ஃப்ளாஷ் பேக்ஸ் ஆஃப் ய ஃபூல்[Flashbacks of a Fool] [2008] [இங்கிலாந்து] [18+]

நண்பர்களே!!!
ஃப்ளாஷ் பேக்ஸ் ஆஃப் ய ஃபூல் [ஒரு முட்டாளின் மலரும் நினைவுகள்] என்னும் மிகச்சிறந்த படத்தை இன்று பார்த்தேன்,மிகவும் நல்ல கதையும், டேனியல்  க்ரெக் மற்றும் பலரின் ஒப்பற்ற நடிப்பும், அபாரமான சுற்றுப் புறங்களையும், ஒளிப்பதிவையும் தன்னகத்தே கொண்டிருக்கும் படம், இயக்குனர் பெய்லி வால்ஷுக்கு இது முதல் படம் என்றால் நம்புவது கடினமே, நல்ல நேர்த்தியான கதை,திரைக்கதை இயக்கம் இவருடய பங்களிப்பில்.இது போல நல்ல படங்கள் பார்ப்பதற்கு பல மொன்னை மொக்கை படங்களை கடந்து போகவேண்டியிருக்கிறது.உலக சினிமா ரசிகர்கள் வாழ்வில் தவறவிடக்கூடாத படம் இது. ஒரு போதை அடிமை,ஸ்த்ரிலோலன், & குடிகாரனது வாழ்க்கையின் முடிவு மிக கோரமானதாக இருக்கும் இன்னும் வழமையை மீறி அவன் வாழ்வை புதுப்பொலிவுடன் எதிர்கொள்வது போன்ற முடிவை நான் மிகவும் ரசித்தேன்.மனதுக்கு இதமான படம்.

படத்தின் கதை:-
நம் அன்றாட உலகில் சாதாரண மாந்தர்களுக்கே வாழ்ந்து கெடுதல் என்பது மிகவும் கொடுமையானது,அப்படி இருக்கையில் ஒரு நடிகன் வாழ்ந்து கெடுதல் லைம்லைட்டில் இருந்து சுத்தமாக வழக்கொழிந்து போதல் என்பது  எத்தனை சித்திரவதையானது?!!!.அப்படி வாழ்ந்து கெடுதலின் துவக்கத்தில் சோபையிழந்து கொண்டிருக்கும் ஓர் ஹாலிவுட் நடிகன் ஜோ [ டேனியல் க்ரேக்] இவனின் குடி,போதைமருந்து பழக்கங்களினால் இவனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் பறிபோகின்றன, இவன் வாழும்  கடற்கரையை ஒட்டிய பெரிய க்ராண்ட் ஹவுஸ் வீடு மட்டுமே சம்பாத்தியத்தில் உருப்படியாக தங்கியது. இவனின் அநேக சொத்துக்கள் இவனின் ஊதாரித்தனமான குடி, ஹெராயின் போதை, மற்றும் தினப்படி பல மாதுக்களுடனான 3ஸம் ஆர்கி கும்மாளம் என கரைந்து கொண்டே வருகின்றன, யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போல இவன் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்வதை ரசிக்கிறான்,ஆகையால் எதிர்காலத்தைப்பற்றி சிந்தையே இல்லாமல் இருக்கிறான். இவனை நாளடைவில் அயலாருக்கு கூட பிடிக்காமல் போகிறது, இவன் வெளியே வந்தாலே இவனிடம் வம்பிழுத்து தூற்ற அலைகின்றனர் சிலர். இவனிடம் வலிய வந்து விருந்தாகும் மாடல் பெண்கள் கூட இவனிடம் பணத்தை கறக்கவே பார்க்கின்றனர், இது போன்றதொரு சூழலில் இவனின் ஒரே நம்பிக்கை  கருப்பின பெண் காரியதரிசி ஒபேலியா மட்டுமே, அவள் இவனுக்கு புத்திமதி சொல்லிச் சொல்லியே அலுத்தும் போய்விடுகிறாள், வேறு வேலை மாற உத்தேசித்தவளுக்கு ஜோ மாதம் 700டாலர் சம்பள உயர்வும் தருகிறான்.

