இதோ,இன்னொரு சாதனைதமிழர்!!!

அருமை நண்பர்களே!!

இது இன்று, எனக்கு மின் அஞ்சலில் வந்தது.

உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன், நினைத்துப் பார்க்கவே உங்களுக்கு பெருமகிழ்ச்சியாக இல்லை?!!!

திரைப்படங்களை கண்டு ரசியுங்கள், ரசிகர்களே!!!. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் கண்மூடித்தனமாக நம்பி விடவேண்டாம்.

உண்மையான ஹீரோ உங்கள் பகுதியிலெயே நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்,அவர் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவராகவும் இருக்கலாம்.

அவர்களை சந்திக்கும் சமயத்தில் இனியேனும் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் உங்கள் வார்டில் கவுன்சிலர் தேர்தலில் கூட நிற்கக்கூடும். அப்படி நின்றால் கட்சி பேதம் பாராமல், காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.


ப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அதை நினைத்து ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன்.
ன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள்
து CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமைப் பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை
அப்படி என்ன தான் செய்து விட்டார் இவர்?!!!

து நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல். தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார்.
ருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

வர் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, பல விருதுகள் வென்ற செப்-சமையல் கலை வல்லுநர் ஆவார். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டுப் போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கிவிட்டார்.  வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார்
து நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காகவே இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அமமா இவர் குறித்து கவலைப் பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்என்று சொல்லி அழைத்துப் போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த அம்மாநீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்என்று சொல்லிருக்கிறார்

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலாபிஷேகம் முதல் முளைப்பாரி, காவடி, தீப ஆராதனை வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம்முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிறிர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா?!! அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள்.
வர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிச்சென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. 

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே. உங்களுக்கும் முடியும் பட்சத்தில் ஏதாவது உதவி செய்ய:-
 
http://www.akshayatrust.org/contact.php
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in
மொக்கையாக எத்தனையோ ஓட்டுப் போட்டுருக்கிறோம்?!!!. ஒரு நல்ல விசயத்திற்கு  ஓட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் ஓட்டு போடவேண்டிய தளம்
http://heroes.cnn.com/vote.aspx

துவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
=====0000=====
இதை எனக்கு மின் அஞ்சல் அனுப்பிய சுந்தரபாண்டியனுக்கு நன்றி

பாலிவுட் என்னும் பகல்கொள்ளைக்காரர்கள்!!!

அருமை நண்பர்களே!!!
விழித்திருக்கும் போதே கண்ணில் மண்ணை தூவிவிட்டு அலேக்காக அபேஸ் செய்து விட்டு பறக்கும் பகல் கொள்ளையர்களைப் பற்றியும் அவர்கள் திருடிய விதத்தையும் தினத்தந்தி  போன்ற நாளிதழ்களில் விறுவிறுப்பான நடையில் படித்திருப்போம். ஆனால் அவர்களை நேரில் பார்த்திருப்போமா? !!! அதற்கு அவசியமேயில்லை , பாலிவுட்டின் முண்ணணி  நடிகர்கள் , இந்திய ஐகான் அமிதாப் பச்சனையும் சேர்த்து அநேகம் பேர்   பகல் கொள்ளையர்கள் தான், 

சரி, ஏன்? அடுத்தவர் படைப்பை திருடி அதிலிருந்து மறுபடைப்பை உருவாக்கக்கூடாது?!!! 

1.ஆக்கம் மற்றும் அறிவுத்திருட்டு பெருகினால் படைப்பாளிகளுக்கு கற்பனை வறட்சி உருவாகும்,மக்கள் சலிப்படைவர். பல நல்ல படைப்புகள் தோற்றுபோகும், அசலான கற்பனை வளம் கொண்ட படைப்பாளிகள் கூட , சற்றும் யோசிக்காமல் படைப்பு திருடர்களாவர்.

2.போலியையே உண்மை என்று நினைக்கும் மாயையை மக்களிடம் அது தோற்றுவிக்கும், உண்மையான படைப்பாளிக்கு செல்லவேண்டிய நியாயமான கூலி[ராயல்டி],கௌரவம், சென்று சேராது, நிறைய படைப்பாளிகள்  மனமுடைந்து தற்கொலையும் செய்துகொள்வர்.

3.உலக அரங்கில் சீனர்கள் என்றாலே இண்டஸ்ட்ரியல் டிசைன்  & டெக்னாலஜி காபி கேட்ஸ். [தொழிற்நுட்பம் மற்றும் அறிவு சார்பு திருடர்கள்]. இந்தியர்கள் என்றாலே ப்ளேகாரிஸ்ட்ஸ் [ஆக்கம் மற்றும் அறிவு சார்பு திருடர்கள்] என்று பெயர் வாங்கியிருக்கிறோம். அந்த அவப்பெயர் நிரந்தரமாகிவிடும்.

4,எத்தனையோ நல்ல இயக்குனர், நடிகர்களின் பேரலல் சினிமா, ஆல்டர்நேட் சினிமாக்கள் என்று அழைக்கப்படும் மாற்று சினிமாக்கள் இந்த நீங்காத அவப்பெயரினால் வெளியே தெரியாமலோ , யாரும் பாராமலோ போக நேரிடும்.  மொத்தத்தில் புதுமை செத்துவிடும்.

5.தவிர படைப்பாளிகளுக்கு நிரந்தரமாக 9-00 டு 6 -00 பார்க்கும் வேலை இருப்பது இல்லை, இவ்வாறு ஒருவனின் படைப்பை அவனுக்கு தெரியாமல் மறுஆக்கம் செய்வதால். அவனது தொடர் வருமானம் நின்று போகிறது, மூன்றாவது திருடனும் உருவாவான்,எப்படி? இதோ இப்படித்தான்:-

டீரெய்ல்ட் என்று ஒரு ஹாலிவுட் படம், அதை இம்ரான் ஹஸ்மி என்னும் பலே திருடன் , திருடி த ட்ரெய்ன் என்னும் பெயரில் நடிப்பதை கேள்விப்பட்ட கௌதம் வாசுதேவ மேனன், விட்டேனா பார்?!!! என்று பச்சைகிளி முத்துச்சரம் படத்தை போட்டிபோட்டுக்கொண்டு  மூன்றே மாதத்தில் திருடி எடுத்து அவர்களுக்கு மூன்று மாதம் முன்பே ரிலீஸ் செய்தார். இப்படித்தான் நமக்கு அவப்பெயர் உருவாகும்.

ரு அந்நிய படைப்பிற்கான கூலியை கொடுத்து உரிமை வாங்கி இந்திய மொழியில் எடுத்தாலும் மூலத்தின் படைப்பாளியின் பெயரை போடவேண்டியது அவசியமாகிறது.   இல்லை என்றால், அதை மொழிபெயர்த்து, மறுஆக்கம் செய்தவரே அந்த படைப்பை உருவாக்கியதாக பிம்பம் உருவாகிவிடும். அதுவும் ஒருவகையில்  திருட்டுதான்!!!.

