு என்று மிரட்ட.(சிகர் போன் பேசுகையில் தன காலடியில் ரத்தம் நகர்ந்து வருவதை கண்டு தன கால்களை தூக்கி மெத்தை மேல் வைப்பான், மீண்டும் பேச்சை தொடர்வான் கிளாஸிக்கான காட்சியது ) மாஸ் நான் அதற்கு முன் உன்னை கொன்று பின்னர் தூக்கில் போட்டு விடுவேன் என பதில் சொல்லி போனை பலமுறை அடித்து சாத்துகிறான்.


காட்சி மாறி:-

சிகர் இப்போது மெக்சிக்கன் ப்ரவுன் டோப் கடத்தல் முதலாளியின் அலுவலக கதவின் லாக்கரை  உடைத்து,உள்ளே நுழைந்து அவனை கழுத்தில் சுட்டு கொன்றவன்.அருகே இருந்த அக்கவுண்டண்டை,இன்னும் யார் அந்த பணத்தை தேடுகிறார்கள் என கேட்டு அவனுக்கு உயிர்பிச்சை அளித்து விட்டு வருகிறான்.போகும் வழியில் கார் பழுதாகிவிட.அங்கு உதவிக்கு வந்த ஒரு கோழிகள் வண்டி டிரைவரை கொன்று அந்த காரில் எல் பாசோ  என்னும் நகரம் போகிறான்.

காட்சி மாறி:-

மாஸ் இப்போது மருத்துவமனையில் இருந்து வெளியேறியவன், ஆற்றங்கரையில்  உள்ள செக்போஸ்டிற்கு மருத்துவ உடையுடன் வர,போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுகிறான்.உன்னிடம் உடை கூட இல்லை நீ எப்படி அமெரிக்க எல்லை போகிறாய்.என அவர் கேள்விகள் கேட்க,இவன் தான் ஒரு எக்ஸ் மிலிட்டரி சர்வீஸ் மேன், இரண்டு முறை போரில் இருந்திருக்கிறேன், வியட்நாம் போரில் 1966 முதல் 1968 வரை இருந்தேன். எனசொல்லி அவரிடம் நம்பிக்கையை பெற்று, எக்ஸிட் பெற்று வெளியேறுகிறான். பின்னர் துணிக்கடை சென்றவன் ஆடம்பர துணிவகைகளும், தொப்பி, ஷூக்கள் வாங்குகிறான். அதை அணிந்தவன் ஆற்றங்கரை அருகே சென்று சாட்செல்லை எடுத்துக்கொண்டு பொது தொலைபேசியில் இருந்து கார்லாவுக்கு போன் செய்கிறான்.

தான் எல் பாசோவில் இருப்பதாகவும் அம்மாவை கூட்டிக் கொண்டு இங்கு வந்து விடு என்றும் கூறுகிறான்.அவள் இங்கு வந்தவுடன் அவளிடம் அந்த சாட்சலை தந்து அவளை ஒரு உல்லாசத்தீவிற்கு அனுப்பிவிடுவேன்,அதன் பின்னர் சில நாட்கள் கழித்து அங்கே அவளுடன் வந்து சேர்வேன் என்கிறான். தான் தங்கப்போகும் ஹோட்டல் முகவரியை கூறுகிறான்.அவள் தன் கணவனின் உயிரைக்காக்க பக்தி சிரத்தையுடன் செரிப் டாம் பெல்லிற்கு தகவல் சொல்ல அவர் அங்கு வர விழைகிறார்.

காட்சி மாறி:-

கார்லா தன் தட்டு முட்டு சாமான்களுடன் எல்பாஸோ செல்லும் பேருந்து நிலையத்துக்கு டாக்ஸியில் வர மெக்சிக்கர்களான நான்கு பேர்,கார்லாவை பின் தொடந்து  வந்து அவர்களின் சாமான்களை இறக்க உதவுகின்றனர் ,அழகாய் பேச்சு கொடுத்து அவர்கள் செல்லுமிடம்,ஹோட்டல் விலாசம் கேட்டுக்கொள்கின்றனர்.  நாங்களும் அந்த பகுதி வாசிகள் தான் என்று சொல்கின்றனர் , அன்புடன் இவர்களை ஒரு பேருந்தில்  ஏற்றி அனுப்புகின்றனர். கார்லாவின் புற்று நோயாளியான அம்மா  எல்பாசோ காரர்கள் தான் எவ்வளவு நல்லவர்கள்? என வியக்கின்றனர். இவர்களுக்கு முன் அந்த ஹோட்டலுக்கு மெக்சிக்கர்கள்  காரில் விரைகின்றனர்.