ஜோவிற்கு அவ்வப்போது சிஸ்டர் ஜேன் என்னும் ஒரு பெண் வந்து உயர்வகை ஹெராயின் போதை மருந்தை விற்றுவிட்டுப் போகிறாள். அன்று அவள் ஜோவை வந்து சந்திக்கையில் வரும் வழியில் நடைபாதையில் ஒருவன் இறந்து கிடந்தான் என்கிறாள், நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, இயற்கை சீற்றம், பேரழிவு, நாமே படத்தில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறோம், என்று அங்கலாய்க்கிறாள், ஒரு போதை மருந்து விற்பவள் சமுதாய சீர்கேடுகள் குறித்து பெரிதும் கவலைப்படுவதை ஜோ அவஸ்தையோடும் சகித்துக்கொண்டுமே கேட்கிறான், அவளிடமிருந்து ஐநூறு டாலருக்கு ஐந்து ஹெராயின் பொட்டலங்களைப் பெறுகிறான்.அவளை வழியனுப்பி வைக்கிறான்.

வனுடைய முந்தைய மாத செலவு கணக்கு வழக்குகளை பார்த்த உதவியாளப் பெண், நீயே ஒரு செக்ஸ் சிம்பல்,நீ ஏன் 1000 டாலர் பணத்தை 976 ப்ரீமியம்  போன் செக்ஸ் லைனுக்கு கட்டி பேசுகிறாய்?என்கிறாள்,அதற்கு ஜோ, நான் என் அடையாளத்தை மறைத்து வாழ விரும்புகிறேன்,ஆகவே என் எண்ணம்  போல இருக்கிறேன்,என்னை நான் உன் கண்களால் பார்ப்பதை வெறுக்கிறேன்,என்று தத்துவங்கள் பேசுகிறான். அன்று ஜோ தன் வீட்டிற்குள் ஒரு ப்ரூஸ்ஸெல்ஸ் க்ரிஃப்ஃபான் [Brussels Griffon]வகை குள்ளசாதி நாய் அலைவதைப்பார்த்து விட்டு கடுப்பாகிறான்,அது முந்தைய நாள் இரவை அங்கே கழித்த ஆப்பிள் என்பவளுக்கு சொந்தமான நாய் என அறிந்து இன்னும் கடுப்பாகிறான், இது ஒன்றும் பெட் க்ரீச் அல்ல என்று அரற்றுகிறான், தான் இப்போது தன் ஏஜெண்டை அடுத்த பட விஷயமாக சந்திக்க கடற்கரை ஓட்டலுக்கு செல்கிறேன் அங்கே வந்து தன் காரில் இருக்கும் நாயை கொண்டு சென்றுவிடு என ஆப்பிளை எச்சரிக்கிறான் ஜோ .

நாயைத் தொட்டால் அதன் முடி தன்னுடைய விலையுயர்ந்த உடையில் ஒட்டிக்கொள்ளும் என்று அருவருத்த ஜோ, ஒபேலியாவிடம் சொல்லி அதை காரின் பின்னிருக்கையில் விடச் சொல்ல, அந்த நாய் ஒபேலியாவின் மூக்கை கீறி விடுகிறது, அதே நேரம் பார்த்து அங்கே விரைந்து வந்த பக்கத்து வீட்டு கிழவி வேறு போலீசுக்கு போன் செய்து ஜோ உதவியாளரை அடித்ஹ்டு விட்டான் என சொல்ல எத்தனிக்க,ஒபேலியா அவளை தடுக்கிறாள். அவளுக்கு முதலுதவி செய்கையிலேயே அவருக்கு அவரின் அம்மாவிடமிருந்து போன் வருகிறது, முதலில் எப்படி சொல்லுவது? என தயங்கிய அம்மா, ஜோவின் பால்ய நண்பன் பூட் மூளைக்குச் செல்லும்  நரம்பில் ரத்தம் உறைந்து இறந்து விட்டான் என்றுச் சொல்ல, அதிர்ச்சி அடைகிறான் ஜோ.