விர அகில உலக அரங்கில் ஹிந்திப்படங்கள் தான் இந்திய சினிமாக்கள் என நம்ப வைக்கப்பட்டுள்ளன.  ஹாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகுந்த பொருட்செலவிலும் தயாரிக்கப்படுகின்றன.   இந்தியாவில் ஹிந்தி அலுவல் மொழியாக உள்ள 11 மாநில மக்களாலும்,  இந்தியாவில் ஹிந்தி மொழி தெரியாத மாநில மக்களாலும் ,  அகில உலக அளவில் பாகிஸ்தான்,  பங்களாதேஷ், நேபால், ஃபிஜி போன்ற நாட்டு மக்களாலும் பிரதானமாக விரும்பி பார்க்கப்படுகின்றன.

விர அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மத்தியகிழக்கு, ஆஃப்ரிக்கா, கிழக்கு, தெற்கு ஆசியாவில் குடியேறிய மக்களாலும் ஆரவார வரவேற்புடன் விரும்பி பார்க்கப்படுவதால்,  ஹிந்தி சினிமாவில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை,  ஆகவே பாலிவுட்டில் படமெடுப்பது என்பது கொலைக்குத்து குடும்ப வியாபாரம். 

ருந்தும் இந்த பாலிவுட் பகல் கொள்ளையர்கள், காப்பிரைட் வாங்கியோ படைப்பாளிக்கு க்ரெடிட் கொடுத்தோ படம் எடுப்பதேயில்லை. உண்மையான படைப்பாளிக்கு மனச்சிதைவு, தாழ்வு மனப்பான்மை, சுயபச்சாதாபம் தருவதில் பாலிவுட்டை,நம் கோலிவுட் தோற்கடிக்க, ஏன் கிட்டத்தில் கூட நெருங்கவே முடியாது.  அங்கு எடுக்கப்படும் அநேகம் படத்தின் கதை,  இசை, பாடல் வரிகள், நாவல்கள், கேமரா கோணங்கள், எடிட்டிங்குகள். உடை, செட்கள் அப்படியே  அகில உலக சினிமாக்களில் இருந்து திருடி மறுஆக்கம் செய்தவையே.
====0000====
ப்படி , பாலிவுட்டில் வெளிவந்த இப்போதைய சமீபத்திய பகல் கொள்ளை தான் நாக் அவுட்.  இது போன் பூத் என்னும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற படத்தின் அப்பட்டமான தழுவல் .  போன் பூத் படத்தை  HBO , ACTION  மற்றும் ஏனைய தொலைக்காட்சிகளில் எத்தனை முறை ஒளிபரப்பியிருப்பார்கள்? என்ற கணக்கே இருக்காது.  சிறு இந்திய  நகரங்களில் வசிக்கும் மக்களுக்கும் அந்த படமும் அதில் கொலின் ஃபேரல், கீஃபர் சதர்லேண்ட் & ஃபாரஸ்ட் விடேகரின் அபாரமான நடிப்பும் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அதையே இந்த பலே திருடர்கள் 4 பாடல்கள் சேர்த்து துகிலுரிந்து விட்டனர்.இதில் திருட்டுக்கு உடந்தையாக பேரலல் சினிமாவின் தலைக்கல் என்று புகழப்படும் இர்ஃபான் கான் வேறு,வேதனை வெட்கம் அவமானம்.பற்றாததற்கு அருமையான நம்மூர் கேமராமேன் நட்ராஜ் சுப்ரமண்யம் வேறு உண்டு.
நாக் அவுட் படத்தின் முன்னோட்ட காணொளி.
====0000==== 






====0000====
படைப்பு கொள்ளையர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
irected by Mani Shankar
Produced by Sohail Maklai
Written by Mani Shankar
Starring Sanjay Dutt
Irfan Khan
Kangana Ranaut
Gulshan Grover
Sushant Singh
Music by Gourov Dasgupta
Vishal Dadlani (lyrics)
Panchhi Jalonvi (lyrics)
Shellee (lyrics)
Cinematography N Natarajan Subramaniam
Distributed by Sohail Maklai Entertainment Pvt Ltd
Aap Entertainment Limited
Release date(s) 15 October 2010 (2010-10-15)
Country India
Language Hindi
Budget 30 crore (approx)
தே பாலிவுட் திருட்டு பயங்கரவாதி சஞ்சய்தத்தின் அதிமுக்கிய திருட்டான ஜிந்தா பற்றி அறிவீர்கள், அல்லது மாட்டீர்கள். அது ஓல்டு பாய் என்ற  கொரிய நாட்டின் உலகசினிமா காவியத்தின் அப்பட்டமான திருட்டு மறு ஆக்கமாகும். மோனாலிசா ஓவியத்துக்கு மீசை வரைந்தது போல, லொல்லுசபாவில் வெற்றிப்படங்களை இமிடேட் செய்வது போல அந்த படத்தை வன்புணர்ந்திருந்தான் இந்த பாலிவுட் பயங்கரவாதி. நீங்கள் ஓல்டுபாய் என்னும் ஒரிஜினலையும் இந்த பாலிவுட் அசிங்கத்தையும் ஒரு சேரப் பார்த்திருந்தால் என் அடங்கா கோபத்துக்கான ஊற்றுக்கண் புரியும், மிக அருமையான யாராலும் யோசிக்க முடியாத ஒரு கதையை உருகுலைத்து, சிதைத்து, அதில்  தேசி செண்டிமெண்ட்டையும்  சேர்த்து, 4 பாடல்களை இடையில் புகுத்தி,  மகா அற்பத்தனமாக நடித்தும் அப்படத்தை வீணடித்திருந்தனர்.



ஓல்டுபாய் ஒரிஜினல் இசை வடிவத்தின் அப்பட்டமான தழுவலை பின்னாளில்       2 ஆஸ்கர் விருதுகள் பெற்ற ரசுல் பூக்குட்டியே முன்னிருந்து திருடியுள்ளார். இசைப்புயலின் சைனாடவுனில் இருந்து ஒரு ட்ராக்கையும் உருவி    ஸிந்தா குழுவினர் க்ளைமாக்ஸில் போட்டுவிட்டனர்.  எல்லாவற்றிற்கும் மேல் ஸிந்தா குழுவினர், ஒரு காமெடி செய்தனர்.   ALL COPYRIGHT’S RESERVED TO WHITE FEATHER FILMS, MUMBAI, INDIA. என்று டிஸ்க்லெய்மர் போட்டனரே பார்க்கனும்!!!!. இதைப்பார்த்த பின்னும் உயிரோடு இருக்கும் ஓல்ட் பாய் பட இயக்குனர்    Chan-wook Park   ஒரு இரும்பு மனிதர் தானே.!!!

தில் என்ன ஒரு கொடுமை என்றால்?!!! இவர்கள் மீது அறிவுத் திருட்டு வழக்கு போட்டு, உலக அரங்கில் பாலிவுட்டினரை தலைகுனிய வைத்த Show East என்னும் கொரியப்பட கம்பெனி இதுபோல அறிவுத்திருடர்களின்  சிபாரிசினாலும் எதிர்ப்புகளாலும் இழுத்தே மூடப்பட்டுவிட்டது!!!, ஆகவே அந்த ஆக்கம் மற்றும் அறிவுத்திருட்டு வழக்கிலிருந்து, ஸிந்தா கும்பல் வெண்ணையில் கத்தி வழுக்கிச் செல்வதைப்போல தப்பி விட்டனர்.