காட்சி மாறி:-

ப்போது மாஸ்  ஹோட்டல் அறையில் குதூகலமாய் மனைவிக்கும் அவள் அம்மாவுக்கும் காத்திருக்கிறான்.பணத்தை ஒரு வழியாக மீட்டு கொண்டு வந்து ஹோட்டல் அறையின் ஏசி ஷாப்டின் உள்ளே வைத்தாகி விட்ட மகிழ்ச்சி வேறு, மனைவியை எதிர்பார்த்து ஜாலிமூடில் இருந்தவனுக்கு பக்கத்து அறை அழகி நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டே பீர்  அருந்த கூப்பிட ,இவன் மறுக்கிறான்.பீரில் ஆரம்பிக்கும் வேறு எங்கோ போய் முடியும் என்கிறான்.

ங்கு வந்த மெக்சிக்க கும்பல் அவனை அடித்து உதைத்து பணம் எங்கே?என கேட்டு மாஸை துன்புறுத்தி ,நீச்சல் குள அழகியை அவன் காதலி என எண்ணி சுட்டுக்கொன்று குளத்தில் மிதக்க விடுகின்றனர்.அதில் நடந்த கைகலப்பில் மாஸ் மெக்ஸிக்கன் ஒருவனை கொல்ல ,மாஸிடம் பணம் பற்றிய பதில் வராததால் அவனையும் சுட்டும் கொன்று அறையை குலைத்து போட்டு தேடியும் பணம் கிடைக்காமல் போலீஸ் வரும் சத்தம் கேட்டு இடத்தை விட்டு அகல்கின்றனர்.இப்போது மூன்று பிணம், ஷெரிஃப்  டாம் பெல்  மாஸ் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்து துணுக்குறுகிறார். உள்ளூர் போலீஸ் அதிகாரியுடன் சேர்ந்து துப்பு துலக்குகிறார்.

ப்போது கார்லாவும் அவள் அம்மாவும் ஹோட்டலுக்குள் நுழைய.தன் கணவன் பிணமாய் கிடக்கும்  காட்சியை கண்டு கார்லா வெடித்து அழுகிறாள்.அப்போது  ஷெரிப் டாம் பெல் கார்லாவை தேற்ற வழியின்றி திகைக்கிறார்.பிரேத பரிசோதனை முடிந்து உள்ளூர் போலீஸ் அதிகாரியிடம் பணம் படுத்தும் பாட்டை பற்றி அங்கலாய்த்தவர், அன்று இரவு ஒரு அனுமானத்தில் சிகர் கண்டிப்பாக மாஸின் அறையில் பணம் தேட வருவான் என நினைத்தபடி நுழைகிறார்.

தே போல ஏசி கிரில் கழற்றி வைக்கப்பட்டுள்ளது.சிகர் இருட்டில் இவரை பார்க்கிறான்.ஆனால் சுடவில்லை.இவருக்கும் சிகர் உள்ளே தான் இருக்கிறான் என தெரியும்ஆனால் அவனை பிடிக்கவில்லை.உள்ளே நுழைந்தவர், கழிவறை விளக்கை போடுகிறார்.அறையை நோட்டமிடுகிறார். இன்னும் மூன்றே நாளில் விருப்ப ஓய்வு பெறும் தமக்கு எதற்கு? இந்த வீண் உயிர் பணயம் !!என கதவை மூடிவிட்டு நல்ல பிள்ளையாக ,தன் மாமா வீட்டிற்கு சென்று தாம் ஓய்வு பெறப்போகும் செய்தியை சொல்கிறார்.டாம் பெல்லின் மாமா முன்னாள் சிறை அதிகாரி,டாம் பெல்லின் இன்னொரு ஷெரிஃப் மாமாவுக்கு கடமையை செய்கையில் சமூக விரோதிகள் சுட்டு வீட்டு  வாசலிலேயே இறந்ததை  நினைவுகூர்கிறார்.

ல்ல வேளை உனக்கு அப்படி ஏதும் ஆகவில்லை என்று சொல்கிறார். இப்போது உள்ள கயவர்கள் நவீன ஆயுதங்கள் வைத்துள்ளனர். ஒவ்வொருவரும் பணத்தை தேடி அலைந்து, நிறைய குற்றங்கள் செய்கின்றனர். இந்த விளையாட்டு நமக்கு சரிப்படாது. இப்போதெல்லாம் முதியோருக்கு காலமில்லை என்கிறார்.முத்தாய்ப்பாக.


காட்சி மாறி:-

புற்றுநோயாலும் மகளின் வாழ்க்கையை நினைத்து வேதனையிலும் இறந்த தன் தாயை  அன்று தான் சவ அடக்கம் செய்துவிட்டு  நிறைய கடன்களுடன்  மன வேதனையில் வீட்டுக்குள் ஓய்வெடுக்க கார்லா நுழைகிறாள், ஏற்கனவே படுக்கை அறையில் ஒயிலாக சிகர் அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்கிறாள். அவனிடம் தன்னிடம் பணம் இல்லை, தான் இப்போது கடனாளி, தன் அம்மாவின் ஈமைச்சடங்கிற்கு கூட தன்னிடம் பணம் இல்லை என மன்றாட.