ச்செய்தியை ஜோவால் ஜீரணிக்கவே முடியவில்லை, அது தந்த சோகத்துடனே கடற்கரை ஓட்டல் உணவகத்தில் அவனது ஏஜண்ட்டையும் தான் நடிக்கப்போகும் அடுத்த படத்தின் இளம் இயக்குனரையும் சந்திக்கிறான், இவனிடம் நேருக்கு நேர் பேச பயந்த அந்த இளம் இயக்குனர் கழிவறைக்கு செல்வதாய் ஏஜெண்டுக்கு கண்ணைக் காட்டிச் செல்ல,அந்த ஏஜெண்ட் புதிய படத்தின் கதையில் ஒரு மாற்றம் இருப்பதாகவும்,கதாபாத்திரத்திலும் மாற்றம் செய்யப்பட்டதாகவும்,அந்த நாயகன் வேடத்துக்கு இளமையான நடிகரை நடிக்க வைக்க எண்ணுவதாகவும் இழுத்தவண்ணம் இருக்க, தொடர்ந்து அந்த ஏஜெண்ட் அடுத்தடுத்து தனக்கு வந்த செல்ப்போன் அழைப்புகளை ஏற்றுப்பேசிய வண்ணம் இருக்கிறான்.

த்திரம் முற்றிய ஜோ,அந்த போனை பிடுங்கியவன் தூக்கி ஜன்னலுக்கு வெளியே இருக்கும் கடலை நோக்கி எறிகிறான்.ஆத்திரம் முற்றிய ஏஜண்ட், இனி உனக்கு சினிமா வாய்ப்புகள் எதுவுமே பிரகாசமாக இல்லை, இத்துடன் முடிந்தாய், உன்னுடன் பணியாற்ற யாருக்குமே பிடிக்கவில்லை,நீ உன் ஏஜெண்டை உடனே மாற்றிக்கொள், என்று கழற்றி விட்டு விடுகிறான். மிக அவமானகரமாக உணர்கிறான் ஜோ, வெளியே வந்தால் வேலட் பார்க்கிங்கில் இவனது ரேஞ்ச் ரோவர் காரை ஓட்டி வந்து தந்த ஒரு ட்ரைவர், இவரின் நாயை சிலாகிக்கிறான்,ஜாக் நிக்கல்சன் அது போன்ற நாயை ஒரு படத்தில் வாக்கிங் கூட்ட்ச் செல்வார் என புகழ,அப்போது தான் இவனது  காரில் இருக்கும் நாயை அந்த மாடல்பெண் ஆப்பிள் வாங்கிச்செல்லாததும் ஜோவுக்கு தெரிகிறது, ஆத்திரம் முற்றிய ஜோ,அவளை அழைத்து எச்சரிக்க,அவள் இன்னும் சில தினங்கள் மட்டும் நாயை பார்த்துக்கொள் என்று உதவி கேட்கிறாள்,இவன் ஏச ஆரம்பிக்க,அவள் போனில் சிக்னல் இழப்பதாய் சொல்லிவிட்டு துண்டித்தும்விடுகிறாள்.  நாயை அந்த ஹோட்டலின் ட்ரைவருக்கே  வலுக்கட்டாயமாக பரிசளித்த ஜோ, மிக அதிகமாக மது அருந்தியவன், கடற்கரைக்கு சென்று போதையிலேயே அபாயகரமாக நீந்துகிறார்.இப்போது அவருக்கு சிறுவயது நினைவலைகள் தொடர்ந்து வந்த வண்ணமிருக்கிறது.இப்போது ஒரு அழகிய சிற்றூரின் கடற்கரை  பார்த்த வீட்டில் வசிக்கும் 16 வய்து ஜோவை நாம் ,பார்க்கிறோம்,விதவைத்தாயும்,அழகிய சிறுமி ஜெஸ்ஸி என்னும் தங்கையும்,மணம் செய்து கொள்ளாத பெரியம்மாவும், உண்டு,பக்கத்தில் இருக்கும் வீடுகளின் ஒன்றில் திருமதி ரோஜர்ஸ் என்னும் கிழவியும்,அடுத்த வீட்டில் இளம் மனைவி இவலினும்,அவளது கணவனும்,அவர்களின் அழகிய மகள் சிறுமி ஜேனும் வசிக்கின்றனர்.