துவரையில்  பாலிவுட் குற்றவாளிகள், எந்தவிதமான சட்டரீதியான நடவடிக்கைகளையும் சந்திக்கவேயில்லையே !!!! என்பது தான் என் ஆதங்கமாக இருக்கிறது, இப்போது தான் ஒன்று புரிகிறது இசைப்புயல் ஏன் தன்னுடைய ஒவ்வொரு படைப்புக்கான உரிமையையும் பேடண்ட் செய்கிறார்?!!!.காப்பிரைட் வாங்குகிறார் என்று.?!!! அவர் மட்டும் அப்படி செய்யா விட்டால் கூச்சமே இல்லாமல் இசைப்புயலின் பல இசைக்கோர்வைகளை இவர்கள்  சூறையாடியிருப்பார்கள் என்பது திண்ணம்!!!.

பாங்காக் போய் எடுக்கப்படும் ஏனைய ஹிந்தி சினிமாக்கள் துகிலுரியப்பட்ட திருட்டுக்கதையை கொண்டிருக்கிறது.த ட்ரெய்ன் என்னும் படம்,அது டீரெய்ல்டின் திருட்டு மறுஆக்கம். மர்டர் என்னும் படம் அன்ஃபெய்த்ஃபுல் என்னும் ஹாலிவுட் படத்தின் திருட்டு மறு ஆக்கம். இதில் டயான் லேன் என்னும் நடிகையின் உடல்மொழி,அவரது உணர்ச்சிகள்,அவரது நடிப்பை அப்படியே ஈயடித்தான் காப்பி அடித்திருப்பார் உத்தமி மல்லிகா ஷெராவத்.மூன்று வருடம் முன்பு பெல்லி பட்டன் என்று யூட்யூபில் அடித்து தேடினால் மேற்கண்ட இரண்டு வீடியோக்கள் முண்டியடித்து வந்தன. அப்படி தேடிப்பிடித்து கண்டு நொந்தது இந்த படம்.

====0000====
ப்படியே ஒருவர். காண்டே என்னும் இந்தியன் ஐகான் அமிதாப் பச்சன் இதே பாலிவுட் திருட்டு பயங்கரவாதி சஞ்சய்தத்துடன் கூடி நடித்த படமும் பார்த்திருக்க வேண்டும், நான் மட்டும் குவெண்டின் டாரண்டினோவாக இருந்தால் இந்த திருடர்களை கழுவில் ஏற்றியிருப்பேன், அந்தப் படம் முதல் 20 நிமிடம் யூசுவல் ச்ஸ்பெக்ஸ்  படத்தின் அப்பட்டமான தழுவலையும், அடுத்த 20 நிமிடம் ஹீட் என்னும் படத்தின் அப்பட்டமான தழுவலையும், அடுத்த முழுப்பாதியும் ரிசர்வாயர் டாக்ஸ் என்னும் உலகப்புகழ்பெற்ற படத்தின் தழுவலாகும். இறைவன் என ஒருவன் இருந்தால் இவர்களின் கொட்டத்தை அடக்கட்டும் என்று தான் படம் பார்த்த பின்னர் நினைக்கத்தோன்றியது, அப்படி ஒரு கிராதகர்கள். ஆனால் பேச்சு மட்டும் அகில உலகுக்கே சக்கரவர்த்தி போல பேசுவார்கள்.இதில் அந்த ஹெல்வீடிக்கா என்னும் எழுத்து வடிவத்தைக்கூட காப்பி அடித்துள்ளதை பாருங்கள்.என்னால் முடியவில்லை என்றாலும் கட்டுரை இன்னும் முடியவில்லை.
====0000==== 
 ம்மில் ஏகம் பேர் 21 என்னும் கெவின்ஸ்பேசி நடித்த படத்தை பார்த்திருப்போம், இந்த நாரப்பாடைகள்  அதை திருடி டீன் பட்டி  [மூன்று திருட்டு நாய்கள்] என்னும் பெயரில் படம் எடுத்ததுமில்லாமல் , அதில் ரிச்சர்ட் அட்டன்பரோவின்  படத்தில் காந்தியாகவே வாழ்ந்த  பென் கிங்ஸ்லியையும், நம்மூர் நடிகர் மாதவனையும் கூட அந்த திருட்டுக்கு உடந்தையாக்கிவிட்டனர்.  ஆனால் படம் படு தோல்வி. இந்த  படமும் பார்த்துவிட்டு சொல்லுங்கள். இதில் என்ன கொடுமை என்றால் அமெரிக்க படத்தையே திருடி எடுத்துவிட்டு,அதே அமெரிக்க இயக்குனருக்கு , அமெரிக்காவிலேயே சிறப்பு காட்சி போட்டுக்காட்டி கூடவே அம்ர்ந்து படம் பார்க்கும் சாமர்த்தியம் நம் இயக்குனருக்கு சுட்டுப் போட்டாலும் வரவே வராது!!! என்ன நண்பர்களே சரிதானே?!!!
====0000====
முடியாது-தொடரும்

பச்ச மஞ்ச செவப்பு தமிழன்டா!!!

ருமை நண்பர்களே!!!

நாஸா விஞ்ஞானி  கே.ஆர். ஸ்ரீதர்
மிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!! என்பது கேப்டன் காலால் உதைக்கும் முன் சொல்லும் வசனமாயிருந்தாலும், அப்படி நெஞ்சு நிமிர்த்தி நாம் கர்வமாக நிற்கும் படியான தமிழரைப்பற்றிய  செய்தி இது,!!! முன்பே இது பற்றி இந்த வார ஜூவியில் நண்பர்கள் படித்திருக்கலாம்,  இவரைப் பற்றி இப்போது மின்னஞ்சலிலும் வரத் தொடங்கிவிட்டது, 

ண்பர்கள் முடிந்த வரை இதை நன்கு பரப்பி தமிழனுக்கு புகழ் சேர்க்க வேண்டுகிறேன்.  இந்த நேரத்தில் இவர் என்ன இந்தியாவுக்கா? வேலைசெய்தார் ? அப்படி என்று குரல் எழும்பக்கூடும்!!! இந்தியாவில் ஒருவர் சாதிக்கவேண்டுமென்றால், திறமை மட்டுமிருந்தால் போதாது, அசுர பணபலம், ஆள்பலம் வேண்டும், தவிர சிபாரிசு, டர்ட்டி பாலிடிக்ஸ் என்று, இவரைப்போன்ற தமிழகத்தை சேர்ந்த ஆர்வலர்களை வளரவேவிடாமல் முடக்கியிருப்பார்கள். அப்படியும் மீறி ஒருவர் வந்தால் அது நிகழ மறுத்த அற்புதமே!!!

