கே.பாலசந்தரின் நூல்வேலி மற்றும் குப்பெடு மனசு திரைப்படங்கள் [1979]


இயக்குனர் பாலசந்தரின் நூல்வேலி[1979] படத்தில், பள்ளி மாணவி சரிதாவுக்கு நிழல் ஆட்டத்தில்[shadow play] மிகுந்த ஆர்வம் உண்டு,படத்தின் டைட்டில் ஸ்க்ரோலில் ,அவரது பள்ளி விழாவில் நிழல் ஆட்ட நிகழ்ச்சி செய்வார்.

அங்கே இந்த விதவிதமான மிகுந்த நகைச்சுவையான உருவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும், சரிதாவின் கைகளுக்கு டூப் போட்ட நிழல் வித்தை கலைஞர்களான எம்.கே.ரகு பெங்களூர்,மற்றும் பர்கோலக்ஸ் ராதாகிருஷ்ணன் மும்பை,இருவருக்கும் க்ரெடிட் கொடுத்திருப்பார் இயக்குனர் பாலசந்தர்.சுமார் 7 நிமிடங்கள் வரும் இக்காட்சியை இங்கே பாருங்கள்.
http://www.dailymotion.com/video/xrgtib_noolveli_shortfilms

இதே போன்றே 1977ஆம் ஆண்டு வெளியான அவர்கள் படத்தில் கமல்ஹாசனை ஒரு வெண்ட்ரிலோகிஸ்ட்டாக அவரது ஜூனியர் பொம்மையுடன் தோன்ற வைத்திருப்பார்,இருமனம் கொண்ட திருமண வாழ்வில் பாடலில் கமல் ஹாசன் தன் முழு வித்தையையும் ஜூனியர் பொம்மை வழியே இறக்கியிருப்பார்.இதற்கான பயிற்சியாளர் உதவி கிடைக்காததால் பொம்மையையும் புத்தகத்தையும் மட்டும் தருவித்த கமல்ஹாசன் ஒரு மாதம் நீண்ட பயிற்சிக்குப் பின்னர் அதை சாதித்தாராம்.

1972ஆம் ஆண்டில் டெல்லி தூர்தர்ஷனில் Ramdas Padhye என்பவர் பப்பட்டியர் ,வென்ட்ரிலோகிஸ்ட் நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்,சில இந்திப்படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்,அதை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு பாலசந்தர் தன் அவர்கள் படத்தில் கமல்ஹாசனை வென்ட்ரிலோகிஸ்டாக தோன்ற வைத்தார்.

http://en.wikipedia.org/wiki/Ventriloquism
http://en.wikipedia.org/wiki/Ramdas_Padhye

நூல்வேலி படத்தில் எம்.எஸ்.வி இசையில் பாலமுரளிகிருஷ்ணா பாடிய மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே என்ற கவிஞர் கண்ணதாசனனின் தத்துவப் பாடல் ஒரு மாஸ்டர்பீஸ். அப்பாடலை இங்கே பாருங்கள்,நம்மை நம்பும் ஒருவருக்கு துரோகம் செய்து கொண்டிருப்பவர்களை சுய விமர்சனம் செய்து கொள்ள வைக்கும் கவிஞரின் பாடல் வரிகள்.

மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே (2)
ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி (2)
காரியம் தவறானால் கண்களில் நீராகி
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
மனசாட்சியே

ரகசியச்சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ (2)
சோதனைக்களம் அல்லவா?
நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா?
ஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே
ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே (2)

(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)

உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி (2)
யாருக்கும் நீயல்லவா
நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா
ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ (2)
(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே

https://www.youtube.com/watch?v=JMTJEFBkRnY
வாணிஜெயராம், எஸ்.பி.பி பாடிய வீணை சிரிப்பு ஆசை அழைப்பு பாடலும் அருமையான ஒரு டூயட் பாடல்.அப்பாடலை இங்கே பாருங்கள்
https://www.youtube.com/watch?v=yPA2hBFLGic 
வாணிஜெயராம், எஸ்.பி.பி பாடிய நானா பாடுவது நானா,நானும் இளவயது மானா என்னும் பாடலும் மிக அருமையான ஒரு மாண்டேஜ் பாடல்.
அப்பாடலை இங்கே பாருங்கள்
https://www.youtube.com/watch?v=aszzDKEJ8xw
எஸ்.பி.பி. அவர்கள் பாடிய தேரோட்டம் ஆனந்த செண்பகப் பூவாட்டம் என்ற டூயட் பாடல் ரேர்ஜெம் வகையறா.அதில் எதிரொலி மிக நுட்பமாக பயன்படுத்தப்பட்டிருக்கும்,கவிஞரின் காதல் வரிகளை அதில் உற்று கவனியுங்கள்.
https://www.youtube.com/watch?v=fcgA0kn8PNU
இப்படம் குப்பெடு மனசு என்ற பெயரில் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் வெளியானது. படத்தின் ஒளிப்பதிவு ரகுநாதரெட்டி.இது வண்ணப் படமும் கூட,இப்படத்தை கலாகேந்திரா பேனரில் தயாரித்திருப்பார் இயக்குனர் பாலசந்தர்.
நூல்வேலி 20 வருடங்கள் தொலைநோக்காக சிந்தித்து வந்த படம். இப்போது பார்த்தாலும், இதன் வசனங்களும், காட்சியமைப்புகளும் வியக்க வைக்கும். படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் கட்டமைப்பும் ஒரு தேர்ந்த சிறுகதையைப் படித்தது போல இருக்கும்.