ஜோவும் நண்பன் பூட்டும்[boot] அவ்வூரில் இணை பிரியாமல் சுற்றித் திரிகின்றனர், வீடியோ கேம் ஆடும் கடையிலும், ஊருக்கு அருகே இருக்கும் குட்டையில் மீன்பிடித்த வண்ணமும், இருக்கின்றனர்.அவ்வப்போது சினிமாவுக்கும் போய் வருகின்றனர். ஜோவின் நண்பன் பூட்டுக்கு சிறு வயதிலேயே எபிலிடிக் ஃபிட்ஸ் என்னும் வலிப்பு வந்துள்ளது, ஆயினும் அவன் மிகவும் ஆரோக்கியமாகவே காணப்படுகிறான், இப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் இவலின் கணவனுடனான தாம்பத்தியத்தில் அதிருப்தியுற்றவள், இளைஞனாக பார்த்து வளைத்துப்போட அலைகிறாள், ஆனால் அவளின் எண்ணம் ஜோவின் வீட்டாருக்குத் தெரியவில்லை,ஜோவின் வீட்டுக்கு அடிக்கடி வரும் இவாலின் ஜோவை முத்தம் தந்தும் தரவும் பழக்குகிறாள், தன் வீட்டுக்கு வரச்சொன்னவள் ஒரு சமயம் அவன் வந்து  விட, முயங்க எத்தனிக்கையில் கணவன் திரும்பி வேலையில் இருந்து வர, இவனை அவசரமாக வெளியேற்றுகிறாள். பின்னொரு நாள் வரப்போகும் வாய்ப்புக்காக காத்திருக்கிறாள்,

தே ஊரைச்சேர்ந்த ரூத் என்னும் சக வயதிலிருக்கும் பெண்ணை ஜோ சந்தித்தவன், அவளுடன் நட்பை  வளர்த்துக் கொள்கிறான், அவளுக்கும் இவனுக்கு ரசனை ஒத்துப்போகின்றது, முதல் நாள் சந்திப்பிலேயே அவளின் அனுமதி பெற்று முத்தமிட்டவன், மறு நாள் சந்திக்க அனுமதி கேட்க, அவளும் 7-00 மணிக்கு வீடியோ கேம் பார்லருக்கு வரச் சொல்லுகிறாள், மறுநாள் மிகவும் ஆனந்தத்துடன் குளித்து, எல்விஸ் ப்ரெஸ்லீ போன்றதோர் அட்டைகளை அணிந்துகொண்டு புறப்படத் தயாராகிறான் ஜோ, அவன் அம்மாவிடம் விடைபெற்றுப்போகின்றான், அவனின் அம்மா அவனுக்கு அந்த நாள் [டேட்டிங்] நல்லபடியாக நிகழ வாழ்த்துகிறாள். வெளியே கடலலைகள் மிகுந்த சீற்றத்துடன் ஆரவாரம் செய்கின்றன, பலத்த மழை பெய்யும் அறிகுறியும் தெரிகிறது, ஜோ போகும் வழியில் வீட்டு வாசலில் இவாலினை பார்க்க, அவள் ஜோவை ஒரு ஐந்து நிமிடம் வந்துபோ என்கிறாள்,