ப்படி? பாகிஸ்தானி என்றாலே டாக்ஸி ட்ரைவர் என்று சொல்கிறோமோ? அதே போல  , இந்தியன் என்றாலே ஹிந்திக்காரன், இந்திய படம் என்றாலே கோலிவுட்டில் தயாராகும் திருட்டுக்கதை ஹிந்திப்படம், இந்திய மொழி என்றாலே ஹிந்தி என்றே இங்குள்ள அநேகம் பேர் நினைக்கின்றனர். அதை தீர்க்கமாக முறியடித்து தென் இந்தியாவை, தமிழகத்தை உலகுக்கு வெளிச்சம்போட்டு காட்டியவர்.    இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்,  விஸ்வநாதன் ஆனந்த்,   கார் ரேசிங் வீரரான நரேன் கார்த்திகேயன்.  சில நாட்கள் முன்பு ரூபாய்க்கான குறியீட்டை வடித்த D.உதயகுமார். இந்த வரிசையில் உலகப்புகழை நமக்கு இப்போது கொடுத்துள்ள தமிழர் ஒரு நாசா விஞ்ஞானி!!!.

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

தில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.

மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.

னால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது.  என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.

னி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும்.

ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித்தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.

விர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.


சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.


ல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம். உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.


ரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும்  அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது.


வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. 100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

ன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.

ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
======0000======

தூங்கா நகரம் மதுரை!!!

ருமை நண்பர்களே!!!
என்னும் தினமலரில் வெளியான கட்டுரை படித்தேன், என்ன ஒரு தீர்க்கமான அலசல் அது ?!!!, ஒரு மதுரைடவுன்காரனான எனக்கு உண்மையின் நிதர்சனம் சுட்டது, உரைத்தது. மிக நல்ல கட்டுரை, கட்டுரையையும் அதன் கீழே உள்ள மதுரைக்காரர்களின் கருத்துக்களையும் அவசியம் படிக்கவும். மதுரை ஒரு போட்டி நிறைந்த ஊர், எந்த தரமில்லாத பொருளையும் அங்கே சென்னை போன்ற பெருநகரங்களில் விற்பதைப்போல விற்றுவிடமுடியாது.மருந்து கடைக்கு கூட பெரிய விளம்பர போர்டு வைப்பார்கள், நீங்கள் ஜீவண்டோன் என்னும் புஷ்டிலேகிய விளம்பர ஆளுயர கட்வுட் பார்த்திருக்கிறீர்களா?!!! அது இல்லாத மருந்து கடையே மதுரையில் இருக்காது.

ரே தெருவில் 50 முதல் 100 வரை தையல் கடைகள் உண்டு, ஒரே தெருவில் எதிரெதிரே லாட்ஜுகள்,நகைக்கடை,துணிக்கடை, அடகுகடை,அச்சகங்கள், காபி பார்கள், கண்ணாடி வளையல் கடைகள், அலங்கார நகை கடைகள், மொத்த விலை துணிக்கடைகள், கண் கண்ணாடி கடைகள், ஃபேன்சி ஐடம் கடைகள், ஜூஸ்பார்கள்,பேக்,சூட்கேஸ் கடைகள், பட விநியோகஸ்தர் அலுவலகங்கள்.  பட ஃப்ரேம்  போடும் கடைகள் என ஏகம் உண்டு,   தரம் நன்றாயிருந்தால் தான் கூட்டம் முண்டியடிக்கும்.

சென்னையில் நான் குடித்தது போல வெந்நீர் போன்ற டீ,காபியை நான் மதுரையில் குடித்ததில்லை.  அவ்வளவு ஏன்?!!!  ஒரு ஐம்பது பைசா கோக்கோ மிட்டாய் கூட தரமாகவே இருந்து வந்திருக்கிறது. சென்னை மளிகை கடைகள் போல சர்கரையில் ரவையும்,டீத்தூளில் புளியங்கொட்டைத்தூளும்,மிளகில் பப்பாளி விதையும்,  தேங்காய் எண்ணெயில் சிக்குபிடித்த பழைய காலாவதியான எண்ணெயையும் கலக்கவே மாட்டார்கள். கொழும்புத் தேங்காய் எண்ணெய் என்றால் அது கொழும்புவில் இருந்து வரும். சென்னையில்,  மாட்டுத்தீவனமான தவிட்டில் கூட தேங்காய் சிரட்டையை உடைத்து அரைத்து கலப்பதுபோல சாமர்த்தியம் இவர்களுக்கு வரவே வராது. ஒரு வரட்டி வாங்கினாலும் அதில் நயம் இருக்கும். 100 போஸ்டர் ஒட்ட காசு வாங்கினால் 100 போஸ்டர் ஒட்டுவார்கள், சென்னையைப்போல 50ஐ எடைக்கு போட்டுவிட மாட்டார்கள்.

விர மதுரை மக்கள் தெய்வநம்பிக்கை கொண்டவர்கள்,ஸ்கூட்டர் நடுத்தெருவில் நிறுத்திவிட்டு சாமி கும்பிட்டு தான் பலர் நாளையே துவக்குவர். கடை மூடும் போது சூறை போட்டுவிட்டு தான் பலர் மூடுவார்கள்.  நிறைய பேர் மண்ணுக்கும் மனிதனுக்கும் நெருக்கம் விட்டுப்போகக்கூடாது என்பதால் செருப்பே போடமாட்டார்கள், நானும் சிறுவயதில் பள்ளிக்கு செருப்பே போட்டுச்சென்றதில்லை. ஏகம் பேர், ரகசியமாகவே பேசத்தெரியாமல் சத்தமாக மட்டுமே பேசும் மனிதர்கள்,  முன் பின் தெரியா வெளியாட்களுக்கும்  அப்படி  நின்று  உதவுவார்கள்.

துரை மக்கள் கடுமையான உழைப்பாளிகள், காலை 8-30 மணிக்கு கடை திறக்க 8-00 மணிக்கே வந்துவிடுவர். இரவு 8-30 வரை கூட சுணங்காமல் வேலை செய்வார்கள். அப்படி ஒரு உழைப்பை எல்லாம் சென்னையில் எதிர்பார்க்கவே முடியாது. தலைக்கு எண்ணெய் தடவி திருநீர் இடாமல் சிறார்களை பார்க்கவே முடியாது, சிறுமிகள் என்றால் எண்ணெய் தடவி படிய வகிடெடுத்து வாரி இருப்பார்கள்.

நான் மதுரை டவுன்ஹால் ரோட்டின் அருகே இருக்கும் ரோசரி சர்ச் துவக்கப்பள்ளியில் தான் 1முதல் 3 வரை படித்தேன்.  இங்கிருந்து  சென்னைக்கு போகும் போது வெள்ளந்தியாக போய் அண்ணே, அங்கிட்டு போங்க, இங்கிட்டு வாங்க, களவாணிங்க,  ஆட்டைய போட்டுடுவாய்ங்க, பைக்கட்டு,  டாவு அடிக்கிறான்[பொய் சொல்றான்] என்றிருக்கிறேன். இங்கு சென்னையில் அதே டாவு என்பதற்கு சைட் அடிக்கிறான் என்றனர்.