சிகர், அது பற்றி எனக்கு கவலையில்லை. உன் கணவனுக்கு நான் உன்னை கொல்வதாய் வாக்களித்திருக்கிறேன். அவன் பணத்தை தந்து உன்னை மீட்க தவறிவிட்டான். நான் அவனிடம் சொன்ன படி உன்னை கொல்லப்போகிறேன்.
என்று கூறி  காசை சுண்டி போட்டு பூவா தலையா? என கேட்கிறான்.அவள் மிகுந்த துக்கத்தில் பதில் சொல்லாமல் இருக்க. அவளை சுட்டு கொல்கிறான்.(படத்தில் இக்காட்சி கிடையாது,ஆனால் மெக்கார்த்தியின்  நாவலில் உண்டு)

பின்னர் பதட்டத்தில் காரை விரட்டிக் கொண்டு நான்கு ரோடு கூடும் சந்திப்பில் வேகமாய் இடம் வலம் பாராமல் செல்ல ,அங்கு வலப்புறம் வந்த  கார் இவன் காரில் மோதி அந்த கார் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பரலோகம் போக ,இவனுக்கு முழங்கை உடைந்து எலும்பு வெளியே துருத்திக் கொண்டு வலிக்கத் தொடங்க.காரிலிருந்து வெளியேறுகிறான்.தூரத்தில் போலீஸ் சைரன் கேட்கிறது.

ங்கு வந்த இரு சைக்கிள் சிறுவர்களிடம் சிறுவன் அணிந்திருந்த டீ ஷர்டை கேட்கிறான். அவன் இவனுக்கு உதவ டீஷர்டை கழற்றி கொடுக்க , அதை முடிச்சு போடச் சொல்லி வாங்கியவன்  உடைந்த கைக்கு தூளி கட்டிக்கொண்டு நூறு  டாலர் தந்து யாரிடமும் தன்னைப்பற்றி சொல்லக்கூடாது என்று எதிர்திசையில் விந்தி விந்தி நடந்து , பணத்தை பாதுகாக்க கிளம்புகிறான். அந்த வித்தியாச சைக்கோ.இப்போது அந்த இரு சிறுவர்கள் பணத்துக்காக சண்டைபோட ஆரம்பிகின்றனர்.

=============0000============== 
ப்போது நிகழ்காலத்தில் (2007) முன்னாள் ஷெரிப் டாம் பெல் தன் மனைவியுடன் நல்ல நிம்மதியான வாழ்க்கையை ஒரு தேநீருடன் எதிர் கொள்வது போல் படம் முடிகிறது. முடிந்ததற்கான அடையாளமே இல்லை. எதோ வெறுமையாய் முடித்தது போல தோன்றினாலும்,அதுவே இவர்களின்  அடையாளம். இதில் இயக்குனர்கள் பல விஷயங்களை நம் யூகத்துக்கே விட்டு விட்டார்க்ள்.நம்மையும் யோசிக்க வைத்து படத்துக்கு கதை எழுத வைத்து விட்டார்.இது தான் ஐயா மிக நுட்பமான படைப்பு என்பது.

ந்த படம் பார்த்த அனைவரும் பபூன் போல தோற்றமளிக்கும் ஆண்டன் சிகருக்கு விசிறியாகவே ஆகிவிடுவார்கள்,என்றால் மிகை இல்லை.என்னை கேட்டால் இந்த நூற்றாண்டின் மனம் கவர் வில்லன் என்றே சொல்லுவேன்.என்ன நண்பர்களே சரி தானே?படத்தில் படுக்கையறை காட்சிகளே கிடையாது. ஆனால் கலை நுட்பத்துடன் கூடிய மிகைப்படுத்தப்பட்ட ரத்தம், வன்முறை, தத்ரூபமான சதை கிழிசல்கள்.காயங்கள்,உண்டு. ஆகவே சிறுவர்களுக்கு  ஆன  படம் இல்லை.என் உலக சினிமா தேடலுக்கு இந்த படமே ஆழமாக பிள்ளையார் சுழி போட்டது என்றால் மிகையில்லை.
=============0000============== 
இப்படம் 4 ஆஸ்கரையும்,ஏனைய 93 விருதுகளையும்,44 நாமினேஷன்களையும் பெற்றுள்ளது:-
Best Achievement in Directing
Ethan Coen
Joel Coen

Best Motion Picture of the Year
Scott Rudin
Ethan Coen
Joel Coen

Best Performance by an Actor in a Supporting Role
Javier Bardem

Best Writing, Screenplay Based on Material Previously Produced or Published
Joel Coen
Ethan Coen

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)