வன் டேட்டிங்கிற்கு போகிறேன் என்று சொல்லியும் கேளாமல், பெண்ணை காக்க வைப்பது நன்மை பயக்கும் என்று அறிவுறையும் கூறுகிறாள், வீட்டுக்குள் கூட்டிப் போனவள் அவனுடன் வெறியுடன் முய்ங்குகிறாள். எதோ ஒரு உள்நோக்கத்துடன் அவனின் கழுட்தில் பற்களால் கடித்து பற்குறி வரவழைக்கிறாள், இவன் கூடி முடித்ததும் அவளை வீடியோ கேம் பார்லரில் சென்று பார்க்கிறான், தன் அம்மாவுக்கு உதவியதால் வர தாமதானது என்று ரூத்திடம் உளறுகிறான், ஆனால் ரூத் இவனின் கழுத்தில் இருக்கும் களவி பற்குறிகளை கண்டவள், வெகுண்டெழுகிறாள், அகன்றும் விடுகிறாள், கூடவே அவனது நண்பன் பூட் இருக்க, ஜோவின் கோபம் அவன் மேல் திரும்புகிறது, பூட் தான் தன்னைப் பற்றியும் தன்னை பக்கத்துவீட்டு இவாலின் முயங்க எத்தனிப்பதையும் ரூத்துக்கு சொல்லியிருக்கக்கூடும் என சந்தேகிக்கிறான். அவனை அடிக்கவும்ஆரம்பிக்க,அவன் திருப்ப தாக்க, இவர்களின் நட்பு முறிந்து விடுகிறது. அன்று தான் அவனை ஜோ அதன் பின்னர் சந்திக்கவேயில்லை.

வீட்டுக்கு கொட்டும் மழையில் நனைந்தபடியே வருகிறான் ஜோ, மறுநாள் வீட்டின் வெளியே கால்பந்தாடிய படி இருக்கும் ஜோவை, இவாலின் பார்க்கிறாள், டேட்டிங் எப்படி நடந்தது? என்று குறுகுறுப்பாக கேட்டவள், அவன் தன் கழுத்தை காட்டி, இந்த பற்கடிகளால் என் காதலி என்னை விட்டுப்போய்விட்டாள், திருப்தியா? என்கிறான், ஜோவை சமாதானப்படுத்திய இவாலின், நான் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை, நீ நன்றாகவே என்னை திருப்திபடுத்திய உற்சாகத்தில் என்னையும் மீறி அப்படி கடித்து வைத்து விட்டேன், என்னை மன்னித்துவிடு, என் வீட்டுக்கு வருகிறாயா?!!! கணவன் வேலைக்கு போயுள்ளான் என மீண்டும் மாய வலை விரிக்கிறாள்.

ஜோவும் உடன் செல்ல, அங்கே அறைக்குள் தொலைக்காட்சி பார்க்கும் மகள் ஜேன்னை தன் இழிசெயலுக்கு இடைஞ்சலாக வீட்டுக்குள்ளே இருக்கிறாள் என்ற காரணத்துக்காக அவளை எந்நேரமும் தொலைக்காட்சி பார்க்காதே!!!, போய் விளையாடு என்று, அவள் மறுக்க ,மறுக்க ,கதவை திறந்து வெளியேற்றுகிறாள். பின்னர் வெறியுடன் ஜோவை புணர ஆரம்பிக்கிறாள். அவள் இளைஞன் ஜோவை ஆதர்ச புருஷனாகவே வரித்துக் கொள்கிறாள். வெளியே கடற்கரையில் விளையாடிக்கொண்டிருக்கும் ஜேன் கடற்கரையில் முந்தைய நாள் இரவு மழையில் கரை ஒதுங்கிய ஒரு நீர் மிதவை கண்ணி வெடியை கண்ணுறுகிறாள், அது பார்க்க ஒரு ராட்சதப்பந்து போல இருக்க அதன் மேலே சிரமப்பட்டு ஏறியும் விடுகிறாள், அது தலையாட்டி பொம்மை போல ஆட, மகிழ்ச்சி கொள்கிறாள், தூரத்தில் இதைப் பார்த்த திருமதி ரோஜர்ஸ் என்னும் பக்கத்து வீட்டு கிழவி, பதட்டம் கொள்கிறாள், ஜேன் இறங்கு!!! எனக் கதறுகிறாள், ஜேனுக்கோ எப்போதும் திட்டும் அந்த பாட்டி, மைன் மைன் என்று கத்துவதை, என்னுடையது இறங்கு இறங்கு என அர்த்தம் கொண்டவள், இறங்காமல் வீம்பாக இது என்னுடையது!!! என்று இன்னும் பலமாக ஆட,அந்த கண்ணி வெடியின் பூட்டு விடுவிக்கப்பட்டு பலத்த சத்தத்துடன் வெடிக்கிறது,