நான் பாட்டுக்கு இங்கே எழுதிக்கொண்டே போவேன். என்ன தான் சென்னையில் 25வருடமாக இருக்கும் போதும், அந்த மதுரை சித்திரைதிருவிழா கொண்டாட்டம், நவராத்திரி, பிள்ளையார் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல் என்று எல்லா லீவிலும் அங்கே போய் பழைய நண்பர்களை கண்டு களித்தது.  செண்ட்ரல் ,நியூசினிமாவில் ஓடும் மொக்கை படங்களைக்கூட மூன்று காட்சியும் பாஸ் வாங்கி பார்த்தது,

பால சண்முகானந்தாவில் ஃப்ரூட்மிக்சர் குடித்தது, ஒய் எம் சி யே வில் போய் புளியங்காய் அடித்தது. ஒரு கோவில் விடாமல் சூடம் அட்டை ,தெருவில் தீப்பெட்டி படம், ஃப்லிம், பொறுக்கியது, விதவிதமாக தின்பண்டம் வாங்கி தின்றது என்னால் மறக்கவே முடியாதது, மாடர்ன் ரெஸ்டாரண்ட்டில் 2 இட்லி வாங்கினால் ஒரு சொம்பு நிறைய சாம்பார் கொடுப்பார்கள், அதையே சாப்பாட்டில் கலந்து  சாப்பிடும் டெக்னிக்கும் எனக்கு நன்கு தெரியும்,
 
ப்படியே ஆர்யபவன் பின்னே உள்ள காய்கறி மார்கெட்டுக்குள் போனால் 50பைசாவுக்கு வெண்ணை தளதளக்க ஒரு பாட்டி சொம்பு நிறைய மோர் கொடுப்பார்.1ரூபாய்க்கு டம்ளர் நிறைய கட்டி எருமை தயிர் கிடைக்கும்.காலையில் கீரைக்காரி வந்துவிடுவார்,

ல்லா குடும்பத்திற்கும் சிறு கோர்ட் சிவில் வழக்காவது இருக்கும், எதாவது குடும்பத்தில் சொத்து தராமல் ஏமாற்றப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டு வாசலில் வந்து நின்று தின்ன எதாவது கேட்பார்,எனக்கு ராஜப்பா என்னும் ஒரு மனநோயாளியை தெரியும்,அவரை வைத்தே எங்கள் காம்பவுண்டு குழ்ந்தைகளுக்கு சோறு ஊட்டியுள்ளனர்.

ங்கள் பாட்டி வீட்டுக்கு எதிரே இருந்த கோமதி காஃபி ஓட்டலில்,கோதுமை அல்வாவும், ஓலையில் பொட்டலம் கட்டிய சேவும், பக்கோடாவும் இருக்கும்.பெட்டிக்கடையில் சணலில் நெருப்பு புகைந்துகொண்டே இருக்கும்,அதை கொண்டே சிகரெட் பீடி பற்றவைப்பார்கள்.இரவு மொட்டைமாடியில் தியேட்டர் சப்தம் தாலாட்டி தாமதமாக தூங்கவைக்கும்,விடியற்காலையில் அடிபம்பு சத்தமும், வெங்கல குடம் உருளும் சப்தமும் உங்களை எழுப்பி விட்டு விடும். மொட்டை மாடியில் நின்று பார்த்தால் மீனாட்சிஅம்மன் கோவில் கோபுர தரிசனம் அருமையாக இருக்கும்,சூரிய உதயமும் அஸ்தமனமும் அமர்க்களமாயிருக்கும்.

ராஜாபார்லி சூஸ்பரி, கேக் தூள், டொரினோ போன்றவை ஆயுளுக்கும்  மறக்க முடியாதவை. மதுரையில் மழை என்றாலும் வெயில் என்றாலும் உக்கிரம் தான். செம ஊர் அது. எங்கே மதுரையை பற்றி எழுதியிருந்தாலும், நின்று படித்துவிட்டு தான் வரவைக்கும், மந்திர சொல் அது. சொக்கா!!!, சொக்கா!!!.

ருந்தும் மக்கள் அங்கிருந்துந்து இடம் பெயர்ந்து கொண்டே தான் இருகின்றனர். அது ஒரு மென்சோகம், அதை அந்தக் கட்டுரை அழகாக விளக்கியது.  சொல்லவந்ததை யாரோ சட்டென சொன்னாற்போல இருந்தது. யாராவது மதுரைக்காரர்கள், அதுவும் சென்ட்ரல் சினிமா பக்கம் இருப்பவர்கள் இருந்தால் அவசியம் பின்னூட்டவும் .

நீங்கள் எந்த ஊர் சென்றாலும் மிக வசதியாக வாழ்ந்தாலும் மதுரை மண்ணுக்கு என்று மாற்று குறையாத பெருமை உண்டு, அது மனதை விட்டு நீங்காத வண்ணம் எப்போதுமே இருக்கும்.
======0000======
இது மதுரை குறித்த தமிழில் வெளியான முக்கியமான விக்கிபீடியா கட்டுரை

மதுரையை    ஐரோப்பிய புகைப்படக்கலை வல்லுனர் ஊச்சப்பன் என்பவர் கடந்த 20 வருடங்களாக சுற்றி உலகத்தரத்தில் புகைப்படங்கள் எடுத்து,கண்காட்சிகள் நடத்தி வருகிறார்,இந்த சுட்டியில் அவரின் புகைப்படத்தொகுப்பை ஒருவர் பார்க்கலாம்.


இது ஊச்சப்பனின் மதுரை குறித்த காணொளி வடிவம்:-

ஸ்விம்மிங் பூல்[2003][18+][Swimming Pool][இங்கிலாந்து]

ண்பர்களே!!!
ஸ்விம்மிங் பூல் என்னும்  படம் பார்த்தேன்.   மிகவும் அழகான ரசனையுடன் எடுக்கப்பட்டுள்ளது.  படம் முடிந்தவுடன் இயக்குனர் ஃப்ரான்காய்ஸ் ஓசோன்,  இயக்கிய படங்கள் எல்லாவற்றையுமே தரவிறக்கிவிட்டேன்  ,  ஒவ்வொன்றுமே சர்ச்சைக்குரியவை, நம் வீட்டாரோடு பார்க்கமுடியாதவை. வாழ்வை அணு அணுவாக ரசிக்கும்,ருசிக்கும் மேல்தட்டு மக்களை சித்தரிக்கும் படங்களே இவர் அதிகம் இயங்கும்  தளமாக இருக்கிறது.