இதில் சுஜாதா எழுத்தாளர்,சினிமா சென்சாரில் தணிக்கை அதிகாரியும் கூட. மிக முக்கியமான கதாபாத்திரம். இவரின் கணவர் சரத்பாபு. ஒரு மகளும் உண்டு.

படத்தினூடே சென்சாரில் நிலவும் எழுதப்படாத விதிமுறைகளை நகைச்சுவையாக ஒரு பிடி பிடித்திருப்பார் இயக்குனர்.இன்று இது போல சென்சார் விதிமுறைகளை விமர்சித்து படம் எடுத்தால் கூட அனுமதிப்பரா?சந்தேகம் தான்.ஆனால் 35 வருடங்களுக்கு முன்பே சாதித்தார் இயக்குனர்.

இவர்கள் புதிதாய் வீடு மாற்றிக் கொண்டு போகுமிடத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் முன்னாள் நடிகையின் குறும்புக்கார மகள் சரிதா, அவரின் குறும்பான நகைச்சுவையால் கவரப்பட்ட இத்தம்பதியினர், அவரை தங்கள் வீட்டில் மூத்த மகள் போலவே உரிமை தருகின்றனர்.

இதில் சியாமளா என்னும் சினிமா உலகம் மறந்து போன நடிகையை மீள் அறிமுகம் செய்திருப்பார் இயக்குனர்.நீண்ட நாட்கள் கழித்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததை எண்ணி குதூகலித்தபடியே அதிகாலை சீக்கிரம் விழிக்க அலாரம் வைத்து உறங்கிய அந்த முன்னாள் நடிகை எழுந்திருக்கவே மாட்டார்.

ஆனால் கூடாக்காமம் என்பது நேரம் காலம்,சபை நாகரீகம் எல்லாம் பார்த்து வருவது கிடையாது.அதற்கு ஆண் பெண் என இருவரின் மனத்தடுமாற்றம் காரணமாகி காமம் அரங்கேறினாலும்,சமூகத்தில் பாதிக்கப்படுவது பெண் தான், ஏனென்றால் அவளுக்குத் தானே காலம் காலமாக கற்பு என்ற கண்ணுக்குத் தெரியாத வஸ்துவை உருவகப்படுத்தியிருக்கின்றனர்.

அவளுக்குத் தானே கர்ப்ப பாத்திரம் இருக்கிறது,அதைத் தானே பிணையாக வைத்து சாஸ்திரப் போர்வையில் அரசியல் நடத்துகின்றனர்.அதை மிக அருமையாக இப்படத்தில் விமர்சித்திருப்பார்.இதே போன்றே ஆணின் வக்கிரத்துக்கு பலியாகும் பெண்களின் கதையை தன் மூன்று முடிச்சு,ஒரு வீடு இருவாசல், அவள் ஒரு தொடர்கதை,சிந்து பைரவி[மணிமாலா] உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து விமர்சித்திருந்தார்.

இயக்குனர் பாலசந்தர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு லைம் லைட்டில் இருந்து மறைந்து போன எத்தனையோ நடிகைகளை மீள் அறிமுகம் செய்திருக்கிறார்,இதில் வரும் ஒரு நடிகையும் அப்படி வழக்கொழிந்து போனவர் தான், தன் மகள் சரிதாவின் அரசியல் பிரமுகர் அப்பா இனிஷியல் தெரிந்தும் அதை தன் மகளுக்குப் பயன்படுத்த முடியாத இக்கட்டான கதாபாத்திரம்.கமல்ஹாசன் இப்படத்திலும் நடிகராகவே வருவார்,கௌரவ வேடம். அக்னிசாட்சி,பொய்க்கால் குதிரை போன்ற படங்களில் அவர் நடிகராகவே தோன்றியுள்ளார்.
இப்படத்தின் முக்கிய விவாதப் பொருள் கூடாக்காமம்,அல்லது காமப்பசி.கூடாக்காமம் என்பது நேரம் காலம்,சபை நாகரீகம் எல்லாம் பார்த்து வருவது கிடையாது.அதற்கு ஆண் பெண் என இருவரின் மனத்தடுமாற்றம் காரணமாகி அங்கே காமம் அதிரடியாக அரங்கேறினாலும், அதனால் சமூகத்தில் பாதிக்கப்படுவது பெண் தான், ஏனென்றால் அவளுக்குத் தானே காலம் காலமாக கற்பு என்ற கண்ணுக்குத் தெரியாத வஸ்துவை உருவகப்படுத்தியிருக்கின்றோம்.

அவளுக்குத் தானே கர்ப்ப பாத்திரம் இருக்கிறது,அதைத் தானே பிணையாக வைத்து சாஸ்திரப் போர்வையில் அரசியல் நடத்துகின்றோம்.அதை மிக அருமையாக இப்படத்தில் விமர்சித்திருப்பார் இயக்குனர்.இதே போன்றே ஆணின் உக்கிரமான காமப்பசிக்கு பலியாகும் பெண்களின் கதையை தன் மூன்று முடிச்சு,ஒரு வீடு இருவாசல், அவள் ஒரு தொடர்கதை,சிந்து பைரவி[மணிமாலா கதாபாத்திரம்] உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து விமர்சித்திருந்தார்.அவரை ஃபெமினிஸ்ட் என்று ஏனையோர் ஒரே சொல்லில் ஒதுக்கினாலும் அவர் பின்வாங்கியதேயில்லை.

நூல்வேலி எழுத்தாளர் ஷெரிஃப்ஃபின் மூலக்கதை,அதை உரிமை வாங்கி திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார் பாலசந்தர்.
இப்படம் பற்றி இன்னும் விரிவாக ஒரு கட்டுரை வரும்
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)