வீட்டினுள்ளே ஆவேசத்துடன் முயங்கிக் கொண்டிருக்கும் ஜோவும் இவாலினும் திடுக்கிடுகின்றனர், திருமதி.ரோஜர்ஸ் ஜேன் கண் முன்னே வெடித்து சிதறியதை கண்டவர் மிகவும் கதறுகிறார், சிற்றூரில் இருக்கும் அனைவரையுமே இச்சம்பவம் நிலை குலைக்கிறது, எல்லோரும் வெடித்த இடத்துக்கு வந்து பார்க்க,இவாலினும் அவள் பின்னர் ஜோவும்  அதிர்ச்சியுடன் ஓடிவருவதை ஜோவின் பெரியம்மா பார்த்து விடுகிறாள், அவளால் ஜோ  இவாலினுடன் என்ன செய்து கொண்டிருந்தான் என கிரகிக்க முடிகிறது. அவனை நோக்கி திருமதி,ரோஜர்ஸை  வீட்டுக்கு கூட்டிச்செல் என்று அதட்ட மட்டுமே முடிந்தது பெரியம்மாவால்.அந்த சிறுமி ஜேனின் சாவு.அன்று எவ்வளவு தேடியும் ஜேனின் சடலமோ எலும்போ யாருக்கும் கிடைக்கவில்லை, கப்பலையே தகர்க்க கடற்படையால மிதக்கவிடப்படும் கண்ணி வெடியாயிற்றே?!!!இவாலின் ஜோவின் அம்மாவிடம் கதறுகிறாள், ஜேன் பிறந்தது முதலே தன்னிடம் வரமாட்டாள்,தான் தூக்கினால் அழுவாள்,அவளுக்கு எப்போதுமே அப்பா தான் பிடிக்கும்,தன்னை கடைசி வரை வெறுத்தாள் ஜேன்,இப்போது ஜேனின் சாவுக்கு அவளின் கணவன் தன்னை தான் குற்றம் சுமத்துவான், என உடைந்து அழுகிறாள்,இவற்றை மிகுந்த குற்ற உணர்வுடன் பார்க்கிறான் ஜோ,அவனால் இயல்பான வாழ்க்கையை இதே ஊரில் வாழமுடியும் என்று தோன்றவில்லை, வீட்டை விட்டு வெளியேறியவன், லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கிறான், அங்கே வைத்து சினிமாவில் மிகுந்த போராட்டத்துக்கு பின்னர் சாதித்தவன்,அங்கிருந்த படியே தன் வீட்டாருக்கு ஆற்றவேண்டிய கடமைகளை ஆற்றி வருகிறான், பின்னர் அவனின் அம்மா மூலம் ரூத்துக்கும் பூட்டுக்கும் மணமானது என்று மட்டும் அறிந்திருக்கிறான்.