டமெங்கும் ஒளிவுமறைவில்லா நிர்வாணம்.  இவர் தேர்ந்தெடுக்கும் இளம் பெண்கள் பாத்திரத்தின் வயது அதிகம்போனால் 18 இருக்கலாம். தவிர  ஒரு அழகும் அறிவுடனும் சேர்ந்த முதிர்ந்த பெண்ணின் பாத்திரமும் வைத்து கதையை சித்தரிக்கிறார். பெண்களின் மார்பகங்களை இவ்வளவு அழகாக காட்டி நான் பார்த்ததில்லை.  இந்த இயக்குனர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்.   இருந்தும்  இவரின் பெண்களின் மீதான  அபார ரசனை ஒவ்வொரு ஃப்ரேமிலும் மிளிர்கிறது.   நோ ஹைடிங். ஸ்ட்ரெய்ட்ஃபார்வர்ட்னெஸ் தான் முழுதும். இனி இவரின் ஒவ்வொரு படமாய் பார்க்கவேண்டும். சாரு எழுதி வியக்கும் அழகிய ஃப்ரான்ஸை அப்படியே கண்முன்  நிறுத்திருக்கிறார் இயக்குனர். 

francois-ozon
டத்தில் அங்கே இலக்கியவாதிகள் இயங்கும் முறையை அப்படியே புடம் போட்டும் காட்டியிருக்கிறார். பார்த்து முடித்ததும் ஒன்று விளங்கியது, அமெரிக்க, ஆங்கில, ஐரோப்பிய கலைஞர்களுக்கு மலம் கழிப்பதற்கு கூட அபார மூட் தேவைப்படுகின்றது. கால் அங்குல மயிரை பிடுங்குவதற்கு கூட, [முடி வெட்டுவதைச் சொன்னேன் சார்] ஆற அமர  விஞ்ஞானி ரேஞ்சுக்கு யோசிக்கின்றனர். பில்ட் அப் கொடுக்கின்றனர். முன்கூட்டியே தீர்மானித்து தான் செய்கின்றனர். ஆனால்  நம் கலைஞர்கள் சுவிட்ச் போட்டதும் கதை எழுதுகிறோம், பதிவெழுதுகிறோம்,பத்தி எழுதுகிறோம், பாட்டெழுதுகிறோம், பாட்டு பாடுகிறோம், இசையமைக்கிறோம், படத்துக்கு சீன் சொல்கிறோம். டிசைன் செய்கிறோம். மென்பொருளுக்கு கோட் எழுதுகிறோம். ஆமாம் சாமி சொல்கிறோம். ஹிஹி. இது பரம்பரை ஜீன்வழி வருவது, இதை அவ்வளவு எளிதாய் மாற்றமுடியாது. இவ்வளவு பில்டப் கொடுப்பதால் கால் அங்குல மயிரை பிடுங்கியவர்கள் வி ஆர் ஃப்ரம் சிவிலைஸ்ட் பார்ட் ஆஃப் த வேர்ல்ட் என்கின்றனர். ஸ்ஸ்ஸ் முடியலை. எனவே ஆங்கில ஐரோப்பிய இலக்கியவாதிகளுக்கு கொடுத்து வைத்த மகராசன்கள் என்னும் சொல்லே மிகவும் சரியாயிருக்கும்!!!.  

யக்குனர் இதில் முடிவில் நம்மை மிகத் தெளிவாக குழப்புகிறார், இருந்தாலும் பிடிக்கிறது, கலைப்பட விரும்பிகள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம். ஃப்ரான்ஸை ஏன்? கேளிக்கைகளுக்கும் வாழ்வின் ஒவ்வொரு அணுவையும் ரசித்து ருசித்து அனுபவிப்பதற்க்கும் ஏற்ற இடம் என்கின்றனர். என ஒருவர் படத்தை பார்த்து விளங்கிக் கொள்ளலாம். இது போல மிக அருமையான படங்களை மிகக்குறைந்த செலவில்  எடுக்கமுடியும் என நினைக்கவே பெருமை தான். படத்தில் எந்த ஒரு ஒளிவுமறைவுமின்றி மேல்தட்டு படைப்பாளிகளின் வாழ்கைமுறையை மிக அழகாக விமர்சித்திருக்கிறார்,  கண்ணாடி வீட்டினுள் இருந்து கல் எறிவதைப்போன்ற இவரின் படைப்புகள், ஒளிவு மறைவில்லாத கூடாக் காமத்தை அளவின்றி கொண்டிருக்கின்றன. ஃப்ரான்ஸு நாட்டு கலைசினிமாவில் இவரது படைப்புகள் முக்கிய இடத்தையும் வகிக்கின்றன.
===========0000===========
படத்தின் கதை:-

ங்கிலாந்தில் வசிக்கும் சாரா மார்ட்டன் [Charlotte Rampling]என்னும் புகழ்பெற்ற மர்ம நாவல் எழுத்தாளருக்கு கற்பனை வறட்சி ஏற்படுகிறது,  புதிதாக நாவல் எழுத  கரு கிடைக்கவில்லை. இருந்தும் அவரின் பதிப்பாளர்  ஜான் பாஸ்லோட் [Charles Dance]இவர் தொடர்ந்து க்ரைம் த்ரில்லர் வகை மர்ம நாவல்கள் எழுதுவதையே விரும்புகிறார். அதையே மக்கள் இவரிடம் எதிர்பார்ப்பார்கள் என அறிவுரைக்கிறார். இவரை புக்கர் ப்ரைஸ் உட்பட எந்த விருதுக்கும் பரிந்துரைக்கமாட்டேன் என்றிருக்கிறார்.  சாராவை தன் உடற்பசிக்கும், பணத்தேவைக்கும்  தயவு தாட்சண்யமின்றி பயன்படுத்திக்கொள்கிறார்.


சாராவுக்கு மர்மநாவல்கள் மிகவும்அலுக்கிறது, அவரின் நாவலை யாராவது படித்துவிட்டு பாராட்டினாலும் கூட வெறுப்பாயிருக்கிறது, புதிதாய் படைக்கவேண்டும் என்னும் வேட்கை வாட்ட, ஜானிடம் தான் எரோடிக் த்ரில்லர்  எழுதட்டுமா? என்று அனுமதிக்கு கேட்க, ஜான் உனக்கு தேவையான அளவுக்கு பணம் இருக்கிறது,மேலும் எதற்கு அதீத புகழ்?

சாரா நீ வெற்றிகரமாய் இயங்கும் க்ரைம்,இன்வெஸ்டிகேஷன்,மர்டர் கொண்ட மக்களிடம் பெயர் பெற்ற டோர்வெல் சீரீஸிலேயே இயங்கு.   நீ  ஃப்ரான்ஸில் லகோஸ்டேக்கு அருகே உள்ள என் பண்ணைவீட்டுக்கு சிறிது நாள் போய் தங்கி விட்டுவா,!!! மலைத்தொடரின் அருகாமையுடன் பிரம்மாண்டமான வீட்டில் பெரிய அற்புதமான நீச்சல்குளமும்  இருக்கிறது,  மிகப்பெரிய பண்ணையும் இருக்கிறது,

நீ திரும்ப இங்கிலாந்து வரும்போது நிச்சயம் கற்பனை வறட்சி நீங்கி வருவாய், நானும் எனக்கு வேலை ஒழிந்தால் வந்து பார்க்கிறேன். என்று அனுப்ப, இவர் ரயிலில் வருகிறார். மிகஅழகான ஊர். அந்த தேசத்தில் பிறந்தவர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள், பார்க்கும் இடமெல்லாம் அப்படி ஒரு அழகு, ஃப்ரான்சுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு அழகும்? பசுமையும், எழிலும்,தட்பவெப்பமும் என்று நம்மை ஏங்க வைக்கிறது.

வீடும் இவருக்கு மிகவும் பிடித்துப்போகிறது, தனக்கு நீச்சல்குளம் நோக்கிய ஒரு படுக்கைஅறையை தேர்ந்தெடுக்கிறார்.கிராமத்துக்குள் போய் தனக்கு வேண்டிய வெண்ணெய், பழங்கள், பால், ரொட்டி, ஒயின், தேன் வாங்கிக்கொள்கிறார். சுத்தமான காற்றை ஆசைதீர அனுபவிக்கிறார். ஒவ்வொரு அணுவையும் ரசிக்கிறார். ஆனால் கதைக்கான கரு தான் அமையவில்லை, சன்னலை மூடுகிறார், திறக்கிறார். குளிக்கிறார், ரசனையாக உடுத்துகிறார். நீச்சல் குளம் தார்பாய் போட்டு மூடியிருப்பதால் நீந்தி குளிக்கமுடியவில்லை. தொலைக்காட்சி பார்க்கிறார்., பிராண்டி குடிக்கிறார். ஈசிச் சேரை போட்டுக் கொண்டு நீச்சல் குளத்தின் அருகே அமர்கிறார். அப்போதும் திருப்தியடையாமல் தோட்டத்து கஃபேவில் வந்து அமர்கிறார்.

ரவில் கீழே கார் சத்தம் கேட்க, திருடனோ ? என பயந்தவர், தன் பதிப்பாளரின் மகள் அழகிய ஜூலி[Ludivine Sagnier] ,தன் பெட்டி படுக்கைகளுடன் பண்ணை வீட்டுக்குள் வரவும், மிகவும் கடுப்பாகிறார், இவரின் தனிமை தான் கதை எழுத கருவையே உருவாக்கும், அதை யாரும் குலைப்பதை துளியும் விரும்பவில்லை. ஜூலி இவருடன் நட்பாய் இருக்க முயன்றாலும், சாராவின் பொறாமையும் தலைக்கனமும், 20களில் உள்ள ஜூலியிடம் நட்பாய் இருக்க முடியவில்லை. சாராவுக்கு நீச்சல்குளத்தில் இலைகள் விழுந்திருப்பதால் நீந்தபிடிக்கவில்லை. ஆனால் ஜூலி பிறந்தமேனியாகவே நீந்துகிறாள். தோட்டக்காரன் மார்சல் கிழ்வனிடம் சொல்லி நீச்சல் குளத்தை சாரா நீந்த தூர்வாருகிறாள் ஜூலி.

ஜூலி அபார அழகி, பக்கத்து ஊரில் எதோ எளிய வேலை பார்க்கிறாள், அவளின் அம்மாவுக்கும் பதிப்பாளருக்கும் முன்பே மணமுறிவு ஏற்பட்டிருக்கிறது, அது குறித்து ஜான் சாராவிடம் சொல்லாத கடுப்பு வேறு, அதைப்பற்றி மேலும் அறியத்துடிக்கும் ஆஃப்டர் ஆல் பெண் மனம் வேறு.  சாரா தூங்குகையில் ஜூலி குளியல் தொட்டியில் நீர் நிரப்பி குளிக்கிறாள். சத்தமாகவும் பாட்டு போட்டு ஆடுகிறாள்.


ருந்தும் சாரா ஜூலியிடம் மெல்ல  நெருங்கி போட்டு வாங்குகிறாள்,  ஜூலியோ விடாக்கண்டி. எதையும் சொல்லாமல் அம்மா மணமுறிவால் பாதிக்கப்பட்டு, வேறு ஒரு சிற்றூரில் வசிக்கிறாள். அவள் எழுதிய  ஒரு அருமையான புதினம் பதிப்பாளர் அப்பா ஜானால் தீக்கிறையாக்கப்பட்டது என்கிறாள். மேலதிக விபரங்களை ஜானிடமே கேள் என்கிறாள். ஜான் இவளின் பணத்தை, புகழை, திறமையை திருடித்தின்னுவதை ஊகித்து கண்டும் பிடிக்கிறாள்.எள்ளி நகையாடுகிறாள்.
 
சாரா அவளுடன் வெளியே சிரித்தவள். உள்ளே புழுங்குகிறாள். ஒரு கட்டத்தில் இத்தனை அழகும், புதிருமான ஜூலியையே நாம் ஏன் ? கதைக்கான கருவாக கொள்ளக்கூடாது ?!!! என்று ஜூலியையே பிரதான பாத்திரமாக மையப்படுத்தி ஸ்விம்மிங் பூல் என்னும் நாவலை தன் மடிக்கணிணியில் ரகசியமாக எழுதுகிறார். ஜூலியை தொடர்கிறார்.அணு அணுவாய் உணர்கிறார்.

ஜூலி பண்ணைவீட்டில் திறந்த மார்புகளுடனே திரிபவள்.  தவிர நித்ய கல்யாணி சாரி நித்ய சம்போகி. வயது, வரைமுறையில்லாத ஆடவர் உறவுகளை விரும்புபவள். ஒருநாள் முப்பது வயது ஆணை கூட்டி வந்து ஹாலிலேயே வைத்து புணர்ந்தவள். பொழுது விடிந்ததும் சோஃபாவிலேயே தூங்குகிறாள். அப்பாவின் அன்புக்கு மிகவும் ஏங்கியதால், அப்பாவின் வயதிலிருக்கும் 50வயது மதிக்கத்தக்க ஆணையும் அழைத்து வந்து இரவு சம்போகிக்கிறாள்.

தைக்கண்டு கோபப்பட்ட சாராவிடம் ஜூலி அந்த வயதான ஆண், பன்றிபோல குறட்டை விடுகிறான் என்பதால தான்  சோஃபாவில் படுத்ததாக சொல்கிறாள்.  எல்லாவற்றிற்கும் மேலாக தோட்டக்கார கிழவன் மார்சல் மற்றும் முந்தைய நாள் இரவு வந்த 50 வயது ஆளுடன் திறந்தவெளியில் 3சம் ஆர்கியும் வைத்துக்கொள்கிறாள். ஜூலியின் உள்ளாடை தோட்டத்தில் கிடக்க, அதை சிலாகித்து பொறுக்கி வந்த சாரா, பெரும் கற்பனை வெடித்துக் கிளம்ப, இன்பரசக்கதைகளை ஆர்வமாய் வ[அ]டிக்கிறாள்.

சாராவும் இப்போது நன்கு உடுத்துகிறாள்.  வெளியே அடிக்கடி கிராமத்துக்கு போகிறாள், அங்கே கஃபேயை நிர்வகிக்கும்  நாற்பதுகளில் இருக்கும் ஃப்ரான்கை வித்தியாசமாக, நாளடைவில் ரசித்துப் பார்க்கத் துவங்குகிறாள். தோட்டக்கார கிழவன் மார்சல், தான் நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு சன்பாத் எடுக்கையில் தன்னை வெறிப்பதையும் உள்ளூர ரசிக்கிறாள்.  இரண்டு நாள் காணாமல் போன ஜூலி கண்களிலும் கன்னத்திலும் வீக்கத்துடன் வீடு வர,         பதறியவள் ஜூலியிடம் என்ன ஆயிற்று ?!!! எனக் கேட்க,  ஒரு ஆண் இவளை அடித்து இன்புற நினைத்து தோற்றதாயும், தான் அவனை ரத்தம் வர திருப்பி அடித்ததாயும் பெருமையுடன் சொல்கிறாள்.