ப்போது இருபத்தி ஐந்து வருடத்துக்கு பின்னர் தன் சொந்த ஊருக்குப் போக  அவனுக்கு விருப்பமாயிருக்கிறது. வீறு கொண்ட ஜோ கடலின் கோர அலைகளினூடே இருந்து வெளியேறுகிறான், அங்கிருந்து வீடு வந்தவன் விமானம் பிடித்து சொந்த ஊரும் வருகிறான், இப்போது அம்மாவும் பெரியம்மா, அவன் தங்கை மூவரும் இவன் புதிதாக கட்டித்தந்த வீட்டில் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறான். இப்போது தான் வீட்டையும் நேரில் பார்க்கிறான். வீட்டில் பூட்டின் சாவுக்கு பெண்கள் இறந்தால் கிடைக்கக்கூடிய பொக்கேக்களை விட நிறைய பொக்கேக்கள் குவிந்தது என்கின்றனர். பூட் ஒரு நல்ல தந்தை , அவனின் முதல் மகனுக்கு 15 வயது, அவனின் பெயரும் ஜோ என்றும் அறிகிறான், அது தவிர பூட்டுக்கு 2 மகனும், ஒரு மகளும் உண்டு , கடன்களும் கட்டுக்கடங்காமல் உண்டு, அதனால் அவனது வீடும் நிலமும் கூட எந்நேரமும் ரூத்தின் கையை விட்டுப்போகக்கூடும், அதன் பின் ரூத் என்ன செய்வாள்?!!! என்றே தெரியவில்லை என்றறிகிறான்,

றுநாள் நண்பன் பூட்டின் வீட்டுக்கு துக்கம் கேட்கச் செல்கிறான் ஜோ, அதே வீட்டுல் தான் ரூத்துக்கும் ஜோவுக்கும் முதல் நாள் டேட்டிங் செய்தனர்.இசைகேட்டனர். ரூத் ஜோவுக்கு ராக்ஸி என்னும் இசைக்குழுவின் பாடகன் போல ஆடை அணிவித்து,பின்னர் ஆடியும் மகிழ்ந்தது நினைவுக்கு வந்தது,இவனுக்குள் என்னவோ செய்கிறது.ரூத் தன்னுடைய மனைவியாக இருக்க வேண்டியவள் என்னும் ஆதங்கமும் எழுகிறது. அங்கே உள்ளே செல்ல தயங்கி தங்கையை அனுப்ப,அவள் ரூத் ,பூட்டின் கல்லறையில் வந்த பூங்கொத்துக்களில் இருக்கும் அனுதாப அட்டைகளை எடுத்து வர சென்றிருக்கிறாள்,என சொல்ல ,இருவரும் கல்லறைக்கே செல்கின்றனர், தங்கை ஜெஸ்ஸி அவளின் தோழி ஜேனின் கல்லறைக்கு பூங்கொத்து வைக்க செல்கிறாள், அங்கே இன்னொரு பகுதியில் ரூத்தை 25 வருடம் கழித்து பார்க்கிறான் ஜோ, ஜோவுக்கு மிகுந்த குற்ற உணர்வு,ஆனால் ருத் ஜோவிடம் நன்றாக பேசுகிறாள்,தான் பூட்டை மிகவும் நேசித்ததாகச் சொல்லுகிறாள். முரணாக அவளால் வாழ்வின் பெரிய துக்கத்துக்கு தன்னால் அழமுடியவில்லையே?!!! என்றும் வெடிக்கிறாள்.ஜோ, அவளிடம் ஏதேனும் உதவி தேவைப்படுமா? எனக்கேட்க அவள் அடியோடு மறுக்கிறாள். இவன் 3 நாட்கள் தாமதமாக வந்தமைக்கு மன்னிப்பு கேட்டு அகல்கையில். ரூத், நண்பனின் சவ அடக்கத்துக்கு கூட ஜோ 3 நாள் தாமதமாக வந்ததற்கு பூட்டின் ஆவி கூட சிரித்திருக்கும் என்று சிரிக்கிறாள்.

ங்கை ஜெஸ்ஸியுடன், நீர் கண்ணி வெடி வெடித்து உயிரிழந்த ஜேனின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த, அருகே அவளின் அம்மா இவாலினின் கல்லறை இருக்க திடுக்கிடுகிறான், ஜெஸ்ஸியிடம் ஆர்வமாய் என்ன நடந்தது?!!! எனக்கேட்டவன் உறைகிறான், ஜேன் இறந்த பின்னர் இவாலின் வேறொரு இளைஞனுடன் கள்ள உறவில் ஈடுபட்டதை அவளது கணவன் பார்த்து விட்டவன், அவளை பிரிந்தும் விட்டிருக்கிறான், அவளோ குற்ற உணர்வே இன்றி வயதில் சிறிய ஒரு எமகாதகனான அந்த இளைஞனையே திருமணமும் செய்திருக்கிறாள், அவன் அவளை மெல்ல சித்திரவதைகளால் சாகடித்த வண்ணம் இருந்திருக்கிறான், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அவனின் காரை திருடிக்கொண்டு போனவள்,கார் நடு ரோட்டில் பழுதாயிருக்க, ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி தலை துண்டாடப்பட்டும் இறந்தாள் என அறிகிறான். உள்ளே சமாதியில் முண்டம் மட்டுமே அடக்கம் செய்யப்பட்டது , தலையை எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை, தலையை அந்த காட்டுக்குள்ளே ஒரு நரி தூக்கிக்கொண்டு போய் தின்றும் விட்டதாக போலீஸ் பின்னர் சொன்னது என்று கண்கள் விரிய விவரிக்கிறாள் ஜெஸ்ஸி, இவனால் அந்த இடத்தில் நிற்கக்கூட  முடியவில்லை, இவாலின் ஓர் ஊர் மேயும் பேர்வழி, இழிவர்க்கம், அவளுக்காக இனி வருந்தவேண்டாம் என்று அன்றே முடிவெடுக்கிறான் ஜோ.

ன் வீட்டுக்கு சென்றவன் நண்பன் பூட்டின் கடன்களை அடைக்க முடிவெடுக்கிறான், இதன் மூலம் தன்னுடைய நண்பனுக்கு உதவியும், தன்னுடைய குற்ற உணர்வை சிறிதளவேனும் களைய முடியும் என்று நினைக்கிறான். ,ரூத்துக்கும் இவனுக்குமான முதல் நாள் டேட்டிங்கின் போது அவர்கள் வீட்டில் கேட்ட ராக்ஸி என்னும் இசை குழுவின் பாடலில் இருந்து ஒரு பாடலின் பகுதியை கடிதமாக எழுதுகிறான்,மிகப்பெரிய தொகைக்கான காசோலையையும் அதனுடன் இணைக்கிறான்.தன் தங்கையிடம் கடிதத்தை கொடுத்து விட்டு அகல்கிறான் ஜோ.அவன் விமானத்தில் பயணிக்கையிலேயே அவனின் மனம் மிகவும் லேசானதாக உணர்கிறான்,தன்னால் மீண்டும் தலையெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உத்வேகம் விதையாக விழுந்திருப்பதாக நினைக்கிறான்,தன் நண்பன் பூட்டுக்கு உதவியதன் மூலம் தனக்கே இவன் உதவிக்கொண்டதாக நினைக்கிறான்,விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கும் உதவியாளப்பெண்ணை புதுப்பொலிவுடன் சென்று சந்திக்கிறான் ஜோ,வீட்டுக்குச் செல்கையிலேயே எதிர்கால திட்டங்களை பேசிய வண்ணம் செல்வது போல படம் முற்றுப்பெறுகிறது,நம்பிக்கை விதையை நம்முள்ளே விதைக்கும் ஒரு ஒப்பற்ற படம்.

திரைப்படத்தின் காணொளி யூட்யூபிலிருந்து:-

திரைப்படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Baillie Walsh
Produced by Lene Bausager
Written by Baillie Walsh
Starring Daniel Craig
Harry Eden
Claire Forlani
Felicity Jones
Eve
Emilia Fox
Jodhi May
Miriam Karlin
Music by Richard Hartley
Cinematography John Mathieson
Editing by Struan Clay
Studio Left Turn Films
Ugly Duckling Films
Visitor Pictures
Distributed by Walt Disney Studios Motion Pictures (UK)
Anchor Bay Entertainment
Release date(s) April 13, 2008 (2008-04-13)
Running time 114 minutes
Country United Kingdom
Language English
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)