ரு நாள் சாரா வெளியே சென்றிருக்கும் சமயம் ஜூலி , சாராவின் அறைக்குள் வந்து சாரா இதுவரை தன்னை மையப்பாத்திரமாய் வைத்து எழுதிய நாவலின் பக்கங்களை வேகமாக படித்து கரைத்து குடிக்கிறாள். எழுத்தாளரின் கற்பனைக்கு ஏது வேலி? அந்த மெய்யும் பொய்யுமான சம்பங்களின் கோர்வையை கிரகித்து உள்வாங்கி கிரங்கிய ஜூலி அதுவாகவே உருமாறுகிறாள்.

ள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்பது போல கொஞ்சநாளாக , சாரா ரசிக்கும் ஃப்ரான்கைகூட ஜூலி விட்டுவைக்காமல், இரவு மது விருந்துக்கு கூட்டிவருகிறாள். தாம் இவ்வூரிலேயே வளர்ந்தமையால் ஊரில் தனக்கு தெரியாத ஆண்களே இல்லை என்கிறாள். மூவரும் கஞ்சா புகைக்கின்றனர். பிராண்டி அருந்துகின்றனர். இசைக்கு நடனம் ஆடுகின்றனர். ஃப்ரான்குக்கு வயதான, மெச்சூர்டான, நாவலாசிரியையான சாராவையே மிகவும் பிடித்திருக்கிறது.  நடனம் முடிந்தவுடன் ஃப்ரான்க் கிளம்புகிறேன் என்று சொல்ல, ஜூலி அவனை நீச்சல் குளத்துக்கு நீந்த அழைக்கிறாள்,

ஃப்ரான்க் முடியாது என்கிறான், ஜூலியோ சாரா நீந்த வந்தால் நீ வருவாய்   தானே ?!!! என்று மடக்க, அவன் மௌனிக்க, சாரா தனக்கு தூங்கவேண்டும் என்று மேலே சென்றவள், படுக்கையறை பால்கனி வழியாக நீச்சல் குளத்தை பொறாமையோடு பார்க்க, அங்கே உல்லாசமாய் முழு நிர்வாணமாக நீந்தும் இருவரையும் பார்த்து பொருமுகிறாள், நீந்தி முடித்ததும் குளத்தின் பக்கவாட்டு திட்டில் வைத்து  ஜூலி ஃப்ரான்கிற்கு ஆர்வமாய் வாய்புணர்ச்சி கொடுப்பதையும்   அவஸ்தையுடன் பார்க்கிறாள்.

ஃப்ரான்கிற்கோ ஆனந்தம் . சாராவோ உள்ளே தீய்ந்து கருகியவள்,ஒரு கல்லை எடுத்து நீச்சல் குளத்தில் எறிய, ஃப்ரான்க் தர்மசங்கடப்பட்டவன் . விருட்டென ஜூலியை விட்டு விலகி ஆடைகள் அணிந்து கிளம்ப, மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஜூலி, அது தடைபடவும் மிகுந்த ஆக்ரோஷமாகி ஃப்ரான்கிடம் சண்டை போடுகிறாள். சாராவுக்கு குரூர திருப்தியுடன் தூக்கமும் வர உள்ளே போகிறாள்.

றுநாள் நீச்சல்குளம் தார்ப்பாயால் மூடப்பட்டிருக்கிறது. சாரா அதன் ராட்டினத்தை சுற்றி தார்பாயை விளக்கியவள், அங்கே சிகப்பு நிற காற்றடித்த மிதவை மிதப்பதை பார்க்கிறாள். அங்கே தரையில் ரத்தகறையையும் பார்க்கிறாள்.  இவளுக்கு பதட்டம் தொற்றிக்கொள்கிறது. ஃப்ரான்கை ஊர் முழுக்க மொபெட்டில் சென்று தேடுகிறாள். ஃப்ரான்க் ஒரு தனியன் என அறிகிறாள். தோட்டக்காரனின் வீடு எங்கே ? எனக் கேட்டு விசாரித்து அங்கே செல்ல.அங்கே அவரின் குள்ள மகளைப்பார்த்து, மார்சலை தன் வீட்டுக்கு வந்துபோகுமாறு சொல்ல சொல்கிறார். ஜூலி பற்றி அவளிடம் விசாரிக்க, அவள் ஜூலியை தெரியும் நல்ல அழகி என்கிறாள். அவள் அம்மா பற்றி கேட்க, அவள் கார் விபத்தில் இறந்துவிட்டாள். எனச் சொல்லி கதவு சாத்துகிறாள்.

சாரா வீட்டுக்கு வந்தவள் சிகப்பு காற்றடித்த மிதவையில் ஜூலி நீந்தி மிதப்பதை பார்க்கிறாள். அங்கே இருந்த ரத்த துளி யாருடையது ? என கோபமாய் கேட்க, ஜூலி, தான் கையை முன்பு அறுத்துக்கொண்டேன், அந்த ரத்தம் என்று பிதற்ற, சாரா,  அவளை உண்மையை சொல், உன் அம்மா இறந்துவிட்டாள் தானே?!!! நீ ஃப்ரான்கை கொன்றாய் தானே !!!? என பிடித்து உலுக்க, அவள் சாராவிடம் எல்லாம் உன்னால் தான்!!!. எல்லாம் உன் நாவலுக்காகத்தான்!!! என்கிறாள்.

இனி என்ன ஆகும்?!!!
1.சாரா நாவலில் அப்படி என்ன தான் எழுதியிருந்தாள்?
2.ஜூலி ஃப்ரான்கை அன்று என்ன தான் செய்தாள்?
3.சாரா தன் கதையின் கருவான ஜூலிக்கு என்ன கைமாறு செய்தாள்?
4.சாரா தன் ஸ்விம்மிங் பூல் என்னும் நாவலை ஜானிடம் கொடுத்து வெளியிட்டாரா?
போன்றவற்றை மிகுந்த சுவாரஸ்யங்களுடன் டிவிடியில் பாருங்கள். இயக்குனர் நம்மை தெளிவாய் கதைக்குள் கதை வைத்து குழப்பியிருக்கிறார், அதையும் அனுபவியுங்கள்.படம் தரவிறக்க சுட்டி

படத்தின் யூட்யூப் முன்னோட்ட காணொளி:-
===========0000===========

===========0000===========
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து;-
Directed by François Ozon
Produced by Olivier Delbosc
Written by François Ozon
Emmanuèle Bernheim
Starring Charlotte Rampling
Ludivine Sagnier
Charles Dance
Distributed by Focus Features
Release date(s) May 18, 2003 (2003-05-18) (Cannes)
July 2, 2003 (2003-07-02)
Running time 94 minutes
Country France
United Kingdom
Language English
French
Gross revenue $22,441,323
===========0000===========